/* */

ஒரு வரியில் சொல்லலாம்... வாழ்க்கை தத்துவங்களை!

One Line Quotes in Tamil-வாழ்க்கை தினம் தினம் கற்றுத்தரும் அனுபவ பாடங்கள் ஏராளம். அதை உணர்வது மட்டுமின்றி, அதை மற்றவர்களுக்கும் சொல்வது, நல்ல வழிகாட்டுதலாக அமையும்.

HIGHLIGHTS

One Line Quotes in Tamil
X

One Line Quotes in Tamil

One Line Quotes in Tamil

வாழ்க்கை என்பது, சிக்கல்கள் நிறைந்தது. மின்னல்களாக மகிழ்ச்சிகள் அவ்வப்போது தோன்றினாலும், இடி, மழை போலவே வாழ்க்கையில் துன்பங்களும், கவலைகளும் நீடிக்கின்றன. மனிதர்களுக்கு தினந்தோறும் பலவிதமான அனுபவ பாடங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றை ஒரு வரி தத்துவங்களாக, இங்கு பரிமாறப்பட்டு இருக்கின்றன.

அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல...!

தேடலின் மதிப்பு கிடைக்கும் வரைக்கும் தான்...

அறியாத வயசு, அறிய வைத்தது பசி

எதையும் விட்டு விடாதே, கற்றுக் கொள்...!

ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கை வாழ...

பொம்மையும் உயிர் பெற்றதே, குழந்தைகளிடம் மட்டும்

கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்

வாழ்க்கை சொர்கமாவதும், நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே

அழுகை கூட அழகுதான், குழந்தைகளிடம் மட்டும்

நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை, வாழ்க்கை நம்வசம்

நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின் உச்சம்

கணத்தில் உதித்த புன்னகையால், மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்)

போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்...!

எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது

அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே

கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்கிறது

மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதி போயிரும்...!

எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...!

பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு; கூட இருந்து குழிபறிக்காதே

வாய்ப்புகளை தேடி அலையாதே, வாய்ப்புகளை உருவாக்கு...!

கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால், அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே

ஊடல் இல்லையெனில் காதலும் கசக்கும்

ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே...!

இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)

பிடிவாதத்தை எரித்துவிடுவோம், இல்லம் மற்றும் உள்ளம் மகிழ்சியாயிருக்க...!

அப்பாவின் அமைதி, மொத்த தைரியத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது

சேமிப்பு இல்லையென்றால், உழைப்பும் வீணே

தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ, தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்

நாட்டமிடுகிறது குழந்தையின் அழகை கண்டு நாற்று...!

எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஆறுதல், நம் நம்பிக்கை மட்டுமேகற்றுத்தெளிவது கல்வி; அறிந்து தெளிவது அறிவு

வறுமைக்கு பிறகு வரும் செல்வமே, வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்

கலப்படம் இல்லாத புன்னகை குழந்தைகளிடம் மட்டுமே

யோசித்துப்பார்... நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்

தேடலில் தொடங்கி, எதையோ தேடித் தேடியே முடிகிறது வாழ்க்கை

வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது...!

மழலையாய் மனதை வைத்திரு; கவலைகளும் தீண்டாது

நினைப்பதை சரியாக நினைத்தால், நடப்பதும் சரியாகவே நடக்கும்

வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை

எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு

மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்

நமக்கும் சேர்த்தே வேண்டிக்குற அந்த மனசுதான், கடவுள்

ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே, எவ்ளோ போராட வேண்டியிருக்கு

கொடுப்பதை வாங்கிக்கொள்; முடிவை தெளிவாக எடு

ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்

சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது

ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது; அவர் நமக்கு செலவிட்ட நேரம்

ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்

வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்

குழந்தைகளின் அறியாமை மிக அழகு

நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது

ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்

சூழல்கள் மாற்றத்தால், சூழ்நிலை மாறும்

எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே

கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை

பிடித்ததை செய்வோம்; இந்த வாழ்வை ரசித்து வாழ்வோம்

சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை

நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு

நேசங்கள் மெய்யானபின் வேசங்களுக்கு வேலையே இல்லை

சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்ப்பில்லா வரம் தான்

வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி புன்னகை

பாசம் கூடினாலும் பாரம் குறைந்தாலும் பாரம்

சரினு பட்டா விட்டுக்கொடு தப்புனு பட்டா தள்ளி நில்லு

வாழ்க்கையில் பொறுமை உள்ளவனே பெரும் பாக்கியசாலி

தாய் மடியைக் காட்டிலும் ஒரு சிறந்த தலையணை இந்த உலகில் இல்லை

உன்னை நீயே நம்பு; உலகை வெல்ல அது தான் தெம்பு

அன்பின் செடியில் என்றும் புன்னைகைப் பூக்கள் மட்டுமே மலரும்

விடியல் என்பது கிழக்கில் அல்ல; நம் உழைப்பில்

விலையில்லாத அன்பும் புன்னகையும் யாரிடமிருந்தும் விலகி செல்வதில்லை

நான் என்பது பல சமயங்களில் தலைக்கனம் சில சமயங்களில் தன்னம்பிக்கை

மனதோடு அழ பழகிக்கொள் கண்ணீரும் அடங்கிவிடும்

இருந்தால் நிஜமாயிரு இல்லயேல் நிழல் என்று கூறி மறைந்துவிடு

தொலைதலும் சுகமே, தேடல் விருப்பமெனில்

பரிகாசங்களை விட பரிதாபமே நம்மை பலவீனப்படுத்தும்

ஏமாளிகள் என்றுமே நம்பிக்கைக்கு உரியவர்கள்

சொல் மட்டுமல்ல, சிலரின் செயல்களும் கொல்லும் மனதை

நாம் பழகும்விதமே நம்மை விரும்ப செய்யும்

மனிதர்களின் உயரம் என்பது அவரவர் மனதை பொறுத்தது

வாழவும் சொல்லும் சாகவும் சொல்லும் காதல்

எதிரி நண்பன் என்று தெரிந்தால் கடைசி நொடிவரை போராடு

வார்த்தைகளால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவது சிறப்பு

நம்பிக்கையில் கிடைக்கும் மன நிறைவு வேறெதிலும் கிடைப்பதில்லை

அடுத்த நொடி எதுவும் நடக்கலாம்; கிடைத்த நொடியில் ரசிப்போம் வாழ்க்கையை

திணிக்கப்படும் எதுவும் ரசிக்கபடாது; வேறு வழியின்றி மனம் ஏற்றுகொள்ளுமே தவிர

வாழ்க்கையை ரசிச்சுட்டு போங்க.. இங்க எதுவுமே நிரந்தரம் இல்லை

நிபந்தனைகளுக்குட்பட்டு இருக்கும் நட்பு நிரந்தரமானதில்லை

காலம் மட்டுமே மாறும்; நினைவுகள் ஒரு போதும் மாறாது

அதிகாரத்தால் விலைக்குவாங்க முடியாததில் முதன்மையானது அன்பு

கனவாகவே போகட்டும் காயம்பட்ட காலமெல்லாம்

சம்பவங்கள் சரித்திரமாவது நியதி; சரித்திரங்கள் சம்பவமாவது அநீதி

கோபம் கூட நேசிப்பவர்கள் மேல் தான் அதிகம் வருகிறது

தொலைவை கடப்பதற்குள், தொலைந்து போகிறது வாழ்க்கை

உனக்கான வாழ்க்கையை நீ எழுது வாழ்க்கை உனக்கானதாய் மாறும்

நினைத்த ஒன்று நினைக்காத நேரத்தில் கிடைப்பதென்பது பேரழகு

கடந்த பாதை வலிகள் தந்ததால் செல்லும் பாதை வழியாக மாறியது

இழப்புகள் மட்டுமே நிரந்தரம்; எதிர்பார்ப்பில்லாமல் வாழ்வதே நலம்

சிரிப்பே மூலதனம் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்

விரும்பாமலும் வரும் உறவு விரும்பினால் மட்டுமே வரும் நட்பு

அன்பெனும் பிடிக்குள் அகப்படும் முன் அனைவரும் பலசாலிகளே

துன்பங்களை சகித்துக் கொள்ளாத வாழ்க்கை இனிமையாக அமைவதில்லை.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 6:35 AM GMT

Related News