/* */

காலத்தின் .கோலம்.! மாயமாகிப்போன ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு..!

Janavasam-தமிழகத்தில் திருமணம் என்றாலே குறைந்த பட்சம் 3 நாட்கள் நடக்கும். காலத்தின் கோலத்தால் பாரம்பரிய சடங்குகள் சுருங்கி பண்பாடுகளும் மறைந்து போய்விட்டன.

HIGHLIGHTS

காலத்தின் .கோலம்.! மாயமாகிப்போன  ஜானவாசம், மாப்பிள்ளை அழைப்பு..!
X

janavasam-திருமணம் (மாதிரி படம்)

Janavasam- ''கெளரி கல்யாண வைபோகமே'' என்ற பாடல் அனைத்து திருமணத்திலும் ஆரத்தி எடுக்கும்போது பெண்களால் பாடப்படும் பாடலாக இன்றளவில் இடம்பெற்று திகழ்கிறது. இருப்பினும் தற்காலத்தில் நடக்கும் கல்யாணங்களிலும் இந்த பாடல் மட்டுந்தான் காலத்தால் மாறாமல் இடம்பெறுகிறதே ஒழிய மற்ற கலாசார நிகழ்வுகள் மாயமாகிப்போயுள்ளது.

3 நாட்கள் கோலாகல திருமணம்

அந்த காலத்தில் கல்யாணம் என்றாலோ எல்லோருக்கும் கொண்டாட்டந்தான். வீட்டின் முன்பாக முகூர்த்தக் கால்நட்டு தென்னை ஓலையில் பந்தலிட்டு பந்தல் முழுவதும் மாவிலைத்தோரணங்கள் கட்டி,வாசலின் இருபுறமும் தழைய தழைய குலையுடன் கூடிய வாழை மரங்களைக் கட்டி, மின்விளக்குகளால் அலங்காரம் செய்து ஜொலிக்கும் இடமாக திருமண வீடு இருக்கும். அனைத்து உறவுகளும் தரையில் அமர வசதியாக புதுப்புது ஜமக்காளங்கள், பல்வேறு டிசைன்களில் ஆக்கிரமித்திருக்கும். சாப்பிடுவதற்கு கூட பந்தி பாய்கள்தான்.இப்போது போல் மேசை, நாற்காலி எல்லாம் கிடையாது.

கால மாற்றத்தால் காணாமல் போன கலாசாரம்

நாகரிகமானது ஆண்டுகளுக்கு ஆண்டு வளர்ச்சியடைந்து வந்த வேளையில் தமிழகத்தில் காலம் காலமாய் நடந்து வந்த கலாசார நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது. தற்போது எந்தவொரு விசேஷத்திற்கும் இன்ஸ்டன்ட் டெக்கரஷேன் முறை பரவி வருவதால் பெரும்பாலான கல்யாண நடைமுறைகளுக்கு குட்பை சொல்லி வருகின்றனர். அதேபோல் சீர் பட்சணங்கள் அனைத்தும் கல்யான மண்டபங்களிலேயே இன்ஸ்டன்ட் ஆக தயார்செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் அது மறைந்து போய் அனைத்தும் ரெடிமேடான ஐயிட்டமாக போய்விட்டது.


ஏ டூ இசட் அமைப்பின் வருகை

உங்க வீட்டு திருமணத்தினை ஏற்று நடத்த தற்போது பல்வேறு கான்ட்ராக்ட் அமைப்புகள் பெருகிவிட்டதால், யாரும் சிரத்தையெடுத்து நடத்த தயாராக இல்லை. ஏனெனில் போதிய நேரமின்மை, உடல் ரீதியான தொந்தரவுகள், ஆள் தட்டுப்பாடு, போன்றவைகளும் காரணமாக கூட சொல்லலாம். மொத்த திருமணத்திற்கும் கோலம் போடுவது முதல் கட்டுச்சாத கூடை வரை கான்ட்ராக்டாக பேசி விடுகின்றனர். இதனால் பெண்ணும் மாப்பிள்ளையும் சூட்கேஸ் எடுத்து சென்றால் போதும். அனைத்தும் ரெடிசெய்ய ஆள் தயாராக உள்ளது. எல்லாமே ரெடிமேட்தான். கல்யாண மேடை, அமைப்புகள் முதல் சீர்பட்சணம் உள்ளிட்ட அனைத்துமே ரெடிமேட் தயாரிப்புகளாகி போய்விட்டதால் இன்ஸ்டன்ட் தயாரிப்பில் இன்ட்ரஸ்ட் குறைந்தது.

காணாமல் போன ஜானவாசம்

அக்கால கல்யாணங்கள் தொடர்ந்து 3 நாட்கள் நடக்கும்.வெகு களேபரமாக இருக்கும். சாப்பாடு என்றால் கல்யாண சமையல் சாதம்,காய்கறிகளும் பிரமாதம் ...இதுவே எனக்கு போதும் என அறுசுவை உணவுடன் விருந்து சாப்பிடுபவர்களுக்கு எந்தவொரு உபாதையும் ஏற்படாத வண்ணம் உணவுத்தயாரிப்புகளும், மெனுவும் இடம்பெற்றிருக்கும். ஆனால் காலப்போக்கில் இதிலும் பஃபே சிஸ்டம் புகுந்து பண்டைய கலாசாரத்தினை மறையச்செய்துவிட்டது.

அதேபோல் கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பு எனும் ஜானவாசம் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடக்கும். இந்நிகழ்ச்சியில் மாப்பிள்ளையை ஊராரும் பார்க்கும் வண்ணம் அந்த கால ப்ளைமவுத் மற்றும் கண்டசா போன்ற நீண்டகாரில் ஊர்வலமாக அழைத்து செல்வது வழக்கம். இன்னும் சில பெரிய தனக்காரர்கள் அரேபிய குதிரைமீது மாப்பிள்ளையை ஏற்றி ஜானவாசம் வருவதும் உண்டு.

இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக இதில் பங்கேற்கும் காரினை பூக்களால் அலங்கரிப்பார்கள். அதன்பின் நாதஸ்வர மேளத்துடன் உறவினர்கள் புடைசூழ, பெண்கள் சீர்வரிசைகளை பட்டுப்புடவையுடன் பல்வேறு தட்டுகளில் ஏந்திக்கொண்டு ஊர்வலத்திற்கு முன்பாக நடந்து செல்வது பார்ப்பதற்கே அழகு மிளிறும். அதேபோல் நாதஸ்வர பார்ட்டிகள் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு சினிமா பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக நடந்துசெல்லும்போது ஆதாராதவருக்கும் ஆடத்தோன்றும். ஊர்வலத்தின் இரு புறமும் உயர்ந்த பெட்ரோமாக்ஸ் விளக்குகளை தலையில் ஏந்திக்கொண்டு வரிசையாக செல்லும்போது ஊரே திரண்டு வேடிக்கை பார்க்கும். இவர்தான் மாப்பிள்ளையா? என கன்னத்தில் கைவைக்கும்படி ஜானவாசமானது கலர்புல் காட்சியாக மனதில் விரியும்.

சுட்டீஸ்களுக்கு குஷி

அலங்கரிக்கப்பட்ட காரில் வரும் மணமகனுடன் திருமணத்தில் பங்கேற்க வந்த வாண்டுகள் போட்டி போட்டுக்கொண்டு காரில் அருகில் அமர்ந்து பவனி வருவார்கள். இதற்காகவே அக்காலத்தில் பல வடிவமைப்புகளில் கார்கள் வாடகைக்கு கிடைத்தன. இதனை பலர் தொழிலாகவே செய்துவந்தனர். ஆனால் காலமும் , மாறியது.. கலாசாரமும் மாறியது... ஜானவாசமும் ஜனசந்தடியில்லாமல் நடக்கிறது. அதாவது திருமணம் நடக்கும் மண்டபத்தில் தற்போது அனைத்து கல்யாண மண்டபங்களிலும் ஒரு பிள்ளையார் சிலையாவது வைத்துள்ளதால் அங்கேயே அனைத்தும் முடிந்துவிடுகிறது.

நவீன ஜான வாசம்....!

திருமணத்திற்கு முதல் நாள் மாலை மாப்பிள்ளை அழைப்பிற்கு முன்பாக நிச்சயதார்த்தம் நடக்கும். அதன் பின் மாப்பிள்ளைக்கு கோட்,சூட் போட்டு மண்டப வளாகத்தில் உள்ளபிள்ளையார் கோவில் வரை ஜானவாசமாக நடந்து அழைத்து செல்கின்றனர்.

காரும் இல்லை... யாரும் இல்லை... ஏன் எனில் முன்பெல்லாம் எவ்வளவு துாரம் என்றாலும் நடப்பதற்கு மக்கள் தயாராக இருந்தனர். ஆனால் காலமும் மாறியது... நடையும்குறைந்ததால் இவையனைத்தும் விலகி சென்று ஜானவாசத்தின் நடையும் குறைந்துவிட்டது. இதுவே நவீன யுகத்தின் ஜானவாசமாக இருக்கிறது. என்னதான் நாகரிக மோகம்வந்தாலும் பண்டைய கலாச்சாரங்களை நாம் மறந்திருப்பது, மறைத்திருப்பது, காலநேரத்தினைக் குறைத்தாலும் நம் முன்னோர்கள் இந்த சம்பிரதாய சடங்குகள் செய்வதில் ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருந்தது. இனியாவது கலாசார பழக்கங்களை மறக்காமல் வருங்காலத்தில் கடைப்பிடித்து முன்னோர்களின் வழிகாட்டுதலுக்கு செவிமடுப்போம்.

பண்பாட்டுப் பாரம்பர்யங்கள் சுருங்கிப்போனதால்தான்,நல்ல பழக்க வழக்கங்கள் மறைந்து இன்று சமூகச் சீரழிவுகளாக பல குற்றங்கள் பெருகிக் கிடக்கின்றன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 April 2024 8:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?