/* */

தேசிய சகோதரிகள் தினம்..! தொப்புள்கொடியில் பூத்த நறுமலர்..!

தேசிய சகோதரிகள் தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இது இந்த ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று நண்பர்கள் தினத்தன்றே கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

தேசிய சகோதரிகள் தினம்..! தொப்புள்கொடியில் பூத்த நறுமலர்..!
X

National Sisters Day2023-தேசிய சகோதரிகள் தினம் 2023 (கோப்பு படம்)

National Sisters Day 2023 in Tamil, National Sisters Day 2023, National Sisters Day History, National Sisters Day Significance

சகோதரி என்பவர் தொப்புள்கொடி பந்தத்தின் நீட்சி. அன்பின் பிரவாகம். தாய்மையின் ஊற்று. உடன் பிறந்த தேவதை. தோல்வியில் நம்பிக்கை தரும் ஆசான் இப்படி சோதரியின் சிறப்பினை சொல்லிக்கொண்டேபோகலாம். ஒரு சகோதரன் மட்டுமே சகோதரியின் நேசத்தை உணரமுடியும்.

இந்த இனிய நாளில் சகோதரிகளுக்கிடையேயான பந்தத்தை கொண்டாடவும், நல்ல மற்றும் கெட்ட நேரங்களிலும் அவர்களுக்குத் துணையாக நிற்பதை அவர்களின் உடன்பிறப்புகளாகிய நாம் உறுதிப்படுத்துவதுடன் அவர்களுக்கு வாழ்த்தையும் தெரிவிப்பதற்காக நாள்.


வரலாறு:

சகோதரி என்ற சொல் 'ஸ்வெஸ்டர்' என்ற ப்ரோட்டோ-ஜெர்மானிய வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இது பழைய நார்ஸ் வார்த்தையான 'சிஸ்டிர்' என்பதிலிருந்து பெறப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, 1996ம் ஆண்டில் தேசிய சகோதரிகள் தினம் என்ற என்பதை வலியுறுத்தி அந்த கருத்தின் அடிப்படையில் டிரிசியா எலியோகிராம் மற்றும் அவரது சகோதரிகளில் ஒருவர் முக்கியப் பங்காற்றியதாக பரவலாக நம்பப்படுகிறது.


முக்கியத்துவம்:

தேசிய சகோதரிகள் தினம் என்பது சகோதரிகள் நம் வாழ்வில் கொண்டு வரும் அன்பு, தோழமை மற்றும் ஆதரவை அங்கீகரிக்க ஒரு வாய்ப்பான நாளாகும். இந்த நாளில் ஒவ்வொருவரும் தங்கள் சகோதரிகளுக்கு அன்பையும் மரியாதையையும் காட்டவும், தங்கள் சகோதரிகளுடன் தங்கள் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தேசிய சகோதரிகள் தினம் நமது சகோதரிகளுடன் நேரத்தை செலவிடுவதற்கும் புதியவற்றை உருவாக்கும் போது பழைய நினைவுகளை உள்ளத்தில் கொண்டுவந்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.


தேசிய சகோதரிகள் தினம் 2023 - வாழ்த்துகள்:

1. என் திறமைகளை ஒருபோதும் சந்தேகிக்காதவள் நீ. எப்போதும் கடினமான காலங்களில் என்னைத் தூக்கி நிறுத்தியதற்கு, நன்றி சகோதரி.

2) அனைத்து அற்புதமான சகோதரிகளுக்கும் சகோதரிகள் தின வாழ்த்துக்கள்..! இந்த நாள் அன்பு, பாராட்டுதல் மற்றும் சகோதரியின் உண்மை அன்பால் நிரப்பப்படட்டும். உள்ளம் மகிழட்டும் .

3) ஒரு சகோதரி என்பவர் இதயத்திற்கு கிடைத்த ஒரு பரிசு. ஆத்ம நண்பர், வாழ்க்கையின் அர்த்தத்திற்கு ஒரு பொன் நூல். சகோதரி தின வாழ்த்துகள்.

4) இந்த நாளில், என் வாழ்க்கையில் நீ எவ்வளவு முக்கியமானவள் என்பதை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன். உன் அன்பும், அக்கறையும், ஆதரவும் தந்த எனது அக்காவே எனது உலகமானது. சகோதரி தின வாழ்த்துகள், என் அருமை சகோதரியே..!

5) என் அன்பு சகோதரிக்கு, நீ என் உடன்பிறந்தவள் மட்டுமல்ல, நான் என் மீது நம்பிக்கை இழந்தாலும் என்னைப் புரிந்துகொண்டு நம்பும் ஒரு என் அன்பு ஜீவன் நீ. இந்த சிறப்பான நாளில் உனக்கு எனது வாழ்த்துகளையும் அன்பையும் அனுப்புகிறேன். அன்பு சகோதரிக்கு இனிய சகோதரி தின வாழ்த்துகள்..!

Updated On: 6 Aug 2023 7:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!