/* */

Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன? தெரிஞ்சுக்கங்க..!

முழம் என்பது நமது முன்னோர்கள் பயன்படுத்திய நீளத்தை அளக்கும் ஒரு அளவுமுறை. இப்போதும் பூ முழத்தால் அளந்து தரப்படுகிறது.

HIGHLIGHTS

Mulam in tamil-சாண் ஏறுனா முழம் சறுக்குது இதில் முழம் என்பது என்ன? தெரிஞ்சுக்கங்க..!
X

Mulam in tamil-முழம் போட்டு பூ அளக்கும் பெண் (கோப்பு படம்)

Mulam in tamil

முழம் என்பது நீளத்தை அளக்கப் பண்டைத் தமிழர் பயன்படுத்திய ஓர் அலகு ஆகும். இது ஒரு மனிதனின் முழங்கையின் நீள அளவைக் குறிக்கும். பொதுவாக ஒரு முதிர்ந்த மனிதரின் முழங்கை அளவே ஒரு முழமாகக் கருதப்பட்டது.

முழங்கை என்பது ஒருவரின் கைமுட்டியிலிருந்து நடுவிரலின் நுனி வரை உள்ள நீள அளவு ஆகும். பண்டைத் தமிழர்கள் முழத்தை முழக்கோல் செய்து அளந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழக்கோல்கள் சிறுகோல் (இரு முழம் நீளம் கொண்டது), பெருங்கோல் (எட்டு முழம் நீளம் கொண்டது) என்று இருவகையில் உள்ளன.


Mulam in tamil

'ஈட்டி எட்டு முழம் பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்' என்ற தமிழ்ப் பழமொழியிலிருந்து பண்டைத் தமிழ் போர் வீரர்களுக்கு எட்டு முழம் நீளம் வரை ஈட்டி வீசப் பயிற்சிக் கொடுக்கப்பட்டிருக்கக்கூடும் என்று நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

வேட்டியில் நிலைத்திருக்கும் முழம்

இன்னும் தமிழ்நாட்டின் பண்பாட்டை அடையாளம் காட்டும் வெள்ளை வேட்டியில் நான்கு முழம், எட்டு முழம் மற்றும் பத்து முழம் தான் உள்ளன. பிற துணிமணிகள் எல்லாம் உலகளாவிய மற்றைய அளவை முறைகளில் தான் தற்போது அளவெடுக்கப்படுகின்றன. ஆனால் வேட்டி மட்டும் முழம் அளவிலேயே உள்ளது.

அதேபோல இன்றும் பூ விற்பனை முழம் அளவிலேயே கொடுக்கிறார்கள்.


பழந்தமிழர் நீட்டலளவை

பழந்தமிழர் நீளத்தை அளப்பதற்கு என்ன வகையான அளவுகோலை பயன்படுத்தினர் என்பதை கீழே காண்போம்.

Mulam in tamil

அதற்கு அவர்கள் நீட்டளவை வாய்ப்பாடு பயன்படுத்தினர்.

குறுந்தொலை வாய்ப்பாடு (வடபுலத்திற்கும் தென்புலத்திற்கும் பொதுவானது):

1 விரற்கிடை = 11/16 அங்குலம்

1 பெருவிரல் = 1 3/8 அங்குலம்

12 விரற்கிடை = 6 பெருவிரல் = 8 1/4 அங்குலம்

2 சாண் = 1 முழம் = 1.3/8 அடி

2 முழம் = 1 சிறுகோல் = 2 3/4 அடி

2 சிறுகோல் = 1 கோல் = 5 1/2 அடி

2 கோல் = 1 பெருங்கோல் (தண்டம்) = 11 அடி

8 பெருங்கோல் (தண்டம்) = 1 கயிறு


நெடுந்தொலை வாய்ப்பாடு (தென்புலம்):

500 பெருங்கோல் (தண்டம்) = 62 1/2 கயிறு = 1 கூப்பீடு = 5500 அடி = 1.04167 மைல்.= 1.6763595 கி.மீ

4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ

4 காதம் = 1 யோசனை = 88000 அடி = 16.233333 மைல் = 26.820175 கி.மீ

Mulam in tamil

நெடுந்தொலை வாய்ப்பாடு (வடபுலம்):

500 கோல் = 31 1/4 கயிறு = 1 கூப்பீடு = 2750 அடி = 0.520835 மைல் = 0.8381798 கி.மீ

4 கூப்பீடு = 1 காதம் = 11000 அடி = 2.088888 மைல் = 3.3525219 கி.மீ

4 காதம் = 1 யோசனை = 44000 அடி = 8.33333 மைல் = 13.4100875 கி.மீ

Mulam in tamil


முதற்சங்க காலம்:

1 கூப்பீடு = 500 சிறு கோல்.

இடைச்சங்க காலமும் அதற்குப் பின்னும் [கி.மு.1000-300. வடபுலத்துச் சனபதங்கள், மோரியர் ஆட்சிக் காலம்]

1 கூப்பீடு = 500 கோல் (இதுவே வட புலத்தில் நிலைத்திருக்கலாம், பின்னால் பல்லவர், சோழப் பேரரசில் வடமரபு ஆதிக்கம் கூடிப் பின் தெற்கிலும் நிலைபெற்றிருக்கலாம்)

Mulam in tamil

கடைச்சங்க காலம் [கி.மு.500-கி.பி.200]

1 கூப்பீடு = 500 பெருங்கோல் (சிலம்பு வரையிலும் பயன்பாட்டில் இருந்து, பின் பல்லவர் ஆட்சியில் மாறியிருக்கலாம்).

இந்தக் கருதுகோளை இன்னும் பல சான்றுகள் கொண்டு உறுதி செய்யவேண்டும். இப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் உண்டு. மேலைக்கணக்கில், கூப்பீட்டிற்கு இணையான mile – ஐ அடுத்து, அதனினும் பெரிய நீட்டளவைகளைச் சொல்வதில்லை.


ஆங்கிலக் கணக்கில்

1 Digit = 3/4 inch

2 Digits = 1 Thumb

12 Digits = 6 Thumb = 1 Span = 9 inches

2 Spans = 1 Cubit = 1 1/2 foot

2 Cubit = 1 Yard = 3 foot

220 Yards = 1 Furlong

1760 Yards = 8 Furlongs = 1 Mile = 5280 அடி

என்றே அமையும். இந்த அளவைகள் அப்படியே வியக்கத் தக்க அளவில் நம் பழந்தமிழ் நீட்டளவைகளுக்கு இணைகோடாய்க் காட்சியளிக்கின்றன.

Mulam in tamil

அவர்களுடைய digit-உம் நம் விரற்கிடையும் அடிப்படையில் ஒரே பொருளும், தொலைவில் மட்டும் சற்று வேறுபட்டும் காட்சியளிக்கின்றன. நம் விரற்கிடை 11/16 அங்குலம், அவர்களுடைய digit 12/16 அங்குலம். இந்த வேறுபாடு மற்ற அளவைகளையும் அந்தந்தப்படி மாற்றுகிறது.

ஆனால், பின்னால் Digit, Thumb போன்ற அளவைகள் ஆங்கில வாய்ப்பாட்டிற் புழங்காமல், inch என்பதே பெரிதும் புழங்கியது. digit, thumb போன்றவை மறைந்து போயின.

நமது சாண் அளவு அவர்களுடைய span க்கு இணையாக உள்ளது. இங்கும் சாண் மாறி அடி - foot என்னும் சொல் நிலைத்து 12 inch - க்குச் சமமாய் ஆனது குறிப்பிடத்தக்கது.

நம்முடைய முழம், அவர்களுடைய cubit அளவுக்கு இணையாக இருக்கிறியாது. இந்த அளவை இன்று புழக்கத்தில் மறைந்து, அடிக்கு அப்புறம் yard - என்பதே புழக்கத்தில் நிலைத்தது.

நம்முடைய சிறுகோல், அவர்களுடைய yard -யைப் போல் இருக்கிறது, [yard "measure of length," O.E. gerd (Mercian), gierd (W.Saxon) "rod, stick, measure of length," from W.Gmc. *gazdijo, from P.Gmc. *gazdaz "stick, rod" (cf. O.S. gerda, O.Fris. ierde, Du. gard "rod;" O.H.G. garta, Ger. gerte "switch, twig," O.N. gaddr "spike, sting, nail"), from PIE *gherdh- "staff, pole" (cf. L. hasta "shaft, staff"). In O.E. it was originally a land measure of roughly 5 meters (a length later called rod, pole or perch). Modern measure of "three feet" is attested from 1377 (earlier rough equivalent was the ell of 45 inches, and the verge). In M.E., the word also was a euphemism for "penis" (cf. "Love's Labour's Lost," V.ii.676).

Slang meaning "one hundred dollars" first attested 1926, Amer.Eng. Yardstick is 1816. The nautical yard-arm (1553) retains the original sense of "stick." In 19c. British naval custom, it was permissible to begin drinking when the sun was over the yard-arm.]


அளவு ஒற்றுமை

கோல் என்னும் சொல்லோடு தொடர்புடைய கோடு என்ற சொல்லும் தமிழில் கிளை, கொம்பு, கம்புகளைக் குறிக்கும். இங்கே உள்ள மேலைச் சொற்களுக்கும் நம்முடைய கோட்டிற்கும் உள்ள பொருள் இணை வியக்க வைக்கிறது.

மேலே உள்ள விரற்கிடை, சாண், முழம், சிறுகோல், கூப்பீடு என்ற ஐந்தும் digit, span, cubit, yard, mile என்ற ஐந்தோடு, ஒன்றிற்கொன்று கருத்தளவில் இணையானவை. அதேவேளையில் விரற்கிடை, digit என்பவை 1/16 அளவு வேறுபட்டதால், மற்றவையும் அதற்கிணங்க மதிப்பளவில் மாறிப் போயின.

Mulam in tamil

நம்மிடம் இல்லாத ஃபர்லாங்

நம்மிடம் இல்லாது மேலையரிடம் இருந்த ஓரளவை furlong என்பதாகும். இதற்கு இணையாய்ச் 'சால்' என்று சொல்ல இயலும். அப்படிக் கொண்டால் 250 சிறுகோல் = 1 சால், 8 சால் = 1 கூப்பீடு என்றாகும். சால் என்பது வயலில் உழும் போது கலப்பை பறிக்கும் நேர்கோடு. சாலையின் வேர்ச்சொல்லும் சால் தான். ஆங்கிலத்தில் furlong என்பதற்கும் இதே பொருள்தான்: O.E. furlang "measure of distance" (roughly 220 yards), originally the length of a furrow in the common field of 10 acres, from furh "furrow + lang "long." But the "acre" of the common field being variously measured, the furlong was fixed 9c. on the stadium, one-eighth of a Roman mile.]

2000 சிறுகோல் = 1000 கோல் = 500 பெருங்கோல் = 8 சால் = 1 கூப்பீடு என்னும் தென்புல ஒப்புமையில், 1000 கோல் = 1 கூப்பீடு என்பதும் கூட mile என்ற இணைச்சொல்லிற்குள் இருக்கும் ஆயிரங் கோல் என்ற பழம்பொருளை உணர்த்தும்.

2000 முழம் = 1000 சிறுகோல் = 500 கோல் = 1 கூப்பீடு என்ற வடபுல ஒப்புமையில் 1000 சிறுகோல் = 1 கூப்பீடு என்பது கிட்டத்தட்ட 1/2 மைலைக் குறிக்கும்.

Mulam in tamil

ஆங்கில அளவைகள் கிரேக்க, உரோம அளவைகளைப் பின் தொடர்ந்து ஏற்பட்டவை. கிரேக்க, உரோமர்கள் எகிப்தியரையோ, அல்லது சுமேரிய, பாபிலோனியர்களையோ பின்பற்றியிருக்கலாம். இது ஆய்வு செய்ய வேண்டிய புலனம். ஆனால், இத்தகைய இணைகள் இருப்பதைப் பார்த்தால், கூப்பீடு, காதம், யோசனை போன்றவற்றில் ஏற்பட்ட தொலைவு வேறுபாடு மிகவும் பின்னால் எழுந்ததோ என்று எண்ண வேண்டியிருக்கிறது.


Mulam in tamil

நம்முடைய அளவைகளுக்கும் ஆங்கில அளவைகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகளைத் தென்புல வாய்ப்பாட்டின் படி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல, வடபுல வாய்ப்பாட்டிற்கும் ஒற்றுமைகளைப் பட்டியலிடலாம்.

60 தண்டம் = 7.5 கயிறு = 660 அடி = 1 பர்லாங்

480 தண்டம் = 60 கயிறு = 5280 அடி = 1 மைல்

4/11 சிறுகோல் = 1 அடிநம்முடைய சா

12/11 சிறுகோல் = 1. 09090909 சிறுகோல் = 1 கசம்

1 கூப்பீடு = 1 மைல் 1/3 பர்லாங் = 1.0416667 மைல்,

1 சிறுகோல் = 0.916666666667 கசம்

நீட்டல் அளவு நன்றி : எழில்நிலா இணையதளம்

Updated On: 23 Sep 2023 6:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்