/* */

மாமியார் இன்னொரு தாய், மருமகள் இன்னொரு மகள்: புதிய சிந்தனையால் உறவு மலரும்

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingமாமியார் இன்னொரு தாய், மருமகள் இன்னொரு மகள் என்ற புதிய சிந்தனையால் மாமியார் மருமகள் உறவு நிச்சயமாக மலரும்.

HIGHLIGHTS

மாமியார் இன்னொரு தாய், மருமகள் இன்னொரு மகள்: புதிய சிந்தனையால் உறவு மலரும்
X

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingமகிழ்ச்சியான குடும்பத்தின் மாமியார் -மருமகள் (கோப்பு படம்)

மருமகள் மாமியாரை இன்னொரு தாயாகவும், மாமியார் மருமகளை இன்னொரு மகளாகவும் புதிய சிந்தனையுடன் அணுகினால் குடும்பத்தில் உறவு மலரும்.


Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingஇன்றைய மருமகள் நாளைய மாமியார், நேற்றைய மருமகள் இன்றைய மாமியார். இதுதான் வாழ்க்கை. கால சக்கரத்தின் ஓட்டத்தில் மருமகள் மாமியாராக மாறுவதும், மாமியார் பாட்டியாக மாறுவதும் இயற்கையான ஒன்று. இந்த கால சுழற்சிக்கு உலகில் யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் ஈகோ, போட்டி, பொறாமை காரணமாக பல குடும்பங்களில் மாமியார் மருமகள் இடையே சண்டை ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டு இதன் காரணமாக குடும்பத்தில் உறவுகள் சிதைந்து விடுகிறது. அத்தகைய சிதைவுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

இங்கிலாந்து ராஜ குடும்பத்தின் மாமியார் எலிசபெத், மருமகள் இளவரசி டயானா.

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingதிருமணத்திற்கு பிறகு தாய் வீட்டில் இருந்து கணவரின் வீட்டிற்கு சென்று வாழ்வது பற்றிய பயம் பல பெண்களுக்கு இருப்பது இயற்கையான ஒன்றுதான். திருமணத்துக்கு முன்பு வரை பெற்றோரின் அன்பு, அரவணைப்பில் சுதந்திரமாக வாழும் பெண்கள் கணவர் வீட்டில் புதிய மனிதர்கள், புதிய சூழல் என்று பொருந்தி பேச முடியாமல் திணறுவது உண்டு.குடும்பத்தில் முக்கியமான நபராக இருக்கும் மாமியார் தங்கள் வீட்டுக்கு வரும் மருமகளை தோழமையுடன் ஆதரித்து வழி நடத்தினால் இந்த பயம் நீங்கும்.

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingஇருவரில் மாமியார் வயது மற்றும் அனுபவத்தில் முதிர்ச்சி அடைந்தவர் என்பதால் மருமகளுடன் உறவை அன்பின் வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு அவருக்கு உள்ளது. எதார்த்தமாகவும் புத்திசாலித்தனமாகவும் சிந்தித்து செயல்பட்டார் மாமியார், மருமகள் உறவு சிறப்பானதாக அமையும். அதற்கான சில ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம்.

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingமருமகள் மற்றொரு குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவளை உங்கள் மகளாக நினைத்து வழி நடத்தினால் அன்பு அதிகரிக்கும். மருமகளுக்கு என்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் அதற்கு ஏற்றவாறு அவள் செயல்படுவதற்கு அனுமதிக்க வேண்டும். மகளுக்கு அளிக்கும் அதே சுந்திரத்தை மருமகளுக்கு கொடுக்க வேண்டும். அவரது செயல்பாட்டில் தவறுகள் இருந்தால் அதை பணிவுடன் சுட்டிக்காட்ட வேண்டும். அதிகார தோரணையில் பேசுவதை மாமியார்கள் தவிர்ப்பது நல்லது.

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingமருமகளின் சூழ்நிலையை புரிந்து கொண்டு தக்க தருணத்தில் அவருக்கு வழிகாட்டுதலையும் உத்வேகத்தையும் மாமியார் தர வேண்டும். மனைவியாகவும் குடும்பத்தலைவியாகவும் தான் வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதற்கு மருமகளுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் கனிவாக கூறும் அறிவுரையும் வழிகாட்டுதலும் மருமகளை ஊக்குவிக்கும். இதனால் உங்கள் இருவருக்கும் இடையே புரிதல் ஏற்படும். இது மருமகளுக்கு தாயின் அன்பை உணரச் செய்யும்.

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingபாராட்டு உறவை வளமாக்கும். மருமகளின் செயலில் நல்லதை கண்டால் அவரை வெளிப்படையாக பாராட்ட வேண்டும். மற்றவர்கள் முன் வெளிப்படையாக புகழ்ந்து பேசுங்கள். பாராட்டுங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு அவர் மீது அக்கறை காட்டுவதையும் உணர வைக்கும். இதனால் மருமகள் உங்களை பெற்றோராக கருத தொடங்குவார்.


Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingபணிக்குச் சென்ற மருமகள் வீட்டிற்கு வந்தவுடன் உங்கள் மகனை கவனிப்பது போல அவர் மீதும் அக்கறை காட்டுங்கள். மருமகள் எடுக்கும் முடிவுகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் கோபப்படுவதற்கு பதிலாக நிதானமாக அவருக்கு புரிய வைத்து வழி நடத்துங்கள். இதனால் மாமியார் மருமகள் உறவு,தாய் மகள் உறவு போல மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும்.

Mother-in-law is another mother, daughter-in-law is another daughter, relationships blossom with new thinkingஇப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டால் ‘மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் கொடுத்தால் பொன் குடம்’ என்ற பழமொழிக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

Updated On: 24 March 2023 5:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  2. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  4. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  5. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்
  6. டாக்டர் சார்
    கோடையை குளிர்விக்கும் சப்ஜா..! சத்துகளின் .களஞ்சியம்.!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை லோக்சபா தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
  8. செய்யாறு
    செய்யாறு அருகே கல்குவாரிகள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை
  9. நாமக்கல்
    மோகனூர் சோதனைச் சாவடியில் தேர்தல் போலீஸ் பார்வையாளர் திடீர் ஆய்வு
  10. நாமக்கல்
    லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...