/* */

Mokka Jokes With Answers-மகிழ்ச்சியின் முன்னுரை, சிரிப்பு...! செலவில்லாமல் சிரிங்க..!

சிந்திக்கத் தெரிந்த மனிதனின் முதல் உணர்வே சிரிப்புதான். பிறக்கும்போதும் இறக்கும்போதும் அழுதாலும் இடைப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்வோம்.

HIGHLIGHTS

Mokka Jokes With Answers-மகிழ்ச்சியின் முன்னுரை, சிரிப்பு...! செலவில்லாமல் சிரிங்க..!
X

Mokka Jokes With Answers-மொக்க ஜோக்குகள் (கோப்பு படம்)

Mokka Jokes With Answers

நகைச்சுவை என்பது நகைத்தலில் உள்ள சுவை. அதாவது நகைத்தாள் என்றால் சிரித்தல். சுவையான மற்றும் சுவாரஸ்யமான விஷயங்கள் மனிதர்களை சிரிக்கவைக்கும். அது ஒரு இயல்பான சம்பவமாக இருக்கவேண்டும்.

சிரிப்பு என்பதும் மனிதருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதம். சிரிப்பதால் உடலில் உள்ள அத்தனை செல்களும் புத்துயிர் பெறுகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சிரிப்பதால் உடலில் நேர்மறை ஆற்றல் உருவாகிறது. அதனால் உடல் இயக்கம் சீராக இருக்கிறது.

Mokka Jokes With Answers


ஆகவே சிரிப்பு என்பது ஒரு அருமருந்து. உற்சாகத்தின் டானிக். மகிழ்ச்சியின் முன்னுரை. எனவே சிரிப்போம் சிந்திப்போம். இதோ உங்களுக்காக மொக்க ஜோக்குகள் கீழே தரப்பட்டுள்ளன. படீங்க விழுந்து விழுந்து சிரிங்க. (விழும்போது பாத்து விழணும்ங்க. அப்புறம் எங்களை குறைகூறக்கூடாது.) எப்டீ..உங்களை இங்கேயும் மொக்கையா கலக்கியாச்சு..ஹிஹிஹி..!

1. தபால்காரர்: இந்த பார்சல குடுக்க அஞ்சு கிலோ மீட்டர் நடந்து வந்தேன் உங்க ஊருக்கு.

வீட்டுக்காரர்: ஏன், தபால்ல அனுப்பி இருக்கலாம்ல.?

2. திருடன் : தம்பி ! உனக்கு மிட்டாய் தருகிறேன். உங்க வீட்ல நகைகளை எங்கே வைப்பாங்க சொல்லு..

சிறுவன் : அடகுக் கடையிலே !

திருடன் : ????

3. காதலன் : உன் காதலுக்காக என் உயிரையே கொடுப்பேன் டியர்!

காதலி : அதற்கு அவசியமில்ல!… நம்ம லவ், என் அப்பாக்கு தெரிஞ்சா, அவரே எடுத்துடுவாரு!

காதலன் : ???????

Mokka Jokes With Answers

4. ஒருவர் : பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை ஷாக் ஆகிட்டாரே.. அப்படி என்ன சொன்னாங்க?

மற்றொருவர் : பொண்ணுக்கு சமைக்கத் தெரியும்னு சொன்னாங்களாம்…

ஒருவர் : ???


5. அமைச்சர் : மன்னா, எதிரி நாட்டு மன்னர் ஒலை அனுப்பியுள்ளார்.

மன்னர் : அரண்மனைக்கு நாம் ஏற்கனவே கான்கீரிட் போட்டாச்சு ஓலை வேண்டாம். திருப்பி அனுப்பிவிடும்!

6. கடை முதலாளி : ஏண்டா அரிசி மூட்டையில இவ்ளோ அரிசி குறைஞ்சிருக்கு?

வேலைக்காரன் : மூட்டைக்கு அடியில் ஓட்டை விழுந்திருக்கும் முதலாளி.

கடை முதலாளி : அடியில ஓட்டை விழுந்தா எப்படிடா மூட்டைக்கு மேல அரிசி குறையும்?

வேலைக்காரன்: 😂😂

7. வேலைக்காரன் 1 : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.

வேலைக்காரன் 2 : அதுக்கு நீ ஏன் பதர்ற?

வேலைக்காரன் 1 : இல்லாத ‌விஷய‌த்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க!

8. வந்தவர்: என்ன இன்டர்வியூ வந்தவங்க எல்லாருக்கும் தண்ணி கொடுத்து கண்ணுல ஊத்திக்க சொல்றாங்க ஏன்?

வேலைக்காரர்: வேல கிடைக்கல்லேன்னா எப்படியிருந்தாலும் இதெ‌ல்லா‌ம் வெறு‌ம் க‌ண் துடை‌ப்பு‌ன்னு சொல்லப்போறீங்க. அதை நா‌ங்க முத‌லயே பண்ணிட்டா பிரச்சனை இல்ல பாருங்க!

9. கண்டக்டர்: யோவ் டிரைவர், நான் மூணுமுறை விசிலடிச்சும் வண்டி நிக்கலையே ஏன்?

டிரைவர்: அட போய்யா, நான் ஆறுமுறை பிரேக் அடிச்சே வண்டி நிக்கலை, நீவேற.

Mokka Jokes With Answers

10. முதலாளி: இங்க நிறையா திருட்டு போகும். அதனால நீ ராத்திரி கண் முழுச்சி கவனிச்சுக்கணும்.

வேலைக்காரன்: து‌ங்கவே மா‌ட்டே‌ன். ஒரு சின்ன சத்தம் கேட்டா கூட நான் முழிச்சிக்குவேன் ஐயா, ‌நீ‌ங்க‌ கவலையே‌ப் படா‌தீ‌ங்க.

11. முதலாளி: என்னடா இது அம்மா நான் எது சொன்னாலும் கேக்க மாட்டேங்கறாங்க?

வேலைக்காரன்: நீங்க பேசாம அவங்க தூங்கும்போது சொல்லிடுங்க.

12. மன்னர் : தளபதியாரே, என்ன இது போர் நடக்கும் நேரத்தில் 7 நாள் விடுப்பு வேண்டுமா ?

மந்திரி : ஆம் மன்னா, போர் முடிந்த அடுத்தநாளே அரண்மனைக்கு வந்து விடுவேன்.

மன்னர் : ??????????????


13. மன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை எங்கே?

அமைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு, சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா!

மன்னன் : ????

Mokka Jokes With Answers

14. வீட்டுக்காரன் : என்னடா இது வெறும் ஆட்டுக்கால் மட்டும் வாங்கிட்டு வர்ற?

வேலைக்காரன் : நீங்க தந்த 10 ரூபாய்க்கு பின்ன என்ன ஆட்டுக்கால்ல தங்க கொலுசு மாட்டியா தருவாங்க.

15. வீட்டுக்காரர் : டெய்லி காய்கறி வாங்கறதுல கமிஷன் அடிச்சு நீ வீடே கட்டியிருக்கலாமே?

வேலைக்காரன் : போங்கய்யா என்னை ரொம்ப புகழாதீங்க.

16. ஒருவர் : என்னுடைய மொபைல் பில் எவ்வளவு ?

கால் சென்டர் பெண் : சார் *123னு டைப் பண்ணி கால் பண்ணினால் உங்களுடைய கரன்ட் (current) பில் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒருவர் : ஸ்டுபிட் ! என்னோட மொபைல் பில்லைக் கேட்டா, கரண்ட் பில்லைப் பத்தி சொல்றியே !

17. வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?

கடைக்காரர்: ஒரு ரூபாய்.

வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???

கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.

வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

18. தொண்டர் : இளவரசே வீரமுடன் வேட்டைக்கு புறப்பட்ட நீங்கள் ஏன் தலை தெறிக்க, ஓடி வருகிறீர்கள் ?

மன்னர் : போய்யா, போற வழியில் ஒரு நாய் துரத்திட்டு வருது.

Mokka Jokes With Answers

19. தரகர்: மாப்பிள்ளை மெகாசீரியல்ல நடிக்கறாரு..

பெண்: அப்ப மாப்பிள்ளை நிரந்திர வேலைல இருக்கார்னு சொல்லுங்க !


20. வந்தவர்: அரிசி கிலோ எவ்வளவு?

கடைக்காரர்: பதினைஞ்சு ரூபாய்!

வந்தவர்: கொஞ்சம் குறைச்சுப் போடக்கூடாதா?

கடைக்காரர்: இப்பவே ஒரு கிலோ அரிசிக்கு தொள்ளாயிரம் கிராம் தான் போடுறம்னு எல்லாரும் சொல்றாங்க. இன்னும் எப்படி குறைச்சுப் போடுறது ?

21. தரகர்: கறுப்பா இருக்கிற பொண்ணுக்குப் பத்து பவுன் போடறாங்களாம். ஒரு கால் நொண்டிப் பொண்ணுக்குப் பதினைஞ்சி பவுன் போடறாங்களாம். எது வேணும் ?

மாப்பிள்ளை வீட்டுகாரர்:கறுப்புக் கலர்ல நொண்டிப் பொண்ணு பாருங்களேன்.

22. தேவி : உங்க கடையில வாங்கிப்போன பூரிக்கட்டை சீக்கிரம் உடைஞ்சிடுச்சே?

கடைக்காரர் : அடேயப்பா ! உங்க கணவர் தலை அவ்வளவு ஸ்ட்ராங்கா!? அப்போ இரும்புலத்தான் செய்யச் சொல்லணும்.

தேவி : 😀😀

Mokka Jokes With Answers

23. கடைக்காரர் 1 : எங்க சலூன்ல கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்!

கடைக்காரர் 2 : இதென்ன பெருசு எங்க ஃபைனான்‌ல கம்பெனில சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்.

24. கடைக்காரர்: சார் எங்க கடைல து‌ணி வா‌ங்‌கினா. அ‌வ்வளவு சீக்கிரம் கிழியாது

வாடிக்கையாளர்: சும்மா பொய் சொல்லாதீங்க

கடைக்காரர்: பொ‌ய் இ‌ல்‌லீ‌ங்க உ‌ண்மைதா‌ன்.

வாடிக்கையாளர்: இப்பகூட அவரு 2 மீட்டர் கேட்டப்ப கிழிச்சுதான கொடுத்தீங்க.

25. ஒருவர் : பாட வந்தவங்க, எதுக்கு கையில கிளவுஸ் எடுத்து மாட்டிக்கறாங்க…?

மற்றவர் : குத்துப்பாட்டு பாடப் போறாங்களாம் அதான்?

ஒருவர் : ???

26. காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்

காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது.


27. வாடிக்கையாளர்: என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு

கடைக்காரர்: இது ஸ்டூல் இல்ல, மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம் பாருங்க.

Mokka jokes in tamil

28. வாடிக்கையாளர்: இந்த கிராமர் புத்தகம் என்ன விலை?

கடைக்காரர்: 150 ரூபாய் சார்

வாடிக்கையாளர்: கொஞ்சம் சொல்லிக் குடுப்பா

கடைக்காரர்: சொல்லியெல்லாம் கொடுக்க முடியாது சார், நீங்கதான் படிச்சுக்கணும்.

29. வாடிக்கையாளர்: எங்கே கடைய மூடிடப்போறீங்களோன்னு மூச்சு வாங்க ஓடி வர்றேன்

கடை‌க்கார‌ர் : அதெல்லாம் இங்க விக்கறதில்லீங்க!

30. மாப்பிள்ளை வீட்டார்: பெண் வீட்டுக்காரங்க ஏன் இன்னும் கல்யாணத்தைத் தள்ளி வச்சிக்கிட்டே இருக்காங்க?

பக்கத்தில் இருந்தவர்: ஆயிரம் பொய் சொல்ல இன்னும் முன்னூறு பொய் பாக்கியிருக்காம்.. அதனாலதான்!

31. மன்னன்: வர வர சேவகர்களுக்கு என்மீது பயமே இல்லைபோல் தெரிகிறது அமைச்சரே..

அமைச்சர்: ஏன் மன்னா?

மன்னன்: யாரங்கே எனக் குரல் கொடுத்தால், யாருமில்லை என பதில் குரல் வருகிறது!

32. வ‌ந்தவ‌ர்: ஏன் சார் குறை‌ந்த ‌விலை‌‌யி‌ல் செவிட்டு மெஷின் கிடைக்குமா?

கடை‌க்கார‌ர்: 2 ரூபா‌ய்ல இரு‌க்கு வேணுமா?

வ‌ந்தவர்: அது எப்டி சார் ஒர்க் பண்ணும்?

கடை‌க்கார‌ர்: இது எதுவு‌ம் பண்ணாது. ஆனா இது உங்க காதுல வ‌ச்சு இருக்கறதப் பார்த்த உடனே எல்லாரும் உங்ககிட்ட கத்திப் பேசுவாங்க.

33. முதியவர் : அவ‌சர அழை‌ப்பு‌க்கு போன் செய்ய முடியாம‌ல் குழ‌ம்‌பி இரு‌ந்தா‌ர்.

கடைக்காரர் : ஏன்?

முதியவர்b : அவசர அழை‌ப்பு‌க்கு 911 எ‌ன்பது தெரியும்! ஒன்பது டயலில் இருக்கு. பதினொன்று எங்கே?


Mokka Jokes With Answers

34. வாடிக்கையாளர்: என்ன சார் உங்க பத்திரிகைக்கு இவ்வளவு ஜோக்ஸ் அனுப்பி வச்சுருக்கேன் எதுக்குமே பணம் தரமாட்டேன்றீங்களே?

அச்சகர்: இது கூட நல்ல ஜோக்தா‌ன்! ஆனா இதுக்கும் பணம் தரமுடியாது!

35. வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்,

வானொலி நிலைய பணியாளர் : ஹலோ வணக்கம்! வணக்கம்! சொல்லுங்க…

நேயர்: வணக்கம்தான் சொல்லிட்டேனே!!

36. பெண்: ஹலோ இது கஸ்டமர் கேர் தானே?

கஸ்டமர் கேர்: ஆமாம் சொல்லுங்க மேடம்

பெண்: என் அஞ்சு வயசு பையன் சிம் கார்டு ஐ விழுங்கிட்டான்..

கஸ்டமர் கேர்: அப்படினா டாக்டர் கிட்ட கூட்டி கிட்டு போங்க மேடம்

பெண்: இல்லை சார் அதுல 95 பைசா பேலன்ஸ் இருந்துச்சி. அவன் பேசும்போது காசு போகுமா சார்

கஸ்டமர் கேர்: 😯 😯

37. மன்னர் : போர் முரசு ஒலிகேட்கிறதே…! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே ?

அமைச்சர் : அஞ்சாதீர்கள் மன்னா…! மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக் கொண்டிருக்கிறார்கள் !

மன்னர் : ????????????

38. ஒருவன் : மாட்டை பிடிக்கிறவருக்கு என் மூத்த பெண்ணைக் கட்டிகொடுப்பேன்…

மற்றவன் : உங்க வீட்டு கன்றுகுட்டியை பிடிச்சா இளைய பெண்ணை கட்டி தருவீங்களா…?

ஒருவன் : ???

39. தளபதி : மன்னா, காளைப்படை ஒன்றை நமது படையில் சேர்ப்போமா?

மன்னர் : நான்தான் காலையே படையாக வைத்து இருக்கிறேனே, பின் எதற்கு காளைப்படை!!!

தளபதி : ???


40. அரசர் : சிங்கத்தை அடக்கும் தைரியசாலிக்கு தான் என் மகளை திருமணம் செய்து வைப்பதென்று முடிவு செய்திருக்கிறேன் மந்திரியாரே!

மந்திரி : இளவரசி அவ்வளவு பெரிய அடங்காபிடாரியா அரசே!

அரசர் : ?????????????

Mokka Jokes With Answers

41. ராஜா : மந்திரியாரே! இப்போதெல்லாம் நமக்குப் புறாவிடம் இருந்து மெயில் வருவதில்லையே, ஏன்?

மந்திரி : அதுதான் ஈ-மெயிலில் எல்லாம் வந்துவிடுகிறதே பிரபு!

42. மருமகன் : கமலா, நான் புதுசா கண்ணாடி போட்ட பிறகுதான் நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு தெரியுது.

மாமியார் : மாப்ளே, நான் கமலா இல்லே! அவளோட அம்மா.

மருமகன் : ?????????

43. அரசன்: புலவரே! என்ன துணிச்சல்? என் எதிரே அமைச்சரைப் புகழ்ந்து பாடுகிறீர்?

புலவர்: மன்னிக்க வேண்டும் அரசே! அண்மையில் வெளியான பணக்காரர்கள் பட்டியலில் அமைச்சரின் பெயர் முதலிடத்தில் இருக்கிறதே!

44. மாமனார் : நூறாவது நாள் முடிந்து வெற்றிகரமான 150வது நாளை நோக்கி

மாப்பிள்ளை : எந்த படத்தைப் பத்தி சொல்றீங்க மாமா

மாமனார் : படத்தைப் பத்தி இல்ல, நீங்க ஊர்ல இருந்து வந்த விஷயத்தைப் பத்தி சொல்றேன்.

45. ஒருவர் : அந்த ஆள் எப்பவும் மத்தவங்க கையைத் தான் எதிர்பார்ப்பாரு?

மற்றவர் : ஏன்?

ஒருவர் : அவருதான் கைரேகை ஜோசியம் பார்க்கறவராச்சே அதான்?

46. காதலன் : எப்பவுமே உன்னோட நினைப்பாவே இருக்கு டார்லிங்.

காதலி : இப்போதானே நாம பேசி முடிச்சோம்?

காதலன் : அச்சச்சோ! மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? சாரி!


Mokka Jokes With Answers

47. லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?

Letterஐ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.

48. மிகவும் நீளமான இசைக்கருவி எது?

புல் லாங் குழல்(full long குழல் )

49. ஒரு மாமி இட்லியை தலைல வெச்சி இருங்க ஏன்?

ஏன்னா அந்த இட்லி மல்லி பூ போல இருந்திச்சாம்.

50. The Hindu paper ரொம்ப Weightஆ இருக்கு ஏன்?

ஏன்னா அது மேல யானை இருக்குல்ல.

51. Costlyஆன கிழமை எது?

“வெள்ளி” கிழமை

52. எலிய என்ன பண்ண யானை ஆக்கலாம்?

எலிக்கு ஒரு பண்ட் (Pant) போட்டா எலிபெண்ட்(elephant) ஆகிடும்.

53. “தமிழ் நியூ இயர்”-க்கும், “இங்கிலிஷ் நியூ இயர்”-க்கும் என்ன வித்தியாசம்

4 மாசம் தான் வித்தியாசம்

54. குடிக்க முடியாத டீ எது?

கரண்டி


55. கால்கள் இல்லாத ஆட்டின் பெயர் என்ன?

ஆட்டு இறைச்சி

Mokka Jokes With Answers

56. டயபர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு

இருவரும் அடிக்கடி மாற வேண்டும்

57. வேலைக்கு போற விலங்கு எது?

பனி கரடி.

58. நாம ஏ படுத்துக்கிட்டே தூங்குறோம்?

நின்னுக்கிட்டே தூங்குனா கீழ விழுந்துடுவோம்.

59. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?

அதுகிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.

60 .”மழை மே கம்” க்கு எதிர் யென்ன? (Rain may come)

மழை வராமல் இருக்கலாம்


61. பாம்புக்கும் சயம்புக்கும் என்ன வித்தியாசம்?

பாம்பு பூத்த வாய்யிலே நோரை வரும், சியாம்பு பூத்த தலையிலே நோரை வரும்.

62. கண்டக்டர்: அேன் நான் விசில் அடிச்சு பஸ் நிக்கலே

டிரைவர்: நான் பிரேக் அடிச்சே பஸ் நிக்கலா நீ விசால அடிச்சா நின்றுமா

63. நண்பன் 1: சிகரெட் புடிச்சா கேன்சர் வரும்

நண்பன் 2: இல்லையே,நான் புடிக்கும் போது போகை விட வந்துது

64. “எனது சுழற்சியை பிடி, ஐயா?”(En Cyclo Pedia)

என்பதற்கான ஒரு சொல் என்ன?

கலைக்களஞ்சியம்

Mokka Jokes With Answers

65. .நண்பர் 1: பென்குயின் எதிர் என்ன

ஆன்கிங்(ஆண்)


66. .புறா மற்றும் குயில் ,அணில் மூலம் நீங்கள் அஞ்சல் அனுப்பினால், எது முதலில் சென்றடையும்? ஏன்?

அணில் லெட்டர் வேகமா போய்ச்சேரும். ஏன்னா அணிலுக்கு மட்டுமே பின்கொடு இருக்கு.

67. பொங்கலுக்கு அரசுல லீவு குடுப்பாங்க…

ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா

68. திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும்

அவரால ஒரு குரலில் தான் பேசமுடியும்

69.பால்கோவா பாலில் இருந்து பண்ணலாம்,

ஆனா ரசகுல்லாவா ரசத்தில் இருந்து பண்ண முடியுமா?

Mokka Jokes With Answers

70. ராமராஜன் ஹாலிவுட் படம் பண்ணா என்ன ரோல் பண்ணுவார்?

கவ்பாய் – பாத்திரம் (Cowboy)

71. சினிமா பாக்க போனா சி-ரோ ல உக்கார கூடாது ?

நமக்கு முன்னால பி-ரோ இருக்கு. பீரோ மறைக்கும்

72. உஷா: எங்க மாமாவுக்கு ஒரு பெரிய பெரிய ஆபரேஷன் நடந்திருக்கு, சிவா: பெரிய ஆபரேஷன் மேஜர் ஆபரேஷன் தான்.

உஷா: அய்யோ, ஆபரேஷன் நடந்திருக்கு எஸ்.வி: ஓ, மேஜர் இல்லயா ?

73. .ராமன், லட்சுமணன், சீதை ஆகியோர் ஒரே பேருந்தில் சென்றனர். ராமன் & லச்சுமணன் மட்டும் அயோத்திக்குப்பம் நிறுத்தத்தில் இறங்கினர், சீதை ஜன்னல் வழியே குதித்தாள், ஏன்?

ஏனென்றால் சீதை “படி தாண்டா பத்தினியாச்சே”.


74. காட்டில் வரி கட்டுற ஒரே விலங்கு எது?

வரிக்குதிரை

Mokka Jokes With Answers

75.எலுமிச்சம் பழம் ஆணா இல்ல பெண்ணா?

ஆண் தான். ஏன்னா நான் புழிஞ்சா சார் (சாறு) வருதுல்ல

76. ஒருத்தர் கல்யாணம் பண்றதுக்கு விவசாய கடன் கேட்டாராம் ஏன்?

ஏன்னா அது ஆயிரம் (1000) காலத்து பயிருல்ல

77. அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்யாசம்?

வயசு வித்தியாசம்

78. கசப்பே இல்லாத மொழி எது?

தேன்மொழி

79. வெயிட்டே இல்லாத வீடு எது?

லைட் ஹவுஸ்

Updated On: 24 Oct 2023 6:08 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  2. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  6. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  9. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  10. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...