/* */

Meaning of fourplay-மனைவியை திருப்திப்படுத்த இதையெல்லாம் செய்யணும்..!

தாம்பத்ய உறவு என்பது சில நிமிடத்தில் முடித்துக்கொள்ளும் உறவல்ல. நீடித்து இன்பம் காணுதல் ஆகும். அது இருவருக்குமான உறவு.

HIGHLIGHTS

Meaning of fourplay-மனைவியை திருப்திப்படுத்த இதையெல்லாம் செய்யணும்..!
X

Meaning of fourplay-முன்விளையாட்டு (கோப்பு படம்)

Meaning of fourplay

உடல் உறவு என்பது உயிரினங்களுக்கு கிடைத்துள்ள உயிரினப்பெருக்கத்திற்கான ஒரு வாயில். அதை அறிவியல் பூர்வ கருத்தாக கொள்ளவேண்டும். இது செக்ஸ் குறித்த உணர்வை வளர்ப்பதற்கான செய்தி அல்ல. செக்ஸ் குறித்தும், தம்பத்ய உறவு குறித்தும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையிலான புரிதலை ஏற்படுத்துவதற்கான ஒரு தகவல் கட்டுரை.

நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. அதை நாம்தான் புதிய அனுபவமாக மாற்றவேண்டும். ஏதோ படுத்தோம் எழுந்தோம் என்று இருப்பது தாம்பத்ய உறவு அல்ல. ஒரு ஆண் மனைவியை முழுமையாகத் திருதிப்படுத்தவேண்டும். அதுதான் ஆண்மைக்கு அழகு.

நன்றாக யோசித்துப்பாருங்கள், செக்ஸ் என்பது சில நிமிட விஷயம்தான். ஆனால் கணவன்-மனைவி இருவரும் சரியான துணையாக இருந்தால் மணிக்கணக்கில் இன்பம் காணமுடியும். அதற்கான மெனக்கெடல்தான் 'முன்விளையாட்டு'.

Meaning of fourplay


கள வீரர்கள்

களத்தில் இறங்கி விளையாடும் வீரர்கள் போல இருவரும் இன்பம் எனும் இலக்குடன் முழுமனதோடு காரியத்தில் இறங்கவேண்டும். அந்த முழு மனது என்பதற்கு கணவன்-மனைவி இருவரும் தயாராகவேண்டும். தொடுதல், முத்தமிடுதல், கட்டியணைத்தல், மார்புகளை பயன்படுத்துதல்,வாய்வழி உறவு போன்ற முன் விளையாட்டுகளை இருவரும் மாறிமாறி செய்துகொள்ளும் போது உடல் உறுப்புகள் உஷ்ணம் பெற்று உறவுக்கு தயாராகும்.

ஆண் மற்றும் பெண் உறுப்புகளில் தேவையான சுரப்பிகள் வேலைசெய்து உறவுக்கு ஏற்ப சுரப்பிகளை சுரக்கும். இது உறவின்போது வலியை ஏற்படுத்தாமல் இருக்கும். முதலில் செக்ஸ் குறித்து அறிவுத்திறனை கொஞ்சமாவது தெரிந்துகொள்ளவேண்டும். உடலுறவில் நிதானம் மற்றும் பொறுமை முக்கியம். அவசரப்பட்டால் இங்கு இருவருக்கும் இன்பம் கிடைக்காமல் அலங்கோலமாகிவிடும்.

Meaning of fourplay


இன்பம் காணும் வழி

அந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத்துங்கள். அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்தம், தழுவல், வருடல், துளாவுதல் என பல விஷயங்களையும் நீங்கள் செய்தாக வேண்டும்.அதுவே இன்பம் காணும் வழி.

எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வேண்டும். அப்போதுதான் உண்மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உறவையும் முழுமையாக அனுபவிக்க முடியும். முன் விளையாட்டுகளால் மட்டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உணர்வுகளை வெறும் உறுப்பால் மட்டுமே தட்டி எழுப்பமுடியாது. மாறாக அருமையான முன் விளையாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக் கொண்டு செல்ல முடியும்.

Meaning of fourplay

முன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வுகள் கொந்தளிக்கும் பகுதிகளை சரியாக தெரிந்து வைத்துக் கொண்டு அங்கு குறிவையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டு அதையே நீண்ட நேரம் செய்யுங்கள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவது பிடித்திருந்தால் அதைச் செய்யுங்கள். நாவால் வருடுவது தான் இஷ்டம் என்றால் அதையும் செய்யுங்கள். விரல் விளையாட்டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.


பெண்களுக்கு ஏற்படும் உணர்ச்சிக்குவியல்

முன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிதமான இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத் தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக் கெவ்வளவு முன் விளையாட்டு நீளுகிறதோ, அந்த அளவுக்கு பெண்களுக்கு இன்பம் கூடுகிறதாம்.

Meaning of fourplay

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உணர்ச்சிக் குவியலாக இருப்பவர்கள் பெண்கள். அதேபோலத்தான் ஆண்களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.

வெறும் கண் இமையில் கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும் போது கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப் புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியாது. கரங்களின் காந்தப் பிடிக்குள் உங்களது துணையை கட்டுண்டு போகவைக்கலாம். மோகத்தின் கதகதப்பு உங்களுக்குள் காமத்தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.

ஒரு நிமிட உறவாக இருந்தாலும் ஒரு மணி நேர முன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போது தான் நீடித்த இன்பமும், படுக்கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள். எனவே நிறைய விளையாடுங்கள், முழுமையான சந்தோஷத்தை எட்டிப் பிடியுங்கள்.

Meaning of fourplay

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍?

தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்கணக்கில் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சலிக்க சலிக்க முத்தமழையால் துணையை நனைய வைக்கின்றனர். ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்றனர்.

உறவு முடிந்த பின்னரும் அன்பாய் அரவணைத்து முத்தமிட வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். உறவுக்கு பிந்தைய நிலை பற்றி ஆய்வு செய்துள்ள ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ சுவாரஸ்யமான சில கிளுகிளு சமாச்சாரங்களை வெளியிட்டுள்ளன.

Meaning of fourplay


முன் விளையாட்டில் ஆர்வம்

உறவுக்கு முன் துணையை தூண்டுவதற்காக சின்னச் சின்ன விளையாட்டில் ஈடுபடுவது ஆண்களின் வழக்கம். அப்போது வெட்கப்பட்டு ஒதுங்குவது பெண்களின் வழக்கமாம்.

Meaning of fourplay

அன்பான அரவணைப்பு அவசியம்

170 பேரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஆண்களை விட பெண்கள் சில விசயங்களுக்கு முக்கியம் கொடுப்பதாக கூறியுள்ளனர். செக்ஸியான பேச்சு, முத்தம், கட்டி அணைத்தல், போன்றவைகளை விரும்புவதாக கூறும் பெண்கள் உறவுக்குப் பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

Meaning of fourplay

முன்னும் பின்னும் முத்தம்

உறவுக்கு முந்தைய முன் விளையாட்டின் போது முத்தமிடுவது ஆண்களுக்கு பிடிக்கும் என்றால் உறவுக்கு பின் முத்தமிடுவதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம்.

Meaning of fourplay

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை

உறவு முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்துவிட்ட நேரத்தில் ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மெல்லியதாய் காதோரம் பேசவும், வாஞ்சையாய் தடவிக் கொடுத்து முத்தமிடவும் பெண்கள் விரும்புகின்றனராம்.

Meaning of fourplay


ஐ லவ் யூ அவசியம்

பெரும்பாலான தம்பதிகள் உறவிற்குப்பின்னர் ஐ லவ் யூ என்று சொல்வதை விரும்புகின்றனர். அதுவும் இறுக்கமான அணைப்பில் காதோரம் கிசுகிசுப்பாய் சொல்ல வேண்டுமாம். அதன் பின் மேலும் கிக் ஏறி ஒரு ரவுண்ட் போக வாய்ப்புள்ளது.

காமத்தில் பெண்களைத் திருப்திப்படுத்த சரியான கோணத்தில் அணுகவேண்டும். அது எப்ப‍டி?

அதுதான் முறையான முன்விளையாட்டு. பெண்களை திருப்திப்படுத்துவதுதான் கஷ்டம் என்று சொல்பவர்களுக்கு இன்னும் தாம்பத்ய உறவு குறித்து கூடுதல் விவரம் தேவை என்று அர்த்தமாகும்.

Updated On: 2 Oct 2023 8:05 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  8. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  9. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  10. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...