/* */

ஜனனம் வரவு; மரணம் செலவு. அவ்வளவு தாங்க வாழ்க்கை

Maranam Quotes in Tamil-ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவி என்று நாமம் படையாதே, மேவியசீர் வித்தாரமுங் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி

HIGHLIGHTS

ஜனனம் வரவு; மரணம் செலவு. அவ்வளவு தாங்க வாழ்க்கை
X

கல்லறை (காட்சி படம்)

Maranam Quotes in Tamil-மரணத்தை வாழ்வின் உச்சம் என்கிறார் ஓஷோ. மேலும் மரணம் இருப்பதால்தான், வாழ்வு ஒரு சவாலாக, சுவை கூட்டுவதாக இருப்பதை புரிந்து கொள் என்கிறார். மனதின் பிடியில் சிக்காமல் இயல்பாக இயற்கையாக உள்ளுணர்விலிருந்து வாழும் ஒரு மனிதன் மரணத்தைப் பற்றி பயம் கொள்ள மாட்டான். மாறாக அதை வரவேற்பான் என்கிறார்

செத்துக் கிடக்கும் பிணத்தருகே யினிச்சாம் பிணங்கள்

நத்துங் கணக்கென்ன காண்

என்கிறார் பட்டினத்தார்.

மரணம் என்பது என்றோ எப்போதோ நிகழ்வதில்லை. ஒவ்வொரு உள் மூச்சும் பிறப்பு. ஒவ்வொரு வெளி மூச்சும் இறப்பு.

தலை முடி உதிர்வது மரணம். விரல் நகம் வெட்டப்படுவது மரணம். பல் விழுவது மரணம். கண்பார்வை குறைவு மரணம்.

இப்படி ஒவ்வொரு கணமும் மரணம் நமக்குள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

உடலெடுத்து பூமியில் விழும்வரை தான் பிறப்பிற்கு மகத்துவம்.

இந்த உடல் மண்ணில் விழுந்த அந்த கணம் முதல் இறப்பை நோக்கிய பயணத்தில் தான் சென்று கொண்டிருக்கிறோம்.

இதைத்தான் மகான்கள் "மரணத்திற்கும் முன் "நீ" மரணித்து விடு" என்றும்,

இஸ்லாத்தில், "உனக்கு தொழுகை நடத்துவதற்கு முன் நீ தொழுது எழு" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு

என்கிறார் வள்ளுவர்

நிலையற்ற வாழ்க்கையில், உறக்கத்திற்குப் பிறகு விழிப்பதைப் போன்றது பிறப்பு; திரும்ப விழிக்க முடியாத மீளா உறக்கம் கொள்வதே இறப்பு.

மரணம் பற்றிய பொன்மொழிகள் உங்களுக்காக

மரணம் என்பது மலர், வாழ்க்கை என்பது மரணத்தை தவிர வேறொன்றுமல்ல.மரம் மலருக்குகாகவே இருக்கிறது, ஆனால் மலர் மரத்திற்காக இல்லை.மரம், அதில் மலர் வரும்போது, கண்டிப்பாக மகிழ்ச்சி கொள்ள வேண்டும், நடனமாட வேண்டும்.

மரணம் தியானம் செய்யப்பட வேண்டிய ஒன்று. இல்லாவிடில் வாழ்வு நமக்கு தவறான நம்பிக்கைகளை தந்துகொண்டே இருக்கும்.நாம் மரணத்தை நினைவில் கொண்டிருந்தால், வாழ்வு அதற்குமேல் நம்மை ஏமாற்ற முடியாது.

"மரணம் நம்மை எதையும் சந்திக்கும் உணர்வோடு வைத்திருக்கும் ".

மரணம் மிகவும் சக்தி வாய்ந்தது.ஆனாலும் ஒன்றை மட்டும் அது நம்மிடமிருந்து எடுத்து கொள்ள முடியாது, அதுதான் தியானம்.

பழுத்த இலை மண்ணில் விழும்போது அது மரத்திற்கும் வலி எற்படுத்துவதில்லை,

காற்றுக்கும் பாரம் இல்லை, மண்ணில் விழும் சத்தமும் இல்லை...

அதுவே இயற்கையானது

இயற்கை மரணம்

மரணம் மிக முக்கியமானது. தவிர்க்க முடியாதது. நிச்சயமானது. வாழ்வுக்கு அர்த்தத்தைக் கொடுப்பது. மனிதனிடம் மிகப் பெரிய அச்சத்தை விளைவிப்பது. மனிதன் மறக்க விரும்புவது, ஆனால் அவனுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பது.


நல்லவன் கெட்டவன்

ஏழை பணக்காரன்

யாராக இருந்தாலும் ஒரே நீதி!

மரணத்தின் முன் மட்டுமே.


தன்னை வெல்ல யாரும் இல்லை

என்ற அகந்தையில் வாழ்ந்தவரும்

வெறும் ஆறு அடி குழிக்குள் அடங்கும்

தருணம் தான் "மரணம்".

வாழ்க்கை என்னும் வகுப்பறையில்

ஒவ்வொரு மாணவனுக்கும்

இறுதி பாடம் "மரணம்".

மூச்சை இழுக்க மறந்தால் 'மரணம்'.

இழுத்த மூச்சை விட மறந்தால் 'மரணம்'.

அவ்வளவு தான் "வாழ்க்கை"...!

சில வலிகள் மரணத்தை அருகில் காட்டலாம்,

சில வலிகள் மரணித்த அனுபவத்தை அளிக்கலாம்

இதெல்லாம் ஒருமுறையல்ல, பலமுறை நிகழலாம்

இறுதியாய் தழுவும் மரணம் என்பதெல்லாம்

வெறும் வார்த்தை மட்டுமே

மரண பயம் வாழ்க்கையின் பயத்திலிருந்து வருகிறது. முழுமையாக வாழும் ஒரு மனிதன் எந்த நேரத்திலும் இறக்கத் தயாராக இருக்கிறான் - மார்க் ட்வைன்

மரணம் வருவதோ உறுதி ஆனால் இறப்பதற்கு என்று மேலான இலட்சியத்தைக் கொண்டிரு மேலானதொரு குறிக்கோளுக்காக வாழ்ந்து இறந்தபோவது மிகவும் சிறந்தது – சுவாமி விவேகானந்தர்

மரணம் நேரு வதைத் தடுப்பதற்கில்லை என்னால் கற்களைப் போலவும் கட்டைகளைப் போலவும் செத்து மடிவதைவிட வீரர்களைப் போல இறப்பது மேலானது அல்லவா? நிலையில்லாத இந்த உலகிலே இரண்டொரு நாள் அதிகமாகவே வாழ்ந்து விடுவதனால் பெறப் போகிற பயன்என்ன? வாழ்க்கை என்னும் கத்தி துருப்பிடித்து அழிந்து போவதை விடத் தேய்ந்து அழிவதே மேலானது. அதிலும் குறிப்பாக மற்றவர்களுக்கு ஒரு சிறிதளவிற்கு நன்மை செய்வதற்காக அழிந்துபோவது மிகவும் நல்லது. - சுவாமி விவேகானந்தர்

இந்த வாழ்க்கை எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கப் போகிறது இந்த உலகத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்குப் பின்னால் நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கு அறிகுறியாக எதையாவது விட்டுச் செல்லுங்கள்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்?

இதுதான் பாதை இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது.

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது.

அதை எதிர்கொள்ளும் தைரியம்

வந்துதானே தீர வேண்டும்.

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்

ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்.

அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்.

அதில் எட்டடுக்கு மாடி வைத்துக் கட்டடத்தைக் கட்டிவிட்டு

எட்டடிக்குள் வந்து படுத்தான்


பொதுவாக இறந்தபின்தான் இரங்கல்பா பாடுகிறோம். பண்டித நேரு இறந்தபோது கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாவில்

சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ

சஞ்சலமே நீ ஒரு சஞ்சலத்தைக் காணாயோ?

தீயே உனக்கொரு நாள் தீ மூட்டிப் பாரோமோ?

என எழுதினார்.

ஆனால் அதே கண்ணதாசன், தான் வாழ்ந்த காலத்திலேயே தனக்கு இரங்கல்பா பாடிக்கொண்டார்.

தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல்

செய்தவன்மெய் தீயில் வேக

போனால் போகட்டுமெனப் பொழிந்ததிரு

வாய் தீயில் புகைந்து போக

மானார்தம் முத்தமொடும் மதுக் கோப்பை

மாந்தியவன் மறைந்து போக

தானே எந்தமிழினிமேல் தடம் பார்த்துப்

போகுமிடம் தனிமைதானே!

இது தான் பக்குவம் என்பது. அது கண்ணதாசனிடம் அதிகம் இருந்தது.

மரணம் ஒரு வாழ்க்கையை முடிக்கிறது, ஒரு உறவை அல்ல. இறக்கும் நேரம் வரும்போது தான் இறக்க வேண்டும், எனவே வாழ்க்கையை விரும்பும் வழியில் வாழுங்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 24 Jan 2024 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!