/* */

Mahi Mahi Fish In Tamil-குழந்தைகளின் ஞாபகசக்தி வளர அயிலை மீன் கொடுங்க..!

பொதுவாகவே மீன் உணவு ஆரோக்யமான சத்துகளைக் கொண்ட உணவாகும். ஒவ்வொரு மீனுக்கும் தனித்தன்மைகள் உள்ளன. இன்று அயிலை மீன் குறித்து பார்ப்போம்.

HIGHLIGHTS

Mahi Mahi Fish In Tamil-குழந்தைகளின் ஞாபகசக்தி வளர அயிலை மீன் கொடுங்க..!
X

Mahi mahi Fish In Tamil-மீன் உணவு சமைக்கும் பெண்கள் (கோப்பு படம்)

Mahi Mahi Fish In Tamil

மஹி மஹி (mahi-mahi) என்று அழைக்கப்படும் மீன் தமிழில் அயிலை மீன் ஆகும். இந்த அயிலை மீன் கடற்பரப்பில் வாழும் நடுமுள் துடுப்புள்ள மீன் வகை ஆகும். இவை வெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. இவை உணவு மற்றும் அலங்காரம் போன்ற வணிக நோக்கிற்காகப் பெருமளவில் பிடிக்கப்படுகின்றன. இவை குறைந்த காலத்தில் அதிகளவு இனப்பெருக்கம் செய்யும் மீன்வகை ஆகும்.


Mahi Mahi Fish In Tamil

அயிலை மீன்கள் பொதுவாக 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வாழும். ஆண் மீன்களை விட பெண் மீன்கள் அளவில் சிறியதாக இருக்கும். அயிலை மீன்கள் வேகமாக வளரும் மீன்களில் ஒன்றாகும். இவை பொதுவாக வெப்பமான கடல் மேற்பரப்பில் வாழ்கின்றன. கொன்றுண்ணி வகை மீன்களான இவை பறக்கும் மீன்கள், நண்டுகள், கணவாய்கள் மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றை உணவாக உண்டு வாழ்கின்றன.

இவை வழக்கமாக 4-5 மாதங்களாக இருக்கும் போது இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகின்றன. பெண் அயிலை மீன்கள் ஒரு இனப்பெருக்கத்தின் முடிவில் சுமார் 80,000 முதல் 10,00,000 முட்டைகள் வரை இடுகின்றன. இவை வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை இனப்பெருக்கம் செய்கின்றன.

Mahi Mahi Fish In Tamil


அயிலை மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் :

அயிலை மீன்களில் அதிகளவு புரோட்டீன், ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் சாச்சுடேட்டட் கொழுப்புகள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமான அளவிலும் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களும் உள்ளன.

Mahi Mahi Fish In Tamil


இரத்த அழுத்தத்தை தடுக்கும்

அயிலை மீனில் உள்ள அதிகளவிலான அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், சாச்சுரேட்டட் கொழுப்புக்களைப் போன்று இரத்த நாளங்களில் படிந்து இரத்த ஓட்டத்தை தடை செய்யாமல், எளிதில் ஜீரணமாகி இரத்த ஓட்டத்தில் இடையூறு செய்யாமல், இரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்கிறது. ஒருவேளை உயர் இரத்த அழுத்த பிரச்னை இருப்பின், இந்த மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

Mahi Mahi Fish In Tamil

சர்க்கரை பாதிப்பை குறைக்கிறது

சில ஊட்டச்சத்து நிபுணர்கள், இறைச்சி உண்பதால் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதாக கூறுகின்றனர். அதாவது இறைச்சி உண்பதால், ஹார்மோன் தொடர்புடைய நோய்களான சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகரிக்குமாம். ஆனால் அயிலை மீனை உண்பதால், சர்க்கரை நோய்க்கான அபாயம் குறைவதாக கூறுகின்றனர்.

Mahi Mahi Fish In Tamil


மார்பக புற்றைத் தடுக்கும்

புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணியாக இருப்பது ப்ரீ ராடிக்கல்களாகும். இருப்பினும் சில வகையான புற்றுநோய் செல்கள் ஹார்மோன்களின் செயல்பாடுகளாலும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஹார்மோன் செயல்பாடுகளால் வரும் புற்றுநோய் தான் மார்பகப் புற்றுநோய். ஆனால் அயிலை மீனை உட்கொண்டால், மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம்.

Mahi Mahi Fish In Tamil


இதய ஆரோக்யம்

இதய ஆரோக்யத்தைப் பராமரிப்பதில் அயிலை மீன் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. இந்த சிறிய மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள், இரத்த ஓட்டத்தை சீராகப் பராமரிப்பதால் இரத்தம் உறைவதைத் தடுக்கப்படுகிறது. அதனால் இரத்த ஓட்டம் சீராகி இதயத்தின் செயல்பாட்டை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

Mahi Mahi Fish In Tamil


கண் பாதுகாப்பு

கண்களைத் தாக்கும் மாகுலர் சிதைவு நோய் பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டோரைத் தாக்கி, பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது. ஆனால் அயிலை மீனை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம், அதில் உள்ள போதுமான வைட்டமின்கள் கண்களின் ஆரோக்யத்தை மேம்படுத்தி, மாகுலர் சிதைவு நோயைத் தடுக்கிறது.

மேலும் நன்னீரில் வளரும் அயிலை மீனில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள், பார்வைக் கோளாறைத் தடுப்பதுடன், மாலைக் கண் நோய் மற்றும் சில நாள்பட்ட கண் நோய்களையும் தடுக்கிறது.

Mahi Mahi Fish In Tamil


சரும பாதுகாப்பு

அயிலை மீனில் உள்ள புரோட்டீன், வைட்டமின் இ சருமத்துக்கு ஆரோக்யம் தருகிறது. எனவே சரும பிரச்னைகள் வராமல் சருமம் ஆரோக்யமாகவும், அழகாகவும் இருக்க வேண்டுமானால், அயிலை மீனை உணவில் அடிக்கடி சேர்த்து வரலாம்.

ஞாபக சக்தி

ஞாபக சக்திக்கு அயிலை மீன் பங்களிக்கிறது. அயிலை மீனில் உள்ள ஒமேகா-3 மற்றும் பாஸ்பரஸ், மூளையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே உங்கள் குழந்தைகளின் ஞாபக சக்தி அதிகரித்து புத்திசாலியாக வளர அவர்களுக்கு அயிலை மீனை அடிக்கடி உணவில் கொடுங்கள்.

Mahi Mahi Fish In Tamil

எலும்பு வலிமை

அயிலை மீனில் பாஸ்பரஸ் மட்டுமின்றி, எலும்புகளை வலிமையாக்கத் தேவையான கால்சியமும் உள்ளது. ஆகவே, வளரும் குழந்தைகளுக்கு அயிலை மீனை அடிக்கடி கொடுப்பதால் அவர்களது எலும்பு வளர்ச்சி பெறுவதோடு, வலிமையாகவும் இருப்பார்கள்.

நோயெதிர்ப்பு சக்தி

அயிலை மீனில் உள்ள அமினோ அமிலங்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து நோய் வராமல் பாதுகாக்கிறது.

Mahi Mahi Fish In Tamil


கர்ப்பிணிகள், குழந்தைகள்

கர்ப்பிணிகள் அயிலை மீன் உண்பதால் அவர்களுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கச் செய்கிறது. மேலும் வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க அயிலை அடிக்கடி உணவில் அயிலை மீனைக் கொடுக்கலாம். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் சத்துக்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்யத்தை மேம்படுத்தி பாதுகாக்கிறது.

திசு புனரமைப்பு

உடலில் சேதமடைந்த திசுக்களை சரிசெய்து சீரமைக்க புரோட்டீன் அவசியம். புரோட்டின் பால், முட்டை போன்ற உணவுகளில் இருந்தாலும், அயிலை மீனில் இச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. எனவே உடலில் சேதமடைந்த திசுக்களை விரைவாக புனரமைக்க அயிலை மீனை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.

Mahi Mahi Fish In Tamil

அத்தியாவசிய குறிப்பு

அயிலை மீனில் ஏராளமாக சத்துக்கள் இருந்தாலும் கூட வாரத்தில் 3 முறைக்கு மேல் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்களும், ஊட்டச்சத்து நிபுணர்களும் கூறுகின்றனர்.

Updated On: 17 Oct 2023 6:50 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...