/* */

கிழங்கான் மீனிலுள்ள சத்துகள் எந்தெந்த நோயைக் குணப்படுத்தும்

Lady Fish in Tamil -கடல் வாழ் உயிரின மீன் வகை உணவுகளில் உள்ள சத்துகள் நம் ஆரோக்யத்தினை பாதுகாப்பதாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.

HIGHLIGHTS

கிழங்கான் மீனிலுள்ள சத்துகள்  எந்தெந்த நோயைக் குணப்படுத்தும்
X



குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ள கிழங்கான் மீன்.

Lady Fish in Tamil -மீன்களில் உயர்ரக புரதம், அயோடின், நல்ல கொழுப்பு என உடலை செயல்பட வைக்கும் வைட்டமின்-டி, ஒமேகா-3 மற்றும் பல்வேறு வைட்டமின்கள், மினரல்கள் இலவசமாக கிடைக்கும். ராமேஸ்வரம் பகுதியில் நம்பப்படுகிறது. இது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால், சென்னை சுற்றுப்புறபகுதிகளில் "தும்பிலி என்ற மீனை கிழங்கான் என்று சொல்லி விற்கிறார்கள். இருந்தாலும் தும்பிலியும் நல்ல சதைப்பற்றான மீன்தான்! என்ன... அதன் வாசனை சற்று கூடுதலாகவே வீசும்.

கடல் வாழ் உயிரினங்களான மீன் வகைகளில் அனைத்திலும் சத்துகள் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில மீன்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்ற வகைகளும்இருக்கத்தான் செய்கின்றன. நாம் சாப்பிடும் மீன் இன வகைகளின் வரலாறு தெரிந்து சாப்பிட்டால் நமக்கு என்னென்ன உடல் ஆரோக்ய பலன் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஆனால் இக்கால இளையோருக்கு எதிலும் விருப்பம் இல்லை. மீன் சாப்பிடுகிறார்களே தவிர அதன் பயன் என்ன? என்ன வகை மீன்? என்பதில் எல்லோரும் போதிய விபரம் பெறாதவர்களாக இருக்கின்றனர். ஒன்றுமட்டும் புரிந்துகொள்ளுங்கள். நாம் சாப்பிடும் உணவு எதுவாக இருந்தாலும் அதை சாப்பிடலாமா? அதனால் நமக்கு என்ன நன்மை? பசித்தால்தான் சாப்பிடவேண்டும் என்பது விதி. அதுபோல் சாப்பிடுகிறோமா? என எதையும் நினைப்பதில்லை.

கிழாங்கு வகை மீனை லேடி பிஷ் என்றும் சொல்வார்கள் ஆங்கிலத்தில். இதில் என்னென்ன சத்துகள் உள்ளன. இவை நம் ஆரோக்யத்தில் எந்தவித நோயைக்குணப்படுத்துவதாக உள்ளது என்பதைப் பற்றி பார்ப்போம்.

இதயநோய்க்கு

மீன் வகை உணவுகளை தினமும் சாப்பிடவேண்டும் என யாரும் சொல்லவில்லை. ஆனால் அதே நேரத்தில் வாரத்திற்கு இரு முறை எடுத்துக்கொள்வது நலம் என உணவு பாதுகாப்பு துறையே சிபாரிசு செய்துள்ளது.

எண்ணெய் நிறைந்துள்ள மீன் வகைகளை நாம் எடுத்துக்கொள்ளும்போது அவை நமது இதயத்துக்கு பாதுகாப்பினை அளிப்பதோடு மாரடைப்பிலிருந்து தடுக்கிறது.மேலும் எண்ணெய் அதிகம் கொண்டுள்ள மீன் வகை உணவுகள் ரத்தம் உறைதலை தடுப்பதோடு இதயத்தினையும் ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாக்கிறது.

அல்சீமர் நோய்க்கு

நம் மூளையிலுள்ள செல்களை பாதுகாக்கும் பணியினை கொழுப்பு அதிகம் கொண்டுள்ள மீன் உணவுகள் பாதுகாக்கிறது. இவ்வகை மீன் உணவுகளை உண்ணும்போது உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.பிரெஞ்சில் நடந்த ஆய்வில் யார் வாரத்திற்கு ஒரு முறை மீன் உணவுகளை எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுவதில்லை என தெரிவிக்கின்றனர்.

கேன்சரை தடுக்கிறது

மீன் சாப்பிடாதவரோடு மீன் சாப்பிடுபவரை ஒப்பி்டும் ஆராய்ச்சியில் மீன் சாப்பிடுபவருக்கு கேன்சர் நோய் ஏற்படுவதற்கான எந்த அறிகுறியும் ஏற்படவில்லை . அதே நேரத்தில் மீன் சாப்பிடாதவருக்கு கேன்சர் நோய் வளர்ச்சியடைவது கண்டறியப்பட்டுள்ளது ஸ்வீடன் ஆராய்ச்சியில். மீன்களின்கொழுப்பிலுள்ள செலீனியம் கேன்சரை தடுக்கும் பணியினை செய்கிறது.

மனஅழுத்தம்

இன்றைய நாகரிக பரபரப்பான உலகில் யாருக்குமே ஓய்விற்கு கூட நேரம் இல்லை. எல்லாம் தொழில்நுட்ப சாதனங்களின் வழியாக வேலை நடப்பதால் எப்போதும் டென்ஷன்.. டென்ஷன்தான். எனவே மனமானது அமைதி கிடைக்காமல் தவிக்கிறது.அதுவும் நாள்முழுக்க செய்யும் வேலையில் ஏதாவது பாதிப்பு அல்லது சர்வர் கிடைக்கவில்லை என்றாலே நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகிறது. அதுபோல் உள்ளவர்களுக்கு அடிக்கடி மனஅழுத்த பாதிப்பு ஏற்படும். இவர்கள் மீன் உணவினை எடுத்துகொண்டால் அதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது நமது மூளையிலுள்ள செரடோனின் என்ற வேதிப்பொருளை அதிகரிப்பதால் மன அழுத்தமானது குறைய வாய்ப்புகள் அதிகம் உண்டு.

ஆர்த்ரைடிஸ் நோய்க்கு

மீன் உணவுகள் சாப்பிடுவோர் நல்ல திடகாத்திரமான உடல் ஆரோக்யத்தோடு இருப்பதை நாம் கண்டிருப்போம். மீன்களில் அதிக சத்துகள் உள்ளதால் அவை பல நோய்களுக்கு குணமாக்கும் தன்மைபடைத்ததாக உள்ளது. அந்த வகையில் மீன் உணவுகளைமுறையாக சாப்பிடுவோருக்கு எந்தவித ஆர்த்ரைடிஸ் நோயும் ஏற்படுவதில்லை. அதேபோல் உடலி்ல் எந்த பகுதிகளிலும் வீக்கம் ஏற்படுவதும் இல்லை என ஆராய்ச்சிகள் நிருபித்துள்ளன.

மேலும் இத்தகைய லேடிபிஷ் , கிழாங்குமீனானது தோல் நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. எனவே மீன் உணவுகளை முறையாக அளவோடு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் உண்டு வந்தால் நமக்கு நோய் எதிர்ப்பு திறன் சக்தி அதிகரித்து பல நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 6 March 2024 4:16 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...