/* */

kumbakonam gold rate today கும்பகோணம் நகரில் இன்றைய தங்கம் கிராம் ஒன்றுக்கு விலை என்ன?.....படிங்க...

kumbakonam gold rate today கும்பகோணம் நகரில் இன்றைய தங்கத்தின் விலை என்ன என்று பார்ப்போமா? தங்கத்தின் விலையானது ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்தினைக் கொண்டிருக்கும்.படிங்க...

HIGHLIGHTS

kumbakonam gold rate today  கும்பகோணம் நகரில் இன்றைய தங்கம்  கிராம் ஒன்றுக்கு விலை என்ன?.....படிங்க...
X

ஏழையாக இருந்தாலும் ஒரு குண்டுமணி தங்கமாவது அவரிடம் இருக்குமுங்க...அந்த அளவிற்கான கவர்ச்சிகரமான பொருளாக விளங்கும் தங்கம் (கோப்பு படம்)

kumbakonam gold rate today

தங்கம் இது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் தினந்தோறும் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகும் ஒரு உலோகமாக திகழ்ந்து வருகிறது. தங்கத்தின் பயன்கள் ஆபரணங்கள் மட்டுந்தானா என்ன?. அறிவியலில் பல்வேறு விஷயங்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் கும்பகோண நகரில் இன்றைய தங்கத்தின் விலையானது நேற்றைய விலையைக் காட்டிலும் சற்று குறைந்துள்ளது.அதாவது இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 5505 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய ஒரு கிராமின் விலை ரூ- 5530 என விற்கப்பட்டு வந்த நிலையில் இன்றுகிராமிற்கு ரூ. 25 குறைந்துள்ளது.

kumbakonam gold rate today


kumbakonam gold rate today

அதேபோல் 8 கிராமின் இன்றைய விலையானது ரூ- 44040 என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய இதன் விலையானது ரூ. 44 ,240 என விற்கப்பட்டது. இன்று ரூ. 200 குறைந்துள்ளது.10 கிராம் தங்கத்தின் இன்றைய விலையானது ரூ- 55050 ஆகும்.இதன் நேற்றைய விலையானது ரூ. 55300 ஆக விற்கப்பட்ட நிலையில் ரூ- 250 குறைந்துள்ளது.

தங்கத்தினைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் விலையானது ஏற்ற இறக்கத்தினைக் கொண்டிருக்கும். அந்த வகையில் தங்கம் வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக விளங்குவதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிப் பார்ப்போமா? வாங்க...படிங்க....

வடமாநிலங்கள் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் தங்கத்தின் பயன்பாடு அதிகம். எந்த மாவட்ட தலைநகர் சென்றாலும் குறைந்த பட்சம் 10 நகைக்கடைகளைக் காணலாம். அந்த அளவிற்கு பெரும் வியாபார பொருளாக திகழ்ந்து வருவது தங்கம் மட்டுந்தான். நாம் சாதாரணமாக தமிழகத்தில் கல்யாணம் என்று சொன்னாலே பெண்ணுக்கு எத்தனை பவுன் போடுகிறார்கள் என கேட்பது வாடிக்கையான வார்த்தையாகிவிட்டது. அது ஏழையாக இருந்தாலும் அவர்களுடைய சக்திக்கு தகுந்தாற்போல் அவர்களுடைய பெண்ணுக்கு குறைந்த பட்சம் 5 பவுன் நகையாவது போடுவார்கள். இது தமிழர்களின் பண்பாடு என்பது ஆகிவிட்டது. ஆனால் மற்றமாநிலங்களில் தங்கத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

kumbakonam gold rate today


kumbakonam gold rate today

அதேபோல் அதிக தங்கம் நம்மிடம் இருந்தால் அது வளர்ச்சி அதாவது தங்கத்தின் விலையானது அக்காலத்தில் இருந்து ஏறிக்கொண்டேதான் வருகிறதே தவிர குறையவில்லை. இதனால் அதிக வசதி படைத்தவர்கள் தங்க நகைகளில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். தங்க நகையை எமர்ஜென்சி நேரத்தில் தற்காலிகமாக அடமானம் வைத்தும் பணமாக்கி பின் பணத்தைச் செலுத்திமீட்டு விடுகின்றனர். ஆகையால் தங்கம் என்பது நமக்கு தேவையான ஒன்றாகி விட்டது. இருக்கும் வரை செல்வாக்கையும், செல்வாக்கு இழக்கும்போது செல்வத்தையும் தரக்கூடிய பொருளாக இருப்பதால் இதனை பலரும் விரும்பி வாங்கி சேகரித்து வைக்கின்றர். அதனால நம்ம கிட்ட பணம் அதிகமாக இருந்தா ஒண்ணா பொன்னில் போடுங்க இல்லாவிட்டால் மண்ணில் போடுங்க.... அதாவது ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யலாம் பணம் விருத்தியாகும்....

Updated On: 11 Aug 2023 6:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!