/* */

kattu yanam rice-யானை பலம் வேணுமா..? அப்ப காட்டு யானம் அரிசி சாப்பிடுங்க..!

காட்டு யானம் அரிசி தென்னிந்தியாவில் பயிரிடப்படும் பல வகை பாரம்பரிய நெல் வகைகளில் இது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.

HIGHLIGHTS

kattu yanam rice-யானை பலம் வேணுமா..? அப்ப காட்டு யானம் அரிசி சாப்பிடுங்க..!
X

kattu yanam rice-காட்டு யானம் நெற்பயிர் (கோப்பு படம்)

kattu yanam rice, kattu yanam rice benefits, kattu yanam rice recipe in Tamil

காட்டுயானம் அரிசி, சிவப்பு அரிசி வகைகளில் ஒன்றாகும். காட்டில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு யானையை மறைக்கும் அளவிற்கு வளர்வதால், இந்த பெயரை இது பெற்றுள்ளது. காட்டில் யானையை மறைக்கும் அளவு உயரமாக வளர்வதால் இந்த நெல்லுக்கு இதற்கு காட்டு யானம் நெல் என்றும் அந்த நெல்லில் இருந்து பெறப்படும் கட்டு யானம் அரிசி என்று அழைக்கப்படுகிறது.

அதாவது காடு + யானை என்ற சொற்கள் இணைந்து காட்டு யானை என்ற சொல் மருவி காட்டு யானம் என்ற சொல்லாக அழைக்கப்படுகிறது.


காட்டு யானம் அரிசியில் உள்ள சத்துக்கள் :

100 கிராம் காட்டு யானம் அரிசியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்

ஆற்றல் – 189 கலோரிகள்

மாவுச் சத்து – 42.55 கிராம்

கொழுப்பு – 0.32 கிராம்

புரதம் – 3.81 கிராம்

நார்ச் சத்து – 0.7 மி.கி

சோடியம் – 273 மி.கி

பொட்டாசியம் – 102 மி.கி


காட்டு யானம் அரிசியின் பயன்கள் :

காட்டுயானம் அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம், சாதம், பாயாசம் மற்றும் கஞ்சி போன்ற பலவகையான உணவுகள் தயாரிக்கலாம். சாதாரணமாக மற்ற அரிசில் இருந்து செய்யப்படும் அனைத்து உணவுகளும் தயார் செய்யலாம்.

பொதுவாகவே சிவப்பு அரிசி வெள்ளை அரிசியை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக்க இருக்கிறது.

காட்டுயானம் அரிசி நன்மைகள்

பொதுவாகவே சிவப்பு அரிசி வெள்ளை அரிசியை விட ஆரோக்யத்திற்கு மிகவும் நல்லது.

காட்டுயானம் அரிசியின் சிவப்பு நிறத்திற்கு காரணம் அதில் இயற்கையாகவே உள்ள அந்தோசயனின் எனப்படும் சிவப்பு நிறமி அகும்.


காட்டு யானம் அரிசியின் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்

தோல் ஆரோக்யம்

காட்டு யானம் அரிசியில் அந்தோசயனின் எனும் ஆக்சிஜனேற்றி உள்ளது. இது சரும ஆரோக்யத்தைப் பராமரிப்பதற்கு திறமையாக உதவுகிறது. இது தோல் மற்றும் சருமத்தை இளமையாக வைத்திருப்பதிலும் தோல் அழற்சி போன்ற பிற தோல் நோய்களுக்கு எதிராக போராடவும் உடலுக்கு சக்தியை அளிக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் எதிர்ப்பு பண்பு :

அந்தோசயனின் என்பது ஒரு வகை பிளவனாய்டுகள் ஆகும். இது புற்று நோய்க்கு எதிராக போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் கல்லீரல் ஆரோக்யத்திற்கும் உதவுகிறது.


நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது

காட்டு யானம் அரிசியை மற்ற வகை அரிசிகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. மேலும் மாவுச் சத்து சற்று குறைவாக காணப்படுகிறது. எனவே இது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது.

மேலும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மற்ற வகை அரிசிகளை விட இது சிறந்த உணவாக உள்ளது.

ஒரு ஆள் உயரத்தை தாண்டி வளர்ந்து நிற்கும் காட்டு யானம் நெற்பயிர்.

மலச்சிக்கலைத் தடுக்கிறது :

காட்டுயானம் அரிசி மலச்சிக்கலைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க உதவும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது. இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து என இரண்டு வகை உள்ளது.

  • கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் பெரும் பங்குவகிக்கிறது.
  • கரையாத நார்ச்சத்து, செரிமான அமைப்பில் உணவுப் பொருள்களை சீராக நகர்த்த உதவுகிறது. இதன் மூலம் மலச்சிக்கலைப் போக்குகிறது.

ஆண்டி ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன :

மற்ற அரிசிகளை விட காட்டு யானம் சிவப்பு அரிசியில் கணிசமான அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. மேலும் இரும்பு, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற தாதுக்களும் செறிந்து காணப்படுகின்றன. அவை உடலில் உள்ள ஒவ்வொரு திசுக்களையும் செல்களையும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இந்த அரிசியில் உள்ள தாதுக்கள், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் காயங்கள் ஆறும் திறனை ஊக்குவிக்கின்றன.


காட்டுயானம் அரிசி தீமைகள் :

காட்டு யானம் அரிசியை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை.

ஏனெனில் அதிக அளவில் இதை சாப்பிட்டால் மயக்கம், நெஞ்செரிச்சல், வயிற்று வலி, ஜீரணக் கோளாறு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், உடல் ஆரோக்யம் இல்லாதவர்கள் காட்டு யானம் அரிசியை உண்பதற்கு முன் மருத்துவர் ஆலோசனைப் பெற்றுக்கொள்வது நல்லது.

இட்லி, தோசை

காட்டு யானம் அரிசி 1 படி

உளுந்து 3ல் ஒரு பங்கு

சிறிதளவு வெந்தயம்

போன்றவைகளை நன்றாக ஊறவைக்கவேண்டும். காட்டு யானும் அரிசி ஊறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். குறைந்தபட்சம் 10 மணி நேரங்கள் விடலாம்.

நன்றாக ஊறிய பின் கிரைண்டர் அல்லது ஆட்டுரலில் இட்டு பதமாக ஆட்டி எடுத்து அடுத்தநாள் காலை இட்லி அல்லது தோசை ஊற்றலாம். இட்லி இளஞ்சிவப்பு நிறத்தில் வாசனையாக இருக்கும்.


கஞ்சி

காட்டு யானம் அரிசியை வாணலியில் லேசாக இளம் சூட்டில் வறுத்துவிட்டு கஞ்சி வைக்கலாம். கஞ்சி வைக்கும்போது சிறிதளவு சீரகம் சேர்த்து வைக்கவேண்டும். கஞ்சி மணமாக இருக்கும். இதனுடன் பாசிப்பயிறு, கொள்ளு போன்றவைகளையும் சேர்த்து கஞ்சி வைக்கலாம்.

இதற்கு தொட்டுக்கொள்வதற்கு வேர்க்கடலை துவையல் சரியான ஜோடி.

கருவாடு சாப்பிடுபவர்கள் கருவாடு அல்லது நெத்திலி வறுத்தும் தொட்டுக்கலாம்.

மேலும் காட்டுயானம் அரிசியில் இடியாப்பம், புட்டு, அடை, பொங்கல், பணியாரம், பாயசம் மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம்.

Updated On: 9 Aug 2023 8:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்