/* */

கலவியும் ஒரு கல்விதான்..! அது ஒரு அறிவியல் பாடம்..!

Kalaviyal Meaning in Tamil-கலவி என்பது கூட ஒரு கல்விதான். அது அறிவியல் சார்ந்த உயிரினப்பெருக்க அறிவாகும். உடலுறவு மட்டுமே அல்லாமல் அறிவியல் சார்ந்த ஒரு செயல்பாடு என்பதை அறிதல் வேண்டும்.

HIGHLIGHTS

கலவியும் ஒரு கல்விதான்..! அது ஒரு அறிவியல் பாடம்..!
X

kalavi meaning in tamil-கலவி (கோப்பு படம்)

kalavi meaning in tamil-காதல் என்பதன் அடிப்படையில் காமம் இருக்கிறது என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. காதல் கொண்ட இருமனங்கள், உடலளவில் இணைவதே கலவி என்பதாகும்.இந்த கலவியில் பலவித கல்வியும் அடங்கியிருக்கிறது. கல்வி கற்பது போலவே கலவையையும் கற்றுத்தேறல் அவசியம்.

ஆமாம், ஆணின் உணர்வுகள் ஒரு எல்லைக்குள் முடிந்துபோகும். ஆனால் பெண்ணின் உணர்வுகளோ கொப்பளித்து நிற்கும். கலவி என்பது புணர்தல் என்பது பொருள். புணர்தலில் பெண்ணின் உணர்வுகளை உணர்ந்து அந்த பெண்ணிற்கும் கலவியின் முழு திருப்தியை உருவாக்குபவனே ஒரு பெண்ணை முழுமையாக ஆட்கொள்ளத்த தெரிந்தவன் என்று கூறலாம்.


பெண் மனக்கட்டுப்பாடு உடையவள். ஆனால், அவளுக்குப்பிடித்த ஒரு ஆணின் கை பட்டுவிட்டால் கலவியின் எல்லைத்தொடும்வரை ஒரு ஆண்மகனை கட்டி ஆள்பவளாவாள்.

கலவி என்பதை வெறும் உடற்சுகமாக மட்டுமே பார்க்காமல் அறிவியல் பூர்வமாக அணுகுதல் வேண்டும். கலவியில் இயற்கையும் பல்வேறு சுகங்களுக்கு ஏற்ப படைப்பினை உருவாக்கி வைத்துள்ளது. கலவியில் இணைவதற்கு முன்னர் சில முன்விளையாட்டுகள் உள்ளன. அவை உடலுறவுக்கு ஏற்ப இருவரையும் தயார்படுத்தும் நிலையாகும். இருவருக்கும் இன்பம் இருக்கும் வகையில் பெண்ணுறுப்பில் தேவையான உயவு நீர்மம் சுரப்பது, அதேபோலவே ஆணுறுப்பிலும் தேவையான சுரப்பிகள் உருவாவது என இயற்கை பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கி வைத்துள்ளது.

சங்க காலம் தொட்டே இலக்கியங்களிலும் கலவி பற்றிய பல படைப்புகள் உள்ளன. அவை ஆண்-பெண் உறவு, குழந்தைகள் பெறுவது, குடும்பமாக வாழ்வது என மனித குழுக்களை சமூக கட்டமைப்புக்குள் நிலைநிறுத்துவதாகும். அந்த மனித குழுக்களை ஒருங்கிணைக்கும் அடிப்படைக்காரணி கலவியே.

சங்க இலக்கியத்தில் பாலுணர்வு

சங்க இலக்கியம் சித்திரிக்கும் குடும்பம் என்ற அமைப்பு பாலுணர்வின் நெறிமையை மையமாகக் கொண்டுள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள் கொண்ட தனிக் குடும்பமே நடைமுறையிலிருந்தது. குடிப் பெருமையை முன்னிறுத்தும். இனக்குழுச் சமூக அமைப்பில் குடும்பம் இரண்டாம் நிலை பெற்றுள்ளது. குடியின் தலைவன் குறுநில மன்னன் போல அதிகாரம் மிக்கவன் அல்ல. இனக் குழுத் தலைவன், வீட்டிற்கு வந்த விருந்தினரை உபசரிக்க வாளை ஈடு வைக்குமளவு பொருளியல் வளமற்றவன்.

அவனுக்குக் கள் விற்பவன், கடனுக்குக் கள் தர மறுக்குமளவு குடியினரின் நிலைமை எளிமையாக இருந்தது. இத்தகைய குடிச் சூழலில் பெண்ணின் தனித்துவத்தை மதிப்பிட வேண்டும். சங்க காலம் என மதிப்பிடப் பெறும், 500 ஆண்டுகளில் தகவல் தொடர்பு வசதியற்ற நிலையில், வேறுபட்ட இனக்குழுக்களின் பண்பாடு பன்முகத்தன்மையுடையதாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் சங்க இலக்கியப் பிரதிகள் முன்னிறுத்தும் குடும்பப் பெண் ஒற்றைத் தன்மையுடையதாக இருப்பது ஏற்புடையதாக இல்லை.


பெண் விருப்பத்திற்கு பாலுணர்வு

சங்க இலக்கியப் பெண் தான் விரும்பிய ஆணைத் தேர்ந்தெடுத்து அவனுடன் பாலுறவு கொண்டு, பின்னர் அவனுடன் உடன் போக்குச் செல்லுமளவு சுதந்திரம் மிக்கவளாக விளங்குகிறாள். பெண்ணுக்குப் பரிசம் அளித்து அவளை மணக்க முயலுதல், பெண்ணின் வீட்டில் சில மாதங்கள் தங்கி அக் குடும்பத்தாரின் நன் மதிப்பைப் பெற்று மணம் செய்ய முயலும் ஆண் போன்ற மணமுறைகள், சமூகத்தில் பெண் மதிப்பை உறுதி செய்கின்றன.

இத்தகைய முறைகள் பெண் வழிச் சமுதாயத்தின் எச்சங்கள். பெண்ணின் வீட்டில் திருமணம் நடைபெற்ற போதிலும், மணமான பெண் பிறந்த வீட்டில் இல்லை என்பதும் குழந்தைகள் தாயின் குலத்தைச் சார்ந்தவர்களாகக் கருதப்படுவது இல்லை என்பதும் பெண் பற்றிய மதிப்பீட்டில் முக்கியமானவை.

ஒப்பீட்டளவில் தாய்-மகள் உறவு, தாய்-மகன் உறவு அழுத்தமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இதனால் குடும்ப உறவில் பெண்ணின் இடம் வலுவானது என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. சங்க இலக்கியத்தில் உறவினர் தொடர்பை விட, தான் சார்ந்து வாழும் குடியினருடனான வாழ்க்கையைப் பெரும் உறவாகக் கருதும் நிலை நிலவியது.

ஆண் -பெண் சமநிலை வேறுபாடு

காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சம நிலையை உருவாக்குகிறது என்றும் பெண்ணின் தனித்துவத்தை உறுதிப்படுத்துகிறது என்றும் பொதுவாக நம்பிக்கை உள்ளது. சங்க இலக்கியப் பிரதிகளை நுணுகி ஆராய்ந்திடும்போது, காதல் வயப்பட்ட நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்றத் தாழ்வுகள் இருப்பதனை அறிய முடிகின்றது.



பெண் என்பவள் போகப்பொருள்

ஆணின் உடைமைக்கு வாரிசு உருவாக்கிடவும் இனக்குழுச் சமூக அமைப்பைக் கட்டிக் காப்பாற்றவும் பெண்ணின் தூய உடல் தேவைப்படும் நிலையில் `காதல்' முன்னிறுத்தப்பட்டுள்ளது. ஆணும் பெண்ணும் உழைத்து வாழும் வாழ்க்கையில் காதல் இருக்கும்; காதல் பற்றிப் புனிதமாக இட்டுக் கட்டப்படும் நிலை இருக்காது. காதல் அதியற்புதமானது; தெய்வீகமானது; புனிதமானது; ஒரே ஒருமுறை தான் ஒருவர் வாழ்வில் மலரும்; சொர்க்கத்தில் கடவுளால் நிச்சயிக்கப்படுகிறது; போன பிறவியின் தொடர்ச்சி; எல்லாப் பிறவிகளிலும் தொடர்ந்து வரும் மேன்மையானது... இவ்வாறு காதல் பற்றி இட்டுக் கட்டப்பட்டவை முழுக்கப் பெண்ணைக் குறி வைத்துத்தான் செயற்படுகின்றன.

காதல் சிறை

தூய்மையான காதலை முன்னிறுத்தி, காதலுக்காகக் காத்திருக்கும் பெண்ணுடல்களைக் கட்டமைத்திடும் சமூகச் சூழலில், காதல் என்பது பெண்ணுக்குச் சிறை. சுதந்திரமாக வெளியில் புழங்கிக் கொண்டிருந்த பெண்ணை, அவளுடைய இயல்பான பாலியல் விருப்பத்தை அடக்கி விட்டு, அதற்கு மாற்றாகக் காதலை முன்னிறுத்துவது, அவளைப் பொறிக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். காதல், கற்பொழுக்கம் என்பது பெண்ணுக்கெனவும், காதல் களவொழுக்கம், பரத்தமை ஆகியன ஆணுக்கானதாகவும் சங்க காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், ஆண்-பெண் பாலியல் உறவு கேள்விக்குள்ளாகிறது.

வன்புணர்வு

எதிர் இனக் குழுவினரைப் போரில் வென்று தோல்வியடைந்த குழுப் பெண்களைக் கவர்ந்து வந்து, கொண்டி மகளிராக்கிப் பரத்தமையில் ஈடுபட்டது ஆணின் வீரமாகப் போற்றப்பட்டது. பெண்ணின் இருப்பு அங்குதான் கேள்விக்குள்ளாகின்றது. இதுவும் ஒரு வன்புணர்வுதானே?


புணர்ச்சிக்கு காத்துக்கிடக்கும் பெண்ணாகவே சித்தரிப்பு

சமூக அமைப்பில் பெண்ணின் நிலையானது தொடர்ந்து ஆண் மையம் நோக்கி ஈர்க்கப்படுவதாகச் சங்கக் கவிதைகள் சித்திரிக்கின்றன. பெண்ணுடல் புணர்ச்சிக்குரிய காதலி, பரத்தை, மனைவி, காமக்கிழத்தி, புணர்ச்சிக்காக ஏற்பாடு செய்யும் தோழி என்று எப்பொழுதும் தன்னைப் புணர வரும் ஆணுடலுக்காகவே காத்துக் கிடக்கின்றது. காதல் என்ற மனவுணர்வு மூலம் தனக்கான ஆண் உடலைக் கண்டவுடன், தன்னை முழுமையாக அவனிடம் ஒப்படைத்துத் தன்னிலை இழக்கிறது பெண்ணுடல்.

காமம் என்னும் கலவி

அடக்கியொடுக்கப்பட்ட பெண்ணுடலிலிருந்து, தான் விரும்பிய பிரதியான உடலைப் பிரதியெடுத்து, அதை ஆண் விரும்பிய சொல்லாடலில் புதைப்பதன் மூலம், மீண்டும் மீண்டும் ஆணுக்கு அடிமையான பெண்ணுடலை உற்பத்தி செய்யக் `காதல்' போதை போலப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படை ஒன்றுதான், அது காமம் என்னும் கலவிக்கானது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 March 2024 6:58 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!