/* */

இயற்கை நின்று கொல்லும்..! இயற்கையை நேசி..இயற்கையுடன் இணைந்து வாழ்..!

Iyarkai Patri Kavithaigal-இயற்கையை இன்று நாம் கொன்றால் இயற்கை நம்மை நின்று கொல்லும். இதை அறிவாய் மனிதா..!

HIGHLIGHTS

Iyarkai Patri Kavithaigal
X

Iyarkai Patri Kavithaigal

Iyarkai Patri Kavithaigal

இயற்கை, இந்த பூமியின் வரப்பிரசாதம். விரிந்து கிடக்கும் வானம், கால்களில் மிதிபடும் பூமி, பூமியில் வான்தொடும் மலைகள்..மலைகளில் வளர்ந்திருக்கும் விதவிதமான மரங்கள், செடிகள்,கொடிகள்..! அந்த மரக்கூட்டங்களுக்குள் வளரும் விலங்குகள், பறவைகள், வகைவகையான பூச்சியினங்கள் அத்தனையும் இந்த பூமியின் பொக்கிஷங்கள்..! சூரியன்,சந்திரன் இந்த புவிக்கு கிடைத்துள்ள நிஜ அமிழ்தங்கள்..! இந்த இயற்கை இல்லாமல் உயிரினங்கள் இல்லை. மனித செயல்பாடுகள் இந்த பூமியின் இயற்கைத்தன்மையை அழிப்பதாகவே இருக்கிறது.

  • iyarkai kavithai in tamilமனதில் பல துன்பங்கள் இருந்தாலும் கூட மெல்லிய சாரலோடு மழையில் நனையும் போது துன்பங்கள் கூட சந்தோசமாக மாறி விடுகிறது..!
  • பொழியும் மழைத் துளிகளுக்கு தெரிவதில்லை பல உயிர்களின் தாகத்தை தீர்க்கத் தான் சென்று கொண்டு இருக்கிறோம் என்று..மழைக்குத் தெரியாது மழையின் அருமை..!
  • தங்கள் வீடுகளை இழந்து வீடற்ற அகதிகளாக அலையும்.. பறவைகளுக்கு தான் புரியும் மரங்களின் அருமை...! இல்லாதபோதுதான் ஒன்றின் அருமை தெரியும் என்பது பறவைகளுக்கும் பொருந்துகிறது..!
  • பகல் பொழுதுக்கு இரவாடை ஒன்றுண்டு..!தினமும் இரவு வந்தால் கருப்பு நிற உடையை அணிந்து கொள்கிறது பகல்பெண்..!

  • சில நொடிப் பொழுது வாழ்ந்தாலும் தானும் குதூகலமாக வாழ்ந்து தன்னை ரசிப்பவர்களையும் பரவசமாக்குகிறது பனித்துளி..! பிறரை மகிழ்விப்பதுபோல மனிதரும் பிறரை மகிழ்விக்கவேண்டும்..!
  • மரத்தடியில் உதிர்ந்து கிடக்கும் மலர்கள், தன்னை வளர்த்துவிட்ட வேர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்து வணங்குகின்றனவோ..!
  • கடல் அலைகாதலி கரைக்காதலனைத்தேடி ஒவ்வொரு முறை வந்தும் முத்தமிட்டுச் சென்று அன்பை வெளிப்படுத்துகின்றன..!
  • இந்த உலகில் யாரும் அனாதை அல்ல..இனிமையைக் கற்றுத்தரக் காற்றும் வழிகாட்ட வானமும் இருக்கும் வரை..இங்கு யாரும் அனாதைகள் அல்ல..!
  • இயற்கையை செழிக்க வைத்தால் இயற்கை நம்மை செழிக்க வைக்கும்..! இயற்கையை நாம் அழிக்க நினைத்தால் இயற்கையே நம்மை அழித்து விடும்..! எதை விதைக்கிறோமோ அதுவே அறுவடையாகும்..!
  • ஆறாத காயங்களுக்கு நீண்ட தூர பயணமும் இயற்கையும் தான் சிறந்த மருந்தாக இருக்கின்றது. புத்துணர்ச்சி பெற இயற்கையைப் பார்த்தால் போதும்..!
  • இயற்கையின் ரகசியம் தினமும் வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கத்தான் மூடி மறைகின்றதோ இரவு..!
  • யாரைத் தேடி அலைகின்றாய் நிலாப்பெண்ணே..! உன் சூரியக்காதலன் காலையில்தான் வருவான்..பின் ஏன் இரவு முழுவதும் அலைந்து கொண்டே இருக்கின்றாய்..? விடியும் வரை பொறுத்திரு..நிலாபெண்ணே..!
  • இயற்கையின் மடியில் அவ்வப்போது வந்து இளைப்பாறுகிறது இடியும் மின்னலும்..ஆமாம் மழை விட்டுப்போவதற்குத்தான் இடியும் மின்னலும் வருகிறதோ..?
  • இரு மேகங்கள் கரு கொண்டு ஒன்றோடு ஒன்று மோதும்போது மின்னல் மோதிரம் மாற்றிக் கொள்கிறது..! இடி மேளம் அடிக்கிறது..! காற்று நாயனம் ஊதுகிறது..!
  • வானக்காதலன் மேகக்காதலியை கைவிட்டதால் மேகக் காதலி அழுது கண்ணீர் வடித்ததால் அதுதான் மழை ஆனதோ..?!
  • நீலவான் அரண்மனையில் நட்சத்திர காவலர்கள் புடைசூழ பாதுகாப்பாய் இருக்கிறாள் நிலா இளவரசி..! மேகச் சாளரம் வழியே எட்டிப்பார்க்கும் அழகே அழகு..!
  • தானும் வாழ்ந்து உயிரினங்களையும் வாழவைப்பது இயற்கை..! ஆனால் மனித சுயநலன்களுக்காக இயற்கையை அழிப்பதால். இயறக்கை சீற்றம் கொண்டுள்ளது..! அதுவே சுனாமி, புவியதிர்ச்சி, புயல்,வெள்ளம் என மாறி மாறி வேரறுக்கிறது..!
  • பூமிக்கு நீர்பாய்ச்சும் மழை..! மழைக்கு உயிராகும் மரம்..! மரத்திற்கு உயிராகும் மழை..! இதன் சுழற்சியே வாழ்க்கை..! அழிந்து பிறப்பது..!
  • கோபங்கள் சீற்றங்கள் மனிதனுக்கு மட்டும் அல்ல..இயற்கைக்கும் உண்டு. நாம் இயற்கையை கட்டுப்படுத்த நினைத்தால், அது நம்மை அழித்து பாடங்கள் கற்பிக்கும்..!
  • இயற்கையின் கோபம் அறியாமல் மனிதனே மனிதனுக்கு எமனாக மாறுகிறான்..அவனுக்கு அவனே சூனியம் வைத்துக்கொள்கிறான்..! இயற்கையை காப்போம்..! மரங்களை வளர்ப்போம்..! கரிம வாயுக்கள் பயன்பாட்டை குறைப்போம்..!
  • நீ செய்யும் செயலை மற்றவர்கள் ரசிக்கவில்லை என்பதற்காக நிறுத்தி விடாதே..சுட்டெரிக்கும் சூரியனை எவரும் ரசிக்கவில்லை..என்பதற்காக சூரியன் உதிக்காமலா போய் விடுகிறது..தன கடமையை தவறாது செய்யும் சூரியனைப்போல நீ வாழ்ந்துகாட்டு..!
  • வானத்தில் இருந்து வரும் மழைத்துளி மண்ணை நனைக்கும் முன் பல விவசாயிகளின் மனதை நனைத்து விடுகின்றது. ஈர மனசுக்காரி மழை..! விவசாயிகளின் தாய்க்கிழவி..மழை..!

  • ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்பார்கள்..! ஆனால், அந்த ஏழைகளை தரிசிக்கத் தான் இவ்வுலகில் யாரும் இல்லை..!
  • மலையின் உச்சியில் இருந்து விழுந்தாலும் எனக்கு மரணமில்லை என்கிறாய் நீர்வீழ்ச்சியே..! எனக்கும் அந்த ரகசியம் கற்றுத் தா..!
  • நான் விடும் மூச்சு காற்றில் தான் நீ வாழ்கிறாய். என்னை அழிப்பது உன்னை நீயே வதைப்பதற்கு சமம்...இயற்கையின் வேதனைக்குரல்..!
  • இன்று நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்..! நாளை நாங்கள் உங்களை எப்போதும் காப்பாற்றுவோம் -இப்படிக்கு "மரங்கள்"
  • இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவறும் கிடையாது. நிரந்தரமானது இயற்கையும் இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே..! இதை உணர்ந்தால் மட்டுமே மனிதன் வாழ்வான்..!
  • இயற்கையை போற்றி நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பரிசுதான் இயற்கை... இயற்கையை காப்போம். நல்ல இயற்கையை விட்டுச் செல்வோம் அடுத்த தலைமுறைக்கு பரிசாக..!
  • எங்கு எதை தொலைத்ததோ தெரியவில்லை, இந்த வானம்...? இப்படிக் கண்ணீர் வடிக்கிறதே மழையாக...!
  • ஏழை,பணக்காரன் என்ற பாரபட்சம் வேறுபாடுகள் அறியாதது இயற்கை மட்டுமே..! அது எல்லோருக்கும் சமமாகவே கொடுக்கிறது..அது எதுவாக இருந்தாலும் சரி..!
  • நீ இயற்கையை அழிப்பது சரி தான் என்றால், உன்னை இயற்கை அழிப்பதுவும் சரி தானே.?! பின்னர் எதற்காக அலுத்து புலம்புகிறாய்..!
  • வீட்டுக்கு வீடு மரம் வளர்த்து வீதி அனைத்தும் பசுமை செய்வோம். பூமியை நாம் குளிர்வித்து பூவுலகை நாம் காத்திடுவோம்..!


  • தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறான் மனிதன்..! தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்கிறான் மனிதன்..! இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து..தான் அழியப்போவது தெரியாமல்..!
  • இயற்கையை நாம் வைச்சு செய்தால், இயற்கை திரும்ப நம்மளை வைச்சு செய் செய் என்று செய்துவிட்டு போய்விடும்...! அதனால் இயற்கையை காப்பது நமது கடமை..!
  • வாசமில்லா மலர்களுக்கும் வாசம் கொடுப்போம்.. நேசமில்லா நெஞ்சங்களிலும் அன்பை விதைப்போம்..! துயர்வரும் வேளைகளில் தோள் கொடுப்போம்..! இயற்கையைத் தாய் போல் போற்றி மதிப்போம்..!
  • இயற்கை இறைவனின் பரிசு. உருவாக்கி விட்டு அழித்தால் நியாயம். அழிப்பதை மட்டுமே வேலையாகக் கொண்டால் அது பாவம். அது அடுத்த தலைமுறைக்கு செய்யும் துரோகம்..!



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 13 March 2024 8:54 AM GMT

Related News