/* */

ஏங்க... உங்களுக்கு இந்தியாவைப் பற்றிய வரலாறு .... தெரியுங்களா? முதல்ல படிச்சு பாருங்களேன்....

Indian History in Tamil-பாரத நாடு பழம்பெரும் நாடு. இந்நாடானது ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு பின்னர் 1947 ம்ஆண்டு ஆகஸ்ட் 15 ந்தேதி நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தது.

HIGHLIGHTS

Indian History in Tamil
X

Indian History in Tamil

Indian History in Tamil

நாட்டிற்காக தன் உயிரையே அர்ப்பணித்துள்ள இந்திய ராணுவ வீரர்கள் தேசியக்கொடியுடன்.

இந்தியா அதிகாரபூர்வமாக இந்தியக் குடியரசு தெற்காசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும்.இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியைத் தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது. இந்தியப் பெருநிலம் தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிக் கடல், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் எல்லை நாடுகளாக மேற்கே பாக்கிஸ்தான், வடக்கே பூட்டான், மக்கள் சீனக் குடியரசு, நேபாளம், கிழக்கே வங்காளதேசம், மியான்மர் ஆகியவை அமைந்துள்ளன. இலங்கை, மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் இந்தியப் பெருநிலம், மற்றும் இலட்சத்தீவுகளுக்கு அண்மையில் அமைந்துள்ளன.

மக்கள் தொகை

இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாய்லாந்து, இந்தோனேசியாவின் சுமாத்திரா ஆகியவற்றுடன் அந்தமான் கடலில் கடல் எல்லையைக் கொண்டுள்ளனபரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7,517 கிமீ (4,700 மைல்) நீளக் கடல் எல்லைக் கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நூற்று இருபத்தியொரு கோடி மக்கள் தொகையைக் கொண்டு உலகின் இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது

பொருளாதாரத்தில் பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் நான்காவது இடத்தில் இருக்கின்றது. உலகின் பண்டைய நாகரிகங்களில் இந்தியாவும் ஒன்று ஆகும். சிந்து சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா-மொகஞ்சதாரோ என்று அழைக்கப்படும் நாகரிகம் இங்கு தோன்றியது ஆகும்.


அனைத்து அம்சங்களுடன் இந்திய வரைபடம்

மிகப்பெரிய குடியரசு நாடு

இந்து சமயம், புத்தம், சமணம், மற்றும் சீக்கியம் ஆகிய நான்கு தலைமை மதங்கள் இந்தியாவிலேயே தோன்றின. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளினால் கைப்பற்றப்பட்டு, 1947, ஆகஸ்ட்15 அன்று விடுதலை பெற்றது. பின்னர் 1950, சனவரி 26 அன்று குடியரசாக அறிவிக்கப்பட்டு உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகத் திகழ்கிறது.

முகலாயப் பேரரசை அடிபணிய வைத்ததன் மூலம், 19ஆம் நூற்றாண்டில், கிட்டத்தட்ட முழு இந்தியாவினதும் அரசியல் கட்டுப்பாடு ஆங்கிலேயப் பேரரசிடம் போய்ச் சேர்ந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையேற்று நடத்திய வன்முறையற்ற அகிம்சைப் போராட்டம் 1947-இல் கிடைத்த இந்திய விடுதலைக்கு வித்திட்டது. இந்திய துணைக்கண்டம் மதச்சார்பற்ற இந்தியாவாகவும் இசுலாமிய நாடான பாகிஸ்தானாகவும் பிரிந்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இந்தியா குடியரசு ஆனது. தொடர்ச்சியற்ற நிலப் பகுதிகளான மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானிடையே 1971-இல் உள்நாட்டுப் போர் மூண்டதற்குப் பிறகு இந்தியத் தலையீட்டின் பேரில் கிழக்கு பாகிசுதான் வங்காள தேசம் என்ற தன்னாட்சி பெற்ற நாடாகப் பிரிந்தது. 1991-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியப்பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி பெறத்தொடங்கியது.

இயற்கை எழில்சூழ்ந்த வனப்பகுதிகளில் சுதந்திரமாக உலா வரும் யானைக்கூட்டம்

இயற்கை வளம், மனித வளம் மற்றும் பாதுகாப்பிற்கு உகந்த நில அமைப்பு ஆகியவை இந்தியாவின் தலைமை பலங்களில் சிலவாகும். பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினை, கவலை தரும் மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச் சூழல் சீர் கேடு, ஊழல் ஆகியவை இந்தியா எதிர் நோக்கும் சவால்களில் சிலவாகும்.

இந்தியா 28 மாநிலங்களையும் 8 ஒன்றியப் பகுதிகளையும் கொண்ட ஒரு கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு ஆற்றல்பூர்வமாக இந்திய சுதந்திர சமூகவுடமை சமய சார்பற்ற மக்களாட்சிக் குடியரசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரச நிர்வாகம் சட்டப் பேரவை, செயலாற்றுப் பேரவை, சுதந்திர நீதியமைப்பு ஆகிய மூன்று கூறுகளால் பேணப்படுகின்றது

இந்திய நாட்டின் தலைவராகக் குடியரசுத் தலைவர் இருக்கின்றார் எனினும் இவரது கடமைகள் பெரும்பாலும் மரபுவழிச்சடங்குகள் அடிப்படையிலேயே அமைகின்றன. குடியரசுத் தலைவரும் குடியரசுத் துணைத்தலைவரும் நாடாளுமன்ற மற்றும் மாநில, நாட்டு சட்டமன்றங்களின் (ஈரவை அமைப்பாயின் கீழவை) உறுப்பினர்களால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

குடியரசு தலைவர் /பிரதமர்

செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரைக் குடியரசுத் தலைவர் பிரதமாராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களைக் குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார்.

லோக்சபா

இந்திய நாடாளுமன்றம் இரு சட்ட அவைகளை கொண்டு உள்ளது. அவை மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகும். இவை இரண்டும் இந்திய கட்டமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.

அரசியல் கட்சிகள்

இந்தியாவில் பல கட்சி ஆட்சி முறை பின்பற்றப்படுவதால் எண்ணற்ற கட்சிகள் உள்ளன. இவை இந்தியாவின் தேர்தல் ஆணையத்தால், குறிப்பிட்ட சில அடிப்படைகளுக்கு அமைய, நாட்டுக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என இரண்டு பிரிவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, மத்தியில் பெரும்பாலும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியே ஆண்டு வந்திருக்கிறது. மாநில அளவில் பல்வேறு மாநிலக் கட்சிகள் செல்வாக்கு உள்ளவையாக விளங்குகின்றன. மற்ற பெரிய நாட்டுக் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜனதா தளம் ஆகியவை ஆகும்.

பாதுகாப்பு

இந்தியா உலகின் மூன்றாவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பிற்காக தரைப்படை, கடற்படை, வான்படை ஆகியவைகள் இந்தியப் பாதுகாப்புத் துறையின் இயங்குகிறது. இவற்றுடன் எல்லைப் பாதுகாப்புப் படை, இந்திய - திபெத் எல்லைக் காவல்படை, மத்திய சேமக் காவல் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை, கரையோரக் காவல்படை என்பன இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியக் குடியரசுத் தலைவரே, இந்தியப் படைகளின் உயர் தளபதி ஆவார்.

இந்திய நாடு ஒரு கூட்டாட்சிக் குடியரசு. இதில் 28 மாநிலங்களும், எட்டு ஒன்றியப் பகுதிகளும் ஒரு தலைநகரப் பகுதியும் அடங்கியுள்ளன. எல்லா மாநிலங்களிலும், ஒன்றியப் பகுதிகளான பாண்டிச்சேரி, டெல்லி தலைநகரப் பகுதி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத்தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது தவிர, அதிகம் மாற்றம் எதுவும் இல்லாமலேயே இம் முறைமை இயங்கிவருகிறது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், சிறிய நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மாவட்டங்கள் எனப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 600 மாவட்டங்கள் உள்ளன.

புவியியல் பரப்பளவு

பரப்பளவில் இந்தியா உலகில் ஏழாவது பெரிய நாடாகும்.இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியான இந்தியாவில் புவியியல் அடிப்படையில் மூன்று உட்பகுதிகள் உள்ளன. அவை, வடக்கே இமயமலைத்தொடர்கள் (உயரமான சிகரம் கஞ்சன்சுங்கா 8,598 மீ), இந்து-கங்கை சமவெளி (மேற்கில் தார் பாலைவனம்) மற்றும் தக்காணப் பீடபூமி. தக்காணப் பீடபூமி மூன்று திசைகளில் முறையே கிழக்கே வங்காள விரிகுடாக் கடல், தெற்கே இந்துமாக்கடல் மற்றும் மேற்கே அரபுக்கடல் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

இந்தோமாலய சூழ்நிலைவலயத்துள் அமைந்துள்ள இந்தியாவில் குறிப்பிடத்தக்க உயிரியல் பல்வகைமை காணப்படுகின்றது. 18 பெரும்பல்வகைமை நாடுகளுள் இதுவும் ஒன்று. உலகிலுள்ள மொத்த இனங்களுடன் ஒப்பிடும்போது, பாலூட்டி இனங்களில் 7.6%, பறவை இனங்களில் 12.6%, ஊர்வனவற்றில் 6.2%, ஈரூடகவாழிகளில் 4.4%, மீன்களில் 11.7%, பூக்கும் தாவரங்களில் 6.0% இந்தியாவிலே காணப்படுகின்றன.


தொழில் வளத்தில் தேவையான முன்னேற்றம் கண்டு வரும் இந்தியா.

தொழில் பொருளாதாரம்

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மற்றும் நாணய மதிப்பு 2001 மற்றும் பின் வரும் ஆண்டுகளில் மிகவும் நல்ல நிலையில் இருந்தன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $1.089 டிரில்லியன் டாலர்கள் அளவை எட்டியுள்ளது. பொருள் வாங்குதிறன் சமநிலை அடிப்படையில் $4.726 டிரில்லியன் (2,66,000 கோடி டாலர்) அளவுடன் உலகில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த இரு பத்தாண்டுகளாக 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியுடன் இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. 516.3 மில்லியன் அளவான இந்தியாவின் தொழிலாளர்படை உலகின் இரண்டாவது பெரிய தொழிலாளர்படை ஆகும். இவர்களில் 60 விழுக்காட்டினர் வேளாண்மை அல்லது அது சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். 28 விழுக்காட்டினர் சேவைத்தொழில்கள் அல்லது அது சார்ந்த துறைகளிலும், 12 விழுக்காட்டினர் தொழில்துறைகளிலும் பணிபுரிகின்றனர். இந்தியாவின் முதன்மை வேளாண்மைப் பயிர்கள் அரிசி, எண்ணெய்விதை, பருத்தி, சணல், தேயிலை, கரும்பு, உருளைக்கிழங்கு என்பனவாகும்.

மக்கள்தொகை

2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மக்கட்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கட்தொகை கடந்த பத்தாண்டுகளின் (2001–2011) வளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது.[39] அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது.

சமயம்

2011ஆம் ஆண்டைய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை ஆணையம் 27 ஆகஸ்டு 2015 அன்று வெளியிட்டுள்ள சமயவாரி மக்கட்தொகை கணக்கீட்டின்படி, இந்தியாவின் மொத்த மக்கட்தொகையான 121.09 கோடியில், இந்துக்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.7% ஆக குறைந்து, 96.63 கோடியாகவும் (79.08%), முஸ்லிம்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 0.8% உயர்ந்து, 17.22 கோடியாகவும் (14.2கிறித்தவர் மக்கட்தொகை 2.78 கோடியாகவும் (2.3%), சீக்கியர்கள் மக்கட்தொகை 2.08 கோடியாகவும் (1.7%), சமணர்கள் மக்கட்தொகை 45 இலட்சமாகவும் (0.4%), புத்த மதத்தினரின் மக்கட்தொகை 84 இலட்சமாகவும் (0.8%), சமயம் குறிப்பிடாதோர் 29 இலட்சமாகவும் (0.4%) உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுமுதன்முறையாக "சமயம் குறிப்பிடாதோர்" என்ற பிரிவு 2011 கணக்கீட்டில் சேர்க்கப்பட்டது

பண்பாடு, கலாச்சாரம்

இந்திய பண்பாடு உலகின் முக்கிய பண்பாட்டு ஊற்றுக்களில் ஒன்று. பல இன, மொழி, சமய, பண்பாட்டு தாக்கங்களை உள்வாங்கி இந்திய பண்பாடு வெளிப்பட்டு நிற்கின்றது. இப்பண்பாடு உயரிய, பலக்கிய (complex), பன்முக இசை, நடனம், இலக்கியம் எனப் பல கூறுகளைக் கொண்டது. இந்திய பண்பாட்டின் தன்மை, வெளிப்பாடு, ஆழம் பல நிலைகளைக் கொண்டது. பின் வருவன ஒரு சுருக்கமே.


இந்திய கலையான பரதநாட்டியம் ஆடும் பெண்கள்.

கலைகள்

கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை இரு முக்கிய செந்நெறி இசை மரபுகள் ஆகும். கர்நாடக இசை தெற்கிலும், இந்துஸ்தானி இசை வடக்கிலும் தோற்றம் கொண்டன. இந்துஸ்தானி இசை இஸ்லாமிய இசையின் தாக்கங்களை உள்வாங்கிய ஒரு மரபு. இவைதவிர நாட்டார் இசை, தமிழிசை எனப் பல வேறு இசை மரபுகளும் வெளிப்பாடுகளும் உண்டு. இந்திய நடனக்கலையில் பரத நாட்டியம், ஒடிசி, குச்சிப்புடி, கதக், கதகளி போன்று பல நடன வெளிப்பாடுகள் உண்டு. நடனம்மூலம் கதைகளும் சொல்லப்படுகின்றன. இவைத் தவிர நாட்டுப்புறக் கலைகளான நடனங்களும், பொம்மை நடனங்களும் உண்டு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 March 2024 4:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!