hurt family relationship quotes in tamil-உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசும் உறவுகள்..போலிகளின் அக்மார்க்..!

hurt family relationship quotes in tamil-வீழும்போது கைகொடுக்காத உறவுகள் உயரும்போதான மகிழ்ச்சியில் மட்டும் பங்குகொள்ள துடிப்பார்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
hurt family relationship quotes in tamil-உள்ளொன்றுவைத்து புறமொன்று பேசும் உறவுகள்..போலிகளின் அக்மார்க்..!
X

hurt family relationship quotes in tamil-ஒருகாலத்தில் உறவுகள் பேர்சொல்ல வாழ்ந்த காலம் எல்லாம் போய்விட்டது. ஒரு திருமணம் என்றால் அக்கா, மாமா, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா மற்றும் இவர்களது குழந்தைகள் என்று ஒரு பட்டாளமே ஒன்று சேரும்.அதுவும் ஒரு மாதத்திற்கு முன்பே. அன்றில் இருந்தே திருமண கலை திருவிழா போல தொடங்கிவிடும். வீட்டை வெள்ளையடிப்பது தொடங்கி, பழைய வெண்கலப்பாத்திரங்களையெல்லாம் கழுவி எடுத்து, வீட்டை சுத்தம் செய்து முடிப்பதற்குள் பல சண்டைகள் வரும். ஆனால் அந்த சண்டை 10 நிமிடங்களுக்குள் காணாமல் போய்விடும். மீண்டும் குதூகலம். திருமணம் முடிந்த பின்னரும் 10 நாட்களுக்கு மேல் வீட்டில் உறவுகளின் சந்தோஷம் நிறைந்து இருக்கும்.

இப்படி வாழ்ந்த உறவுகள் இன்று தேவைக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் கறிவேப்பிலை போல் ஆகிவிட்டது. வசதி இருந்தால் வாழ்த்துவதும், இல்லையென்றால் தூற்றுவதும்தான் இன்றைய வாழ்க்கை. பணம் மட்டுமே அந்தஸ்த்தை அளவிடும் அளவீட்டுக்கருவி. அப்படியான போலி உறவுகளின் மேற்கோள்களைப் படீங்க..

 • படிப்பு கற்றுத்தருவதை விட சிலரின் நடிப்பு சிறப்பாக கற்றுத்தரும் வாழ்க்கையை..
 • நான் மாறும் போது மாறும் ஒரு நண்பன் எனக்கு தேவையில்லை.
 • நான் தலையசைக்கும் போது தலையாட்டுகிறேன் . என் நிழல் அதை சிறப்பாக செய்கிறது.
 • திடீரென கிடைக்கும் அன்பை நம்பி வாழ்க்கையில் வெகுதூரம் பயணம் செய்யாதே..

காரியம் முடிந்த பின் உன்னை விட்டு விலகி விடும்.


hurt family relationship quotes in tamil

 • அளவு என்பது உப்புக்கு மட்டும் அல்ல சில உறவுகளும் தான். கூடினாலும் குறைந்தாலும்

கடைசியில் குப்பையில்தான்.

 • அத்தனை அன்பும் பொய் தான் என்று தெரிய வரும் போது அத்தனை நாள் பழக்கமும்

அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.

 • வாழ்க்கையில் நெருக்கடி வருகிற போது மனிதர்கள் மறைந்து போகிறார்கள். அவர்கள் வேசங்களும் கலைந்து போகிறது.

hurt family relationship quotes in tamil

 • மெய் மறந்த காதல் பொய் என்று போனால் இறப்பும் பிறப்பாகி விடும் அடைக்கப்பட்ட கல்லறையில்...
 • எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு...நாம் மூன்றாவது மனிதர்கள் தான்.
 • துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையில் தான் தூவப்படுகிறது.
 • பலரை சில காலமும் சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும்

எப்போதும் ஏமாற்ற முடியாது.


hurt family relationship quotes in tamil

 • கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது..
 • முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்..
 • அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்..
 • பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்..

hurt family relationship quotes in tamil

 • பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்..
 • உண்மையான காதலனுக்கு கிடைத்த பரிசு, துரோகி என்ற பெயர் மட்டுமே..
 • கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு, கண்டிப்பாக நிலைக்காது..
 • ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்...

hurt family relationship quotes in tamil

 • நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது..
 • அளவோடு பழகணும், எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரியவரும்..
 • தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்..
 • சிரிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள், அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்..

hurt family relationship quotes in tamil

 • நாம் தேடிச்சென்றுபேசி பழகிய உறவு, நம்மை தேடுவது இல்லை..
 • தோற்றுவிட்டேன். போலியான உறவுகளின் செயல் உண்மை என்று எண்ணி..
 • அளவு கடந்த அன்பின் முடிவு, கவலை, கண்ணீர் ஏமாற்றம்..
 • எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல...

hurt family relationship quotes in tamil

 • நிச்சயம் இல்லா ஒன்றின் மேல், அதீத நேசம் வைத்துவிடாதே..! நிரந்தரமான நினைவுகளைக் கொடுத்துவிட்டு, உன் இரவுகளை களவாடிச் சென்றுவிடும்..
 • இங்கு பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான்.. அவர்கள் செய்தால் சரி, நாம் செய்தால் தவறு..!
 • சில பாடங்களை கற்று கொள்ள புத்தகங்கள் தேவை இல்லை! புத்தி புகட்டும் மனிதர்களே போதும்..
 • மறந்து விட நினைக்கிறேன். உதாசினப்படுத்தும் பேச்சுக்களையும், வறுப்பாய் பார்க்கும் உறவுகளையும்..

hurt family relationship quotes in tamil

 • எதிரியை கூட நம்பு.. ஆனால், உறவுகளை நம்பாதே.. ஏனென்றால், எதிரி கொடுக்கும் வலியை விட, உறவுகள் தரும் வலியே வலிமை வாய்ந்தது..
 • உன்னை விட்டு விலகி செல்பவை எதுவாக இருந்தாலும், சந்தோசமாக வழி அனுப்பி வை. நீ இழந்ததை விட, சிறப்பாக தர வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது..
 • தேவை முடிந்ததும் நண்பன் துரோகி ஆகிறான்... தேவை தொடங்கும் போது துரோகி நண்பன் ஆகிறான்... இதுதான் உலகம்... எவர் தேவைக்கும் நீ பொருள் ஆகாதே..
 • தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்..
 • நீ சிரிக்க வைக்க விரும்புவர்கள் புன்னைகைத்து கடந்த செல்வார்கள்.. நீ அழ வைப்பவர்கன் தான் கண்ணீரையும் துடைத்து உன் காத்திருப்பார்கள்..
 • உன் வலிகளையும், வேதனைகளையும் எங்கு பகிர்ந்து கொள்கிறாயோ, அங்கு உன் சுதந்திரத்தை நிச்சயம் இழப்பாய்..
Updated On: 23 Sep 2022 6:27 AM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...