/* */

how to straighten hair at home permanently-நீளமான கூந்தலை நேர்படுத்த செலவில்லாத இயற்கை முறை உண்டுங்க..! எப்டீ..? படீங்க..!

how to straighten hair at home permanently-பியூட்டி பார்லர் போகாமல், செலவே இல்லாமல் நீளமான கூந்தலை சுருளாமல் எப்படி நேர்படுத்தலாம். வாங்க தெரிஞ்சுக்கலாம்.

HIGHLIGHTS

how to straighten hair at home permanently-நீளமான கூந்தலை நேர்படுத்த செலவில்லாத இயற்கை முறை உண்டுங்க..! எப்டீ..? படீங்க..!
X

பெண்கள் தங்களின் நீளமான முடியை பராமரிப்பது என்பது ஒரு சவாலான காரியம்தான். நீளமான முடியை தனி ஒருவராக இருந்து நேர்படுத்துவது என்பது சிரமமான ஒன்றாகும். இங்கு கூந்தலை நேர்படுத்துவது என்பதை ஆங்கிலத்தில் Straightening என்று சொல்கிறார்கள். அதை நேரடியாக தமிழ்ப்படுத்தினால் நேர்படுத்துதல் என்று பொருளாகும்.

how to straighten hair at home permanently


அது சரி என்றாலும் கூந்தலை பொறுத்தவரை நெறிப்படுத்தி சீவி எடுத்தல் என்று பொருள்கொள்ளவேண்டும். ஆமாம் சாதாரணமாகவே நீளமில்லாத கூந்தலை சிக்கல் இல்லாமல் சீவி எடுப்பது ஒரு தனி வேலையாகிவிடுகிறது.

அப்புறம் நல்ல நீளமான கூந்தல் உள்ளவர்கள் சீவி எடுப்பதில் எவ்வளவு சிக்கல் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அதனால்தான் நீளமான கூந்தல் உள்ளவர்கள் பியூட்டி பார்லர் சென்று முடியை நேர்படுத்தி அழகு படுத்துவார்கள். அதற்கு குறிப்பிட்ட தொகை செலவாகும்.


அந்த செலவு இல்லாமலேயே நமது வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களைக்கொண்டே முடியை நேர்படுத்தலாம். நம்ம முடி நம்ம கவனம் என்று நாம் சிரத்தையோடு கவனித்து செய்யலாம். உங்கள் கூந்தலை நேராக்குவது எப்படின்னு பார்க்கலாமா..?

2 பொருட்கள்

இரண்டு முக்கியமான பொருள் இருந்தால் மட்டும் போதுமானது. ஒண்ணு காய்ச்சாத பச்சை பால், இன்னொண்ணு எலுமிச்சை பழம். காய்ச்சாத பாலை ஒரு சிறிய டம்ளரில் எடுத்து அதில் ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளுங்கள். எலுமிச்சை பாலில் பட்டதும் திரிந்தது போல மாறும். அதை நன்றாக குலுக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

how to straighten hair at home permanently


முதலில் தலைமுடியை பல பாகங்களாக பிரித்துக்கொள்ளுங்கள். அடர்த்தியைப்பொறுத்து மூன்று அல்லது நான்கு பாகங்களாக பிரித்து வைத்துக்கொள்ளுங்கள். தலை முடியை சிக்கலில்லாமல் சீவி வையுங்கள்.

பிரித்து வைத்துள்ள முடியை ஒவ்வொரு பாகங்களாக எடுத்து, கழுத்தின் முன்பக்கத்தில் வைத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு முன்புறம் வைத்துள்ள அந்த முடியில் ஸ்பிரே பாட்டிலில் நாம் தயார்செய்து வைத்துள்ள பால் எலுமிச்சைக் கலவையை ஸ்ப்ரே அடித்து, சீப்பில் பெரிய பல் உள்ள பக்கமாக கீழ்நோக்கி வாரி விட வேண்டும்.

இப்படி சிறிது சிறிதாக மேல் இருந்து முடியின் அடிப்பகுதி வரை ஸ்பிரே அடித்து சீராக வாரவேண்டும். இப்படி ஒவ்வொரு பாகத்தையும் பொறுமையாக நிதானமாக ஸ்பிரே அடித்து வாரி, வாரி ஸ்பிரே அடித்து கூந்தலை அடிவரை சீவி எடுக்கவேண்டும். முடியை பிரித்து பால் எலுமிச்சை கலவை ஸ்பிரே செய்ய வேண்டும்.


பியூட்டி பார்லரில் கூந்தல் வாரிவிடுவதை பார்த்திருப்பீர்கள். ஒரே இடத்தில் இரண்டு மூன்று முறை வாரி எடுக்கவேண்டும். முடி தனித்தனியாக பிரிந்து எல்லா பகுதிகளிலும் அந்த கலவை படவேண்டும்.

ஸ்ப்ரே அடிப்பதன் மூலம் ஈரமாகும் கூந்தல் சீப்பை வைத்து வாரும்போது, .கூந்தல் நேராவதை நீங்கள் காணமுடியும். இதுதாங்க Straightening என்று கூறி பியூட்டி பார்லரில் செய்கிறார்கள். அதற்கு பணமும் வாங்குகிறார்கள். இதை நாமே வீட்டில் செய்துகொண்டால், செலவு மிச்சம்.

how to straighten hair at home permanently


ஒரு அரைமணி நேரம் தொடர்ந்து இப்படி உங்களது முடியை ஸ்ப்ரே அடித்து வாரி முடித்து நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூ போட்டு முடியை கழுவி எடுங்கள். சும்மா பட்டுப்போன்ற கூந்தல் கிடைக்கும். பியூட்டி பார்லரில் செய்தது போலவே பளபளப்பாக இருக்கும்.

பாலும் எலுமிச்சையும் எந்த தீங்கும் செய்யாத இயற்கைப் பொருட்கள். ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். சுருளாத நேர்க்கூந்தல் பெறுவீர்கள்.

Updated On: 8 Jun 2023 6:25 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  4. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  5. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  6. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  7. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  8. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  9. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  10. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??