வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
வீட்டின் முன்பகுதியை அலங்கரிக்கும் பொம்மைகளை பராமரிப்பது எப்படி என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
HIGHLIGHTS

வீட்டை அலங்கரிப்பதில் பொம்மைகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆனால் அவற்றை பராமரிக்கும் முறைகள் வீட்டுக்கு வீடு மாறுபடும். அவற்றை எவ்வாறு முறையாக பராமரிக்க வேண்டும் என்பதை இந்த தொடரில் காணலாம்.
வீட்டு அலங்காரம்
வீட்டை அலங்கரிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். அவர் அவரின் தனிப்பட்ட விருப்பம், ஈடுபாடு, ரசனை போன்றவற்றின் அடிப்படையில் அலங்காரம் செய்வார்கள். இதில் பொம்மைகளை கொண்டு அலங்கரிப்பது என்பது ஒரு வகை. பெரும்பாலும் ஷோகேஸ் போன்ற அமைப்புகளில் பொம்மைகளை அடுக்கி வைப்பதே பலரது விருப்பமாக இருக்கும். இதற்காக அலங்கார பொம்மைகளை வாங்குவோர்களுக்கு சில டிப்ஸ்.
அலங்கார பொம்மைகள்
* அலங்கார பொம்மைகளை உங்கள் வீட்டு சோகேஸுக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும் பொம்மைகளின் அளவு ஷோகேஸ் உள்ளே நுழையுமாறு இருப்பது முக்கியம்.
* வீட்டில் பெரிய ஷோகேஸ் இருக்கும் பட்சத்தில் அதனை இரண்டாக பிரித்து உங்களுக்கு பிடித்த தீம்களின் அடிப்படையில் பொம்மைகளை வாங்கி அடுத்த வேண்டும்.
* நீங்கள் விரும்பும் பொம்மைகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டாதீர்கள். மனதுக்கு பிடித்த பொம்மைகளை கொண்டு அலங்கரிப்பதால் மன நிறைவு கிடைக்கும். உதாரணமாக கைவினை பொருட்களால் பொம்மைகளே உங்களை கவர்ந்தவை என்றால் அதையே தீமாக எடுத்துக் கொண்டு அத்தகைய பொம்மைகளை தேடி வாங்கலாம்.
* பழங்காலத்து நினைவூட்டும் வகையிலான அலங்கார பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மனதில் நல்ல உணர்வுகளையும் ஏற்படுத்தும்.
* கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கையாள்வதில் கவனம் தேவை. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் கண்ணாடி ஷோ பீஸ்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
*பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவே அத்தகைய அலங்கார பொம்மைகளை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
* வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களையும் உங்கள் கற்பனை திறனால் அலங்கார பொம்மைகளாக மாற்றலாம். முயற்சித்து பார்த்தால் காகிதம் கூட அழகிய பொம்மையாக மாறும்.
*அளவில் பெரிய பொம்மைகளை அலங்காரத்திற்காக தேர்வு செய்வதை தவிர்க்கலாம் .அவை இடத்தை அடைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் பராமரிப்பதிலும் சிரமத்தை உண்டாக்கும்.
*உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற அலங்கார பொம்மைகளை குறைவான விலையில் சந்தைகளில் வாங்க வேண்டும்.
* ஷோகேசை அழகு படுத்த சிறுவர்களுக்கு பிடித்த கார்ட்டூன் பொம்மைகளையும் தேர்வு செய்யலாம்.
* அலங்கார பொம்மைகளை வைக்கும் இடத்திற்கு ஏற்றார் போல சிறு சிறு மின் விளக்குகளை ஒளிரச் செய்தால் வீடு அழகில் ஜொலிக்கும்.
பராமரிக்கும் முறை
* மர பொம்மைகளை தண்ணீரில் ஊற வைக்க கூடாது. அவற்றில் சிதைவு அல்லது விரிசல் ஏற்படக்கூடும். பருத்தி துணி அல்லது பிரஸ்ஸை வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சீடர் வினிகரில் அனைத்து அதை கொண்டு மர பொம்மைகளை சுத்தம் செய்யலாம். ஈரப்பதம் நிறைந்த இடத்தில் மரபுமைகளை வைத்திருந்தால் அவை எளிதில் பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகும் .அவ்வாறு பூஞ்ஜை படர்ந்து இருந்தால் ஒரு பங்கு வினிகருடன் 10 பங்கு தண்ணீர் கலந்து அவற்றின் மீது ஸ்பிரே செய்ய வேண்டும் .சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து பொம்மைகளை துடைக்கலாம்.