/* */

ஹாலிபட் மீனை அதிகமாக சாப்பிடாதீங்க. அளவோடு சாப்பிடுங்க....

Halibut Fish in Tamil -கடல் வாழ் உயிரினமான மீன்உணவு உடலுக்கு நல்லது என சொல்லப்பட்டாலும் அளவோடு சாப்பிடுங்க... அதிகமாக சாப்பிட்டால் ஆரோக்யத்துக்கு பாதிப்புங்க..

HIGHLIGHTS

ஹாலிபட் மீனை அதிகமாக  சாப்பிடாதீங்க. அளவோடு சாப்பிடுங்க....
X


ஹாலிபட் மீனின் மேற்புறம் பச்சை பிரவுன் கருப்பு நிறமாகவும், அடிப்புறம் வெண்மையாக இருக்கும்.

Halibut Fish in Tamil -ஹாலிபட் மீன் வகைகள் கடல் வாழ் உயிரினம் ஆகும். இது கருண்ட கலரில் காணப்படும். மேற்புறத்தில் இம்மீனின்இருகண்களும் அமைந்திருக்கும். உடலின் கீழ்ப்புறம் வெண்மை நிறத்தில் காணப்படும். கடல் நீரில் வாழ்ந்தாலும் அவ்வப்போது நிலப்பரப்பிற்கும் வந்து செல்லக்கூடியவை.மற்ற மீன் வகைகளை காட்டிலும் ஹாலிபட் மீனில் அதிக சத்துகள் நிறைந்து காணப்படுவதோடு வெள்ளை நிறத்தில் இதன் இறைச்சி காணப்படும். இதனை முறையாக சமைத்து உண்டால் நம் உடலுக்கு தேவையான ஆரோக்யம் கிடைக்கும்.

ஹாலிபட்

ஹாலிபட் மீனின் இரு கண்களும் வலது புறத்தில் தலைக்குமேல் காணப்படும். இதன் கலரானது இருண்ட பச்சை நிறத்திலிருந்து பிரவுன் மற்றும் கருப்பு நிறம் கலந்தது போன்று இருக்கும். கீழ்ப்புறத்தில் வெள்ளை நிறத்தில் காணப்படும். இவ்வகை மீன்கள் 8 அடி நீளம் உடையவை. இந்த வகை மீன்கள் 55 வருடங்களுக்கு உயிர் வாழக்கூடியவையாகும்.

ஹாலிபட் மீன்களை உண்பதால் மனிதர்களுக்கு பல ஆரோக்ய நன்மைகள் ஏற்படுகின்றன. ஆரோக்யமான இருதயம், தசைகளின் வலுவூட்டம், நரம்பு சம்பந்தமான பிரச்னைகளுக்குதீர்வு கிடைக்கும்.

ஹாலிபட் மீன் வகைகளில் சத்துள்ள தாதுப்பொருட்கள் பல அடங்கியுள்ளன. அதாவது செலீனியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், மற்றும் விட்டமின் பி3 (நியாசின்), பி6 (பிரிடாக்சின்) பி12 (சயனோகோபாலமைன்) .நம்முடைய உடலின் செயல்பாட்டிற்கு மேற்கண்ட தாதுப்பொருட்கள் அனைத்தும் குறைந்த அளவிலான வகைகளில் தேவைப்படுகிறது.

இவ்வகை மீன்களில் நல்ல தரமான புரதம் காணப்படுகிறது. ஒரே ஒரு மீனில் 42 கிராம் அளவிற்கு புரதம் உள்ளது. இந்த புரதத்தில் நமக்கு தேவையான அமினோ அமிலங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நம்முடைய இதய செயல்பாட்டிற்கு இதிலுள்ள செலீனியம், மெக்னீசியம், நியாசின், மற்றும் ஒமேகா 3 கொழுப்பு ஆகியவை பயனளிக்கின்றன.

கார்டியோ வாஸ்குலரில் ஏற்படும் ஆரோக்ய பாதிப்பிலிருந்து நியாசின் பாதுகாக்கிறது. மேலும் இந்த விட்டமின் நம்மை சூர்ய ஒளியிலிருந்து நம் உடம்பிலுள்ள தோலை பாதுகாக்கும் பணியினையும் செய்கிறது.எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையானது கால்சியம் ஆகும். மேலும் இவை நம் உடலில் அதிகம் காணப்படக்கூடிய ஒன்று. மெக்னீசியமானது நம் உடலில் ஏற்படும் குறைந்த ரத்த அழுத்த நோய், மற்றும் தசைகளின் இயக்கம், புரோட்டீனை உருவாக்குதல் மற்றும் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.

கார்டியோ வாஸ்குலரில் ஏற்படக்கூடிய ஆரோக்ய பாதிப்புகளை செலீனியம் கட்டுப்படுத்துகிறது. மேலும் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது.மேலும் நம் உடம்பில் ஏற்படும் வீக்கத்தினை கட்டுப்படுத்தும் பணியினை ஹாலிபட் மீனிலுள்ள தாதுக்கள் செய்கின்றன. மேலும் இவ்வகை மீனில் நியாசின், செலீனியம், மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை அனைத்துமே வீக்கத்தினை கட்டுப்படுத்த கூடியவை.கொழுப்பு அமிலங்களான சைடோகைன்ஸ் மற்றும் ஐகோசனைடு உள்ளிட்டவைகளும் வீக்கத்தினை கட்டுப்படுத்தும்.

ஹாலிபட் உணவுகள் விட்டமின் ஏ, மற்றும் டி யை அதிகம் உற்பத்தி செய்யக்கூடியவை. இதனால் வைட்டமின் ஏ அல்லது ரெடினால் கண் பாதுகாப்பிற்கான பணியினை செய்கிறது. மேலும் விட்டமின் டி எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ரத்தம் உறைதலை தடுக்க, கேன்சர் தடுக்க, கல்லீரலை பாதுகாக்க, ஜீரண செயல்பாடுகளை அதிகரிக்க, தோலினை சரவர பராமரிக்க, உள்ளிட்ட பயன்களை ஹாலிபட் மீன் உணவு வழங்குகிறது.

ஹாலிபட் வெள்ளை கறிஉணவுகளில் நம் உடலுக்கு தேவையான புரதம், கார்போஹைட்ரேட், தயமின், நியாசின், ரிபோபிளேவின், விட்டமின் பி6,விட்டமின் பி12,இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலீனியம், மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,மேலும் குறைந்த அளவிலான காப்பர், போலிக் அமிலம், சோடியம் மற்றும் பாந்தோனிக் அமிலத்தைக்கொண்டவை.

ஒவ்வொரு 100 கிராம் உணவிலும், நீர்-74.3கி, ஆற்றல் -115 கி/கலோரி, புரதம்-23.4கி,மொத்தலிபிட் (கொழுப்பு)1.68.கார்போஹைட்ரேட் பை டிபரன்ஸ் 0.1 கி,பைபர் 0 கி,கால்சியம் 9 மி.கி., இரும்பு 0.2 மி.கி, மெக்னீசியம், 29 மி.கி.பாஸ்பரஸ் -297 மி.கி,பொட்டாசியம்-549 மி.கி, சோடியம் -408 மி.கி, துத்தநாகம்-0.45 மி.கி. காப்பர்0.029 மி.கி.,செலீனியம்-57.4 மி.கி,வைட்டமின் சி 0.5 மி.கி., தயமின்-0.057 மி.கி, ரிபோபிளாவின் 0.036 மி.கி.,நியாசின் 7.79 மி.கி.,வைட்டமின் பி-6 0.622மி.கி, போலோட் 14மியூகி, போலிக் ஆசிட் 0மியூகி, போலேட் 14 மியூகி, விட்டமின் பி 12 1.25 மி.கி, விட்டமின் ஏ ஆர்ஏஇ 23 மியூகி, ரெடினால் 23 மியூ கி, ஆகிய விகிதத்தில் அமைந்துள்ளது.

பக்கவிளைவுகள்

ஒரு சில நேரத்தில் ஹாலிபட் மீன் உணவுகளால் பக்கவிளைவுகள் ஏற்படுவதுண்டு. அதாவது குறைந்த அளவிலான பாதரசத்தினை இது கொண்டுள்ளதால் உடல் ஆரோக்ய பாதிப்பு எப்போதாவது யாருக்காவது ஏற்படுவதுண்டு.

இதில் ஓரளவு பாதரசம் இருப்பதால் குறைவாக சாப்பிடுவோருக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதுவே கூடுதலாக உணவினை எடுத்துக்கொள்வோருக்கு ஒரு சில பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் இந்த குறைந்த அளவிலான பாதரசமானது வயதான பெரியவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. அதுவே குழந்தைகள் மற்றும் கருவிலுள்ள குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைபாடு, மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களை தோற்றுவிக்கும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Feb 2024 5:48 AM GMT

Related News

Latest News

  1. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  3. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  4. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  5. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  7. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  8. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  9. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  10. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...