heartpain quotes intamil words மனசை பாதிக்கும் வலி(மை) மிகுந்த வாசகங்கள்....படியுங்களேன்...

Heartpain Quotes Intamil Words வாழ்க்கையை அர்த்தமாக்குவதே நம் மனதின் செயல்பாடுதான் . அந்த மனமே பாதிக்கப்பட்டால் வண்டி ஓடாதுங்க... கவலையே படக்கூடாதுங்க... ஆரோக்யம் பாதிப்பு உண்டாகிவிடுங்க...உஷார்...

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Heartpain Quotes Intamil Words
X

heartpain quotes intamil words


heartpain quotes intamil words

மனித வாழ்வு என்பது மகத்தானது.வசதியிருப்பவர்கள் வாழ்க்கை ரசனையோடு அனுபவித்து வாழ்கின்றனர். அதுவே நடுத்தர மற்றும் அதற்கும் கீழ் உள்ள ஏழைகளுக்கு வாழ்க்கைஅனுதினமும் போராட்ட யுகமாகவே கழிகிறது. முன்பு மாதிரியெல்லாம் வாழ்க்கை இல்லீங்க...நாம் வசதி வாய்ப்புகளோடு வாழ தேவையே இல்லீங்க. நோய் நொடி இல்லாம நாம தினமும் உண்ணஉணவு, இருக்க இடம், உடுக்க துணியோடு வாழ்ந்தால் இன்று அவர்கள்தாங்க பணக்காரன் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நோய் பாதிப்புகள் மனிதர்களை பாடாய் படுத்துகின்றன. வசதி யிருப்பவர்களுக்கு எப்போதும் போல் சர்க்கரை, பிரஷர் உள்ளிட்ட வியாதிகளோடு நின்றுவிடுகிறது.

ஆனால் வசதியில்லாத குடும்பங்களில்தான் இந்த நோய் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறதுங்க. அது என்ன அவர்கள் செய்த பாவமா? ன்னும் தெரியலீங்க போங்க. அந்த புதுவித நோய்க்கான சிகிச்சை செலவைக்கேட்டாலே மயக்கம் வந்து தலை சுத்துதுங்க.. என்ன காரணம்? அவர்கள் நல்ல சத்தான ஆகாரத்தினை எடுத்துக்கொள்ளவேண்டும். காலம் தாழ்த்தி சாப்பிடுவது, சாப்பிடாமலேயே இருப்பது போன்றவைகளினாலும் நோய் எதிர்ப்பு திறன் குறைந்து நோய் தாக்க ஆரம்பிக்கிறது.

இதுமட்டும் அல்லாமல் அவர்கள் வாழும் சுற்றுப்புறங்களை எப்போதும் துாய்மையாக வைச்சிருக்கணும். யார் கேட்கறாங்க.. வீடுகளில் உள்ள குப்பை, மீதி உணவுகளை பெரும்பாலானோர் கழிவு நீர் கால்வாயில் கொட்டினால் எப்படிங்க நமக்குநோய் வராம இருக்கும்.

இதுபோல் மனித வாழ்க்கையில் ஆயிரம் வலிகளை நாம் கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுமட்டுமல்லாமல் வேலை பார்க்குமிடத்தில், வசிக்கும் இடத்தில், உற்றார் உறவினர்களிடத்தில், உடன் பிறந்தவர்களிடத்தில் என வலிகளின் வலிமை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. என்னத்தை சொல்ல...இந்த வலிகள் அனைத்துமே வலி(மை)யாக இருப்பதால் இதனால் கூட நமக்கு நோய் பாதிப்புகள் பெருகுங்க...உஷார்..

heartpain quotes intamil words

heartpain quotes intamil words

இவ்வளவு வலிகளையும் வராமல் இருக்க வேண்டும் என்றால் என்னதான் தீர்வு என்று யோசித்தால் நமக்கு தேவையில்லாத விஷயங்களில் நாம் தலையிடாமல் அமைதியாக இருந்துவிட்டால் நமக்கு பாதி வலி குறைந்துவிடும்ங்க. ஆனால் ஒரு சிலர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துக்கொண்டு அதனால் பெரும்பிரச்கைளை சந்தித்துக் கொண்டுள்ளனர் வாழ்க்கையில்... இதுதாங்க அவங்களுக்கு பெரும் தலைவலியா போய்டுதுங்க...

வலி(மை) மிகுந்த வாசகங்களை படியுங்க...

இன்பத்தை சுமந்திடும் சிறு மனதை கேட்டேன், இறைவனிடத்தில்! அவனோ, வலியை மட்டுமே தாங்கும் மனதை அளித்தான் என்னிடத்தில்!

எப்படியெல்லாமோ வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, ஒரு கட்டத்தில் எப்படியாவது வாழ்ந்தால் போதும் என்ற மனநிலையில் தள்ளிவிடுகிறது, வாழ்க்கை.

பிறப்பு ஒரு வரியில், இறப்பு ஒரு வரியில், எளிதில் எழுதி விட்டான் சில வரிகளில்! நடுவில்இருக்கும் வெற்று பக்கங்களை மட்டும் நம்மிடம் கொடுத்தது ஏனோ? இது தான் வாழ்க்கையோ!

சுலபமாக கிடைத்துவிடும் எந்த பொருளுக்கும் இவ்வுலகில் மதிப்பில்லை, அன்பாயினும் சரி!

மகிழ்ச்சியின் காரணமாக எல்லோரும் சிரிப்பதில்லை! சிலர் தங்கள் கண்ணீரை மறைக்கவே சிரிக்கின்றனர்.

அன்பு என்பது ஒரு அருமருந்து. தேவையான அளவு இருந்தால், வாழ்வை நல்வழிப்படுத்தும். அதுவே அளவுக்கு மீறினால், விஷமாகி வாழ்க்கையையே அழித்துவிடும்!

யாருக்காகவும் கண்ணீர் விடு, யாரும் துடைக்க வருவார்கள் என்றெண்ணி கண்ணீர் விடாதே!

வாழ்வில் பல ஆயிரம் பேரைச் சந்தித்தாலும், ஒரு சிலர் மட்டுமே என்றும் நம் நினைவில் இருப்பார்கள்! அதில் நாம் அதிகம் நேசித்தவர்களும், அதிகம் வெறுத்தவர்களும் அடங்கும்!

நடிக்க தெரிந்தவன் எல்லாராலும் மதிக்கப்படுகிறான்! நடிக்க தெரியாதவன், எல்லாராலும் மிதிக்கப்படுகிறான்!

வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

புரியாத வார்த்தை இருந்தும் பயன் இல்லை! புரியாத வாழ்க்கை வாழ்ந்தும் பயன் இல்லை!

வலிமையான இதயங்களில் தான், அதிக வடுக்களும் உள்ளன!

எதுவும் புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது! எல்லாம் புரியும் போது வாழ்க்கை முடிகின்றது!

heartpain quotes intamil words

heartpain quotes intamil words

சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது. சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு விடுகிறது!

எப்படி எல்லாமோ வாழ வேண்டும்என ஆசைப்பட்டு இப்போதுஎப்படியாவது வாழ்ந்தால் போதும்என்ற மனநிலையில் தள்ளி விடுகிறதுவாழ்க்கை.

சில வலிகளுக்குமருந்தே இல்லைஎன்று தெரிந்தும்மறைத்து வைத்துகொள்கிறேன் சிறுபுன்னகையில்!

கடவுள் கண்ணீருக்கு மட்டும்நிறம் கொடுத்து இருந்தால்உலகம் முழுவதும் கண்ணீரீன்நிறமாக தான் இருக்கும்!

காயங்களும் காணாமல் போய்விடும்காணல் நீர் போல் காலங்கள் கடந்த பின்

காயங்களை வருத்தி கடந்து செல்லுங்கள்!

பிரியவும் முடியாதுசேரவும் முடியாது ஒன்றாகவே பயணிப்பதுதண்டவாளங்கள்மட்டுமல்லகாதலும் தான்.

உலகிலேயே மிக உயர்ந்த விஷயம்நம்பிக்கை அதை அடைய பல வருடங்கள்ஆகலாம் ஆனால் அது உடையசில நிமிடங்களே போதும்.

எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்று அதன் பிறகு எத்தனை முறை அது கிடைத்தாலும்

சந்தோஷம் கொடுப்பதில்லை அன்பும் அப்படித்தான்.

தேடித் தேடிப் போய்காட்டுகிற அன்பு குப்பையை விடகேவலமான ஆகிவிடுகிறது.

எல்லோரும் அருகில் இருந்தும்அனாதை போல் உணர வைக்கிறதுநான் நேசித்த அவரின் பிரிவு.

அளவில்லாமல் சிரிக்க வைத்தவர்கள், ஒருநாள் அழவும் வைப்பார்கள்!

heartpain quotes intamil words


கண்ணீருக்கு மட்டும் கடவுள் நிறம் கொடுத்து இருந்தால், இந்த உலகம் முழுவதும் கண்ணீரீன் நிறமாக தான் இருக்கும்!

கானல் நீர் போல், காயங்களும் காணாமல் போய்விடும், காலங்கள் கடந்த பின்! காயங்களை வருத்தி காத்திருந்தது போதும், கடந்து செல்லுங்கள்!

வாழ்வில் வலிகளும் காயங்களுமே மனிதனை மாற்றுகிறது! சிலரை அமைதியாகவும், சிலரை அரக்கனாகவும்!

வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்களை விட, சில வலிகள் கற்றுத் தந்த பாடங்களே ஒரு நல்ல மனிதரை உருவாக்குகிறது!

நல்லவனாக இருப்பதும் ஆபத்தானது! அதற்காக, கெட்டவனாக மாறுவதும் இயலாதது!

அன்பு கிடைத்தாலும், அது நிலைக்குமா? என்பதில் தான் சந்தேகம் உள்ளது!

நான் கரை தேடும் ஓடம். என்னில் பயணம் செய்ய நினைக்காதே! நீயும் தொலைந்து போவாய், என்னைப் போல்....அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-09-23T17:12:37+05:30

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
 2. கல்வி
  JKKN மருந்தியல் கல்லூரி மாணவன் மாநில அளவிலான மல்யுத்தப்போட்டியில்...
 3. தமிழ்நாடு
  புதிய சிக்கலில் மாட்டினார் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் எம்.பி.
 4. சினிமா
  'பொன்னியின் செல்வன்' படத்தை தாய்லாந்தில் பார்த்த வனிதா விஜயகுமார்..!
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. சினிமா
  மும்பை ஓட்டலில் தமிழ் நடிகை தூக்கிட்டு தற்கொலை
 7. தென்காசி
  தென்காசி மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
 8. லைஃப்ஸ்டைல்
  மற்றவர் காலில் விழுவது அவமானமா? வெகுமானமா?
 9. சினிமா
  'இந்தி தெரியாது போடா..!' - முதன் முதலில் தொடங்கி வைத்தவர் இயக்குநர்...
 10. நாமக்கல்
  2 வாரங்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் நரிக்குறவர் காலனி மக்கள்...