/* */

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

Buttermilk Benefits in Tamil-பலர் மோர் குடிக்கவே பயப்படுவார்கள். ஆனால் இதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் இதுவரை மோரை குடிக்காதவர்களும் கண்டிப்பாக குடிப்பார்கள்

HIGHLIGHTS

Buttermilk Benefits in Tamil
X

Buttermilk Benefits in Tamil

Buttermilk Benefits in Tamil

நம் முன்னோர்கள் உணவுமுறை பற்றி கூறுகையில், "நீர் சுருக்கி மோர் பெருக்கி நெய் உருக்கி" எனக் குறிப்பிடுகின்றனர்.

நீர் சுருக்கி என்பது நீரை நன்றாக கொதிக்க வைத்து அதாவது நீரை நாலில் மூன்று பங்காக கொதிக்க வைத்தலை கருதும். அப்போது நீரின் அளவு குறைந்திருக்கும இதனால் கனியுப்புக்கள் நன்றாகக் கரைந்து நீருடன் கலந்து இருப்பதுடன் கிருமிகளும் அழிந்து நீர் உணவாக மாறும் இதனையே நீர் சுருக்கி எனக் கூறினர்.

மோர் பெருக்கி என்னும் போது நீரை அதிக அளவில் சேர்க்கும் போது, அதில் உள்ள வெண்ணை அதிகளவில் பிரித்தெடுக்கப்பட்டு நீர்மோராகும் அதனால் செரிமானத்திற்கு இலகுவாக இருப்பதுடன் கொழுப்புச் சத்தும் குறைவாக இருக்கும் இது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

அடுத்து நெய் உருக்கி என்பது நெய்யில் உள்ள கொழுப்புச்சத்து, அதிகம் உருக்குவதன் மூலம் அதன் செறிவைக் குறைத்து உண்பதனால் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

பொதுவாக நமது உணவு பழக்கத்தில் யாரோ சொல்வதை கேட்டு சிலவற்றை பயன்படுத்த மாட்டோம். ஏன், எதற்கு என ஆராயவும் மாட்டோம்.

உதாரணமாக உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்படும், நெய் சேர்த்தால் கொழுப்பு கூடும், இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பது போன்ற தவறான கண்ணோட்டம் உள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால், வாயுத்தொல்லை உள்ளவர்கள் உருளைக்கிழங்கு சேர்த்தால், வாயுத்தொல்லை அதிகரிக்கும் என்பதால் அவர்களுக்கு சேர்க்கக்கூடாது என கூறியிருப்பார்கள். அதே போல, சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு சாப்பிட்டக் கூடாது. கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் தான் நெய் சேர்க்கக்கூடாது.

இந்த வகையில் தான், மோர் குடித்தால் சளி பிடிக்கும் என்ற தவறான கண்ணோட்டமும். பலர் மோர் குடிக்கவே பயப்படுவார்கள். ஆனால் இதில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்தால் இதுவரை மோரை குடிக்காதவர்களும் கண்டிப்பாக குடிப்பார்கள்.

உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவு பொருட்களில் ஒன்றாக தயிர் உள்ளது. பருவமழை பெய்து வரும் நாட்களில் தயிரை அப்படியே உட்கொள்வதால் உடல் ரீதியாக சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மோராக அருந்தி வருவது மிகவும் நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

நம் முன்னோர்கள் வீட்டிற்கு யாராவது வந்தால் மோர்தான் குடிக்க கொடுப்பார்கள். மேலும் பால் பொருட்களிலேயே மோர் மிகவும் ஆரோக்கியமானது. மோரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக மோரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது.

பொதுவாக வெயில் காலங்களில்தான் மோர் தேவை அதிகமாக இருக்கும். மழை காலங்களில் மோர் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் மழை காலங்களிலும் பனி காலங்களிலும்தான் மோர் குடிக்க வேண்டும். காரணம் இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

கோடை வெப்பத்தால் உடல் வெப்பமடைகிறது. இதைத் தடுக்க, அதிக அளவு வியர்வை வெளியேறுகிறது. மோர் இந்தப் பிரச்சனையைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுபவர்கள், மோரில் இஞ்சியை தட்டிப் போட்டு குடித்தால் குணமாகும். விரைவில் குணமாவதற்கு, ஒரு நாளைக்கு 3 முறை மோரைக் குடிக்க வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் வயிற்றுப்போக்கு பிரச்சனை குணமாகிவிடும்.

மோரில் கால்சியம் தவிர பல்வேறு புரதங்கள், வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகின்றன. இதன் விளைவாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

மோரில் ஆன்டி-வைரல், ஆன்டி-கேன்சர் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளது. ஆகவே மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதயம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

ஆயுர்வேதத்தின் படி, ஒருவர் மோரை தினமும் குறைந்தது ஒரு முறை குடிப்பதால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும் மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கதை போக்கும் இந்த அற்புதமான தயிரில் வீட்டில் இருந்த படி சுவையான மோர் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.

முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் இரண்டு கப் தயிர் மற்றும் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும். பிறகு அவை இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். தயிர் மற்றும் தண்ணீர் நன்கு கலந்திருப்பதை உறுதி செய்வது அவசியமாகும்.

பிறகு இவற்றுடன் சீரகத் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர்பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை தூவி, மறக்காமல் கல்உப்பு சேர்த்து நன்கு கலந்து செய்து பருகவும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 March 2024 6:04 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...