hard work quotes in tamil உழைச்சாதாங்க.... உயர முடியும்.... உன்னத வாசகங்களை படிச்சிருங்க....

hard work quotes in tamil உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்று சொல்வார்கள். உழைப்பவர்கள் எவருமே முன்னேற்றமடையவில்லை என்ற பேச்சே கிடையாது. உழைப்பவர்கள் அனைவருமே உயரப் பிறந்தவர்கள் ஆவர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
hard work quotes in tamil உழைச்சாதாங்க.... உயர முடியும்.... உன்னத வாசகங்களை படிச்சிருங்க....
X

hard work quotes in tamil


படவிளக்கம்: சென்னை மெரினா பீச் பகுதியில் உள்ள உழவர் உழைப்பாளர் சிலை (கோப்பு படம்)

வாழ்க்கையில் யாருமே உழைக்காம முன்னேற முடியாதுங்க.. சும்மா உட்கார்ந்திருந்தா இடம்தான்தேயும் தவிர முன்னேற்றம் எல்லாம் கிடைக்காதுங்க... யாராக இருந்தாலும் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஏங்க.. நீங்க யாருங்க... உழைச்சாதான் சாப்பாடுன்னு சொல்லுங்க... பாதி பேர் பட்டினியாவே இருந்துடுவாங்க... அந்த வகையில் உழைக்காமல் சாப்பிடுவோர் எண்ணிக்கையானது நாளுக்குநாள் அதிகரித்து விட்டது. ஏமாற்றி சம்பாதிப்பது எப்படி- அடுத்தவர்களை பற்றி குறை சொல்லி நாம் தப்பிப்பது எப்படி- போன்ற குருட்டு ஐடியாக்களில் பலர் களம் இறங்கி போட்டுக்கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்கள் வாழ்க்கையில் உயரத்தை தொட்டாலும் அது நீண்ட நாள்நிலைப்பதில்லை.

உண்மையான உழைப்பே உயர்வைத் தரும். உழைப்பது போல் நடிப்பதும் உயர்வினைத் தராது. இன்று உயர்ந்த இ டத்தில் இருப்பவர்கள் அனைவருமே மிகவும் கடினமாக உழைத்ததினால்தான் இன்று முன்னேற்றமடைந்துள்ளனர். பெரும்பாலானோர் அவர்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதில்லை. ஆனால் ஒரு சிலரோ பணம்இருக்கும் மமதையில் மற்றவர்களை மதிக்காமல் ஏளனம் செய்து கடைசியில் சோத்துக்கே வழி இல்லாத நிலைக்கு போய்விடுகின்றனர்.

ஒவ்வொரு இளைஞனுக்கும் லட்சியம் என்ற கொள்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.ஆனால் இக்கால இளைய தலைமுறையோ எதைப்பற்றியும் சிந்திக்காமல் அவர்கள் ஸ்மார்ட்போனோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் பல மணி நேரம். உலகம் கையடக்கத்துக்குள் வந்துவிட்டது அனைத்து நிகழ்வுகளையும் உடனடியாக காணும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அதனை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனரா? என்பதுதான் ஆயிரமாயிரம் கேள்வியே..

hard work quotes in tamil


hard work quotes in tamil

உழைப்பவர்களே முன்னேறுவதற்கான தகுதி வாய்ந்தவர்களாக சமூகத்தில் கருதப்படுகிறார். எப்படி வேண்டுமானாலும் பணத்தினை சம்பாதித்துவிடலாம் .உழைத்து முன்னேறியவர்கள் கஷ்டத்தினை உணர்ந்தவர்கள் அனைவருமே பணத்தின் அருமையை உணர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் அக்காலத்தில் இருந்து பணத்தின் அருமை தெரிந்ததால்தான் இவ்வளவு உச்சத்தினை அவர்கள் வாழ்க்கையில் தொட முடிந்தது என்றால் யாராலும் மறுக்க முடியாது.

உழைப்பினை யார் மதிக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் தானாக உயர்வு வரும். சோம்பேறிகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது எப்போதும் இருக்காது. வளர்ச்சிக்கே தடைதான் அங்கு. எதையும் யோசிக்காமல் , திட்டமிடாமல்இருந்தால் எப்படி வாழ்வில் முன்னேற முடியும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது. நாமும் அ வர்களைப்போல் முன்னேற வேண்டும் என உங்கள் மனதில் லட்சியத்தினை வளர்த்துகொள்ளுங்க.. நீங்களும் நிச்சயமா முன்னேறுவீங்க....

உழைப்பும் வெற்றிக்கான வாசகங்கள் இதோ... உங்களுக்காக ...

மகிழ்ச்சி என்பது ஒரு பட்டாம்பூச்சியாகும், நீங்கள் அதை பின்தொடரும்போது, எப்போதும் உங்கள் கைகளில் கிடைப்பதில்லை, ஆனால் நீங்கள் அமைதியாக உட்கார்ந்தால், உங்கள் மீது அமரலாம்

வாழ்க்கை என்பது உன்னைக் கண்டுபிடிப்பது அல்ல. வாழ்க்கை என்பது உன்னையே உருவாக்கிகொள்வது

உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு ஏற்ற தாழ்வுகள் வந்தாலும் சிந்தனை உங்கள் மூலதனச் சொத்தாக மாற வேண்டும்

தைரியம் ஒரு தசை போன்றது. அதைப் பயன்படுத்துவதன் மூலம் தான், நாம் அதை வலுப்படுத்துகிறோம்!!

அனைத்து சாதனைகளின் தொடக்கப் புள்ளி ஆசைவெற்றிக்கான பாதையும் தோல்விக்கான பாதையும் கிட்டத்தட்ட ஒன்றே

தோல்விகளிலிருந்து வெற்றியை வளர்த்துக் கொள்ளுங்கள். ஊக்கமின்மை மற்றும் தோல்வி ஆகியவை வெற்றிக்கு உறுதியான இரண்டு படிக்கட்டுகளாகும்

உண்மையான சிரமங்களை சமாளிக்க முடியும்; கற்பனையானவை மட்டுமே வெல்ல முடியாதவை

தோல்வி என்பது வெற்றிக்கு அதன் சுவையை கொடுக்கும் மசாலா

ஒரு போரில் வெற்றி பெற நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போராட வேண்டியிருக்கும்

ஒரு கேப்டனின் உயர்ந்த குறிக்கோள் அவருடைய கப்பலைப் பாதுகாப்பதாக இருந்தால், அவர் அதை எப்போதும் துறைமுகத்தில் தான் வைத்திருப்பார்

அதிகப்படியான முயற்சியே நம்பிக்கையின் பற்றாக்குறையை சமாளிக்கும்

hard work quotes in tamil


hard work quotes in tamil

உன்னால் இன்னும் பெரிய விஷயங்களைச் செய்ய முடியாவிட்டால், சிறிய விஷயங்களைச் சிறந்த முறையில் செய்

நீங்கள் உறுதியாக நிற்கும் முன், உங்கள் கால்கள் சரியான இடத்தில் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

அனுபவம் ஒரு கடினமான ஆசிரியர், ஏனென்றால் அவள் முதலில் சோதனையையும், பிறகு பாடத்தையும் கொடுக்கிறாள்

தெரிந்து கொள்ள எவ்வளவு இருக்கிறது என்பதை அறிவது வாழ கற்றுக்கொள்வதற்கான ஆரம்பம்

"உன்னால் வெல்ல முடியாது" என்று உன்னால் மட்டுமே சொல்ல முடியும், நீ பிறரிடம் கேட்க வேண்டியதில்லை

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் பின்னால் பல தோல்வியுற்ற ஆண்டுகள் உள்ளன

வேறு யாருக்கும் தெரியாத ஒன்றை அறிவதே வெற்றியின் ரகசியம்

வெற்றி போல் எதுவும் வெற்றிபெறாது

வெற்றியின் ரகசியம் பொதுவான விஷயங்களை அசாதாரணமாகச் செய்வது

வெற்றி என்பது கற்றலின் தவிர்க்க முடியாத துணை தயாரிப்பு ஆகும்

கனவுகளுக்கும் வெற்றிக்கும் இடையே நிறைய இரத்தம், வியர்வை மற்றும் தைரியம் இருக்கிறது

செய்யக்கூடாததைத் திறமையாகச் செய்வது போல் பயனற்றது எதுவுமில்லை

நமது இருண்ட தருணங்களில் தான் நாம் ஒளியைக் காண கவனம் செலுத்த வேண்டும்

தோல்வி பட்ட உனக்குமட்டும் தானே தெரியும்வெற்றியின் அருமை!தன்னம்பிக்கை ஒன்றைமட்டும் நினைவில் வைத்துஉன் வெற்றிக்காக வரிந்து கட்டு.

ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானா

வெற்றிக்கும்,தோல்விக்கும் சிறிய வித்தியாசம் தான்

கடமையாய் செய்தால் வெற்றி கடமைக்கு செய்தால் தோல்வி.

சிக்கல்களை எதிர்கொள்ளும் போதுகூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

எந்த ஒரு செயலையும் ஆர்வம் குறையாமல் நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்வெற்றி தானாகவே நம்மை தேடி வரும்.

நம்பிக்கை உள்ள மனிதனுக்குஎப்போதும் ரோஜா மட்டும் தான்

கண்ணில் படும் முட்கள் இல்லை.

சிந்திக்க தெரிந்தவனுக்குஆலோசனை தேவை இல்லை துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.

அதிகாலை நீ நினைத்தநேரத்தில் எழுந்து விட்டாலேதோல்விகள் உன்னை விட்டுஒதுங்கி கொள்ளும்!

ஆண்டவன் சோதிப்பதுஉன்னை மட்டும் இல்லை

உன்னை போல சாதிக்க துடிக்கும்புத்திசாலிகளை மட்டும்!

எல்லோரையும் திருப்திப்பட வைக்கநினைப்பவனால் வாழ்க்கையில்வெற்றி பெற முடியாது!

உன் மீதுஉனக்கே நம்பிக்கை இல்லை என்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

தோல்வி அடைந்தவன்மாற்ற வேண்டியதுவழிகளைத்தான்இலக்கை இல்லை!

hard work quotes in tamil


hard work quotes in tamil

யானையால்!தும்பிக்கை இல்லமால் வாழ முடியாது

மனிதனால்!நம்பிக்கை இல்லாமல் வாழ முடியாது.

உலகம் உன்னை அறிவதை விடஉன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.

திறமைகள் எல்லோரிடமும் இருக்கிறதுஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில் தான் உனக்கான இடம் தோல்வியா வெற்றியா என்பது அமைகிறது.

நீங்கள் தூங்கும் போது பணம் சம்பாதிக்கஒரு வழியை கண்டு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இறக்கும் வரை உழைத்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும்

மற்றவர்களின் எண்ணங்கள்ஒரு போதும் என்னை வீழ்த்தியதில்லைகாரணம் என் மனா வலிமைக்கு பலம் அதிகம்.

முடியாது என்பது சோம்பேறிகளின் வீண் வார்த்தைஇந்த உலகில் முடியாது என்பது எதுவுமே இல்லை.நீ முடியாது என்று சொல்வதைஎவனாவது ஒருவன் கண்டிப்பாகபிற்காலத்தில் செய்து முடிப்பான்.

நீங்கள் வெற்றிபெற விரும்பினால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற முடியும்; நீங்கள் தோல்வியைப் பொருட்படுத்தாவிட்டால் மட்டுமே நீங்கள் தோல்வியடைய நேரிடும்

மலைகள் ஏறுவதால் உலகம் உங்களைப் பார்க்க முடியாது, ஆனால் நீங்கள் உலகைப் பார்க்க முடியும்

போராட்டம் இல்லை என்றால், முன்னேற்றம் இல்லை

வெற்றி என்பது முடிவும் அல்ல; தோல்வி ஆரம்பமும் அல்ல: அதைத் தொடர தைரியம்தான் முக்கியம்

பெரிதாக தோல்வியடையத் துணிந்தவர்களால் மட்டுமே எப்போதும் பெரிய அளவில் சாதிக்க முடியும்

ஒரு கனவை நிறைவேற்றுவதற்கு எடுக்கும் நேரத்தின் காரணமாக அதை ஒருபோதும் கைவிடாதீர்கள். நேரம் எப்படியும் கடந்து போகும்

வெற்றி என்பது சரியானதைச் செய்வதே தவிர, எல்லாவற்றையும் சரியாகச் செய்வதல்ல

பல வருட தோல்வியே ஒரு நிமிட வெற்றியை செலுத்துகிறது

வெற்றியின் விதைகளை விதைப்பதற்கு தோல்வி காலம் சிறந்த நேரம்

hard work quotes in tamil

நான் தோல்வியடையவில்லை. வேலை செய்யாத 10,000 வழிகளை நான் இப்போது கண்டுபிடித்துள்ளேன்

ஒரு வெற்றிகரமான மனிதன் தான் மற்றவர்கள் எறிந்த செங்கற்களால் உறுதியான அடித்தளத்தை அமைக்க முடியும்

உங்களிடம் விமர்சகர்கள் இல்லையென்றால், நீங்கள் வெறியடைய மாட்டீர்கள்

பிறர் சாயலில் வெற்றி பெறுவதை உனது அசல் தன்மையில் தோல்வி அடைவது நல்லது

வெற்றி என்பது சிறிய முயற்சிகளின் கூட்டுத்தொகை

நீங்கள் தவறான விஷயங்களைத் துரத்துவதை நிறுத்தும்போது தான், சரியான விஷயங்கள் உங்களைப் பிடிக்க வாய்ப்பளிக்கின்றன

Updated On: 23 Sep 2022 12:03 PM GMT

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...