/* */

வாழ்க...வாழ்க....வாழ்கவே..... வாழ்வில் மறக்க முடியாத நாள்... மண நாள்...

happy wedding anniversary in tamil மனிதன் திருமணத்திற்கு பிறகு தான் முழுமையடைகிறான். வாழ்க்கையின் தாத்பர்யத்தினை உணர்கிறான். எனவே திருமணம் என்பது வாழ்க்கைக்கு தேவையானதுதான்...வாழ்த்துசொல்லுங்க...

HIGHLIGHTS

வாழ்க...வாழ்க....வாழ்கவே.....  வாழ்வில் மறக்க முடியாத நாள்... மண நாள்...
X

இல்லத்துக்கு வரும் இல்லாளை  இரு கரம் கொண்டு  தாங்கும் மணமகன் (கோப்பு படம்)


happy wedding anniversary in tamil

திருமணம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒருபெண் உண்டு அது இறைவனால் தீர்மானிக்கப்பட்ட நியதியாகும். இதில் விதிவிலக்கு என்பது திருமணத்தினை விரும்பாத ஆண்களும் , பெண்களும்அடங்குவர்.

திருமணம்தான் ஒரு மனிதனை மனிதனாக்குகிறது. திருமணம் முடிந்தபின்னர்தான் அவர் வாழ்வின் அடுத்த கட்ட நிலையினை அடைகிறார். ஆம்... அதுநாள் வரை செல்வனாக இருந்தவருக்கு உரிய கவுரவம் கிடைக்கிறது. அதற்கு பிறகு குழந்தைக்கு தந்தையானவுடன் அடுத்த பதவி உயர்வு, குழந்தையானது வளர்ந்து இளைஞனாகி அதற்கு ஒரு திருமணமாகி குழந்தை பிறக்கும்போது தாத்தா என்ற அந்தஸ்தை அவரும், பாட்டி என்ற அந்தஸ்தை அம்மாவும் பெறுகிறார்கள்.

happy wedding anniversary in tamil


happy wedding anniversary in tamil

திருமணம் முடிந்து முதல் குழந்தை பிறக்கும்போது அந்த வீடே சந்தோஷத்தில் தான் திளைக்கும். அதுவெல்லாம் வாழ்க்கையின் முக்கியமான தருணம்..நாட்கள்.. இதனை சாதாரணமான பிரம்மச்சாரிகளுக்கு இந்த அனுபவம் கிடைப்பதில்லை. ஆனால் தற்போது சாப்ட்வேர் கம்பெனிகள் ஆதிக்கம் செலுத்திய பின்னர் திருமணம் என்பது பலருக்கும் தள்ளிக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம்? என பல கோணத்தில் யோசித்து பார்த்தால் ஒருபுறம் கை நிறைய சம்பளம் வாங்கும் பெண்ணை கல்யாணம் கட்டிவிட்டால் சம்பளம் கையைவிட்டு போய்விடுமே? என்று ஒரு சில பெற்றோர்கள் நினைப்பதால்தான் இதுபோன்று கல்யாணம் தள்ளிக்கொண்டே போகிறது.

happy wedding anniversary in tamil


happy wedding anniversary in tamil

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிரு என சொன்னாலும் பல தற்போதைய திருமணங்கள் ஓராண்டுக்கு மேல் நீடிக்க மாட்டேன் என விவாகரத்து வரை போய்விடுவது எதனால்? இரண்டு பேருமே திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம்தான் வேண்டும் என அடம்பிடித்து செல்கின்றனர். சிறு சண்டை பெரியதாகி பின்னர் இதுபோன்ற அவல முடிவுக்கு வருகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.

ஏங்க... நீங்க உங்க வீட்டு வழக்கப்படி வளர்ந்தீங்க... அவக அவங்க வீட்டுப்படி வளர்ந்தாங்க...இருவர் மனதும் ஒன்றிப்போகவேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஒருவருடம் ஆனால்தான் இரண்டும்இரண்டும் ஒன்றாகமுடியும். ஒரே மாதத்திலோ, ஒரே வாரத்திலோ யாருடைய பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொள்ள முடியாது. எனவே சகிப்புத்தன்மையை இக்கால இளையதலைமுறையினர் வளர்த்துக்கொள்ளவேண்டும். இணைதலுக்கு எவ்வளவு முயற்சித்தோம்.. அதாவது இருவரின் சந்திப்பு, நிச்சயதார்த்தம், திருமணம் என பல அலைச்சல்களை சந்தித்த பின்னர்தான்இருதரப்பினரும் ஒன்று சேருகிறோம். கணநிமிஷத்தில் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும். ஆற அமர யோசித்து செய்ய வேண்டியது. திருமணம் என்பது ஒருவருக்கு ஒருமுறைதான் நடக்கவேண்டும். அதுதான் சிறக்கும்...

happy wedding anniversary in tamil


happy wedding anniversary in tamil

.எனவே இதுவரை திருமணம் ஆகாதவர்கள் நல்ல முடிவாக எடுங்கள்.. ஏனோதானோ முடிவு இக்கட்டில் கொண்டுபோய்விட்டுவிடும்.இதில் யாருடைய வற்புறுத்தலுக்கும் அடிபணியக்கூடாது. பெண், மாப்பிள்ளையின் சொந்த முடிவுதான். பார்த்துக்குங்க..அடங்காத காளையை அடக்க ஒரு மருமகள் வராமலா போய்விடுவா? என பெற்றோர் நினைத்திருக்கும் நேரத்தில் வந்த மருமகளும் திடுதிடுப்பென்று ஒரே வருடத்தில் விலக்குவது? எந்தவிதத்தில் நியாயம்.. அப்படித்தாங்க ஆரம்பத்தில் இருக்கும் வாழ்க்கை... அப்புறம் போகப்போக புரிதல் ஆனபின் சரியா ஓடுங்க வண்டி....

சரி தலைப்புக்கு வருவோம் வாங்க... திருமண நாள்...முன் பின் சந்திக்காமல் திருமணம் என்ற பந்தத்தினால் கரம்பிடித்து இல்லத்தலைவியானவள்தான் மனைவி. இருவரும் எந்தவித மனஸ்தாபங்கள் இன்றி விட்டுக்கொடுத்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும். விட்டுக்கொடுப்பதால் கெட்டுப்போவதில்லை. காரணம் திருமணம் என்ற பந்தமானது முன்பின் அறிமுகமில்லாமல் இணையும்போது பல விஷயங்கள் நமக்கு பிடிக்காமல் இருக்கலாம். சகிப்புத்தன்மையோடு அதனை பக்குவமாக ஏற்றுக்கொண்டு மெல்ல மெல்ல ஆண் பெண்ணையோ,அல்லது பெண் ஆணையோ மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.

happy wedding anniversary in tamil


happy wedding anniversary in tamil

முடிந்தால் முடியாதது இந்த உலகத்தில் ஒன்றும் இல்லை.இதுபோன்ற பிரச்னைகளுக்கு நாம் முதலில் மனசு வைக்கணும். அதாவது விட்டுக்கொடுக்கணும். ஈகோ பார்த்தால் வாழ்வு சிறக்காது. இருவரும் உடலளவில் இணைந்த பின் மாற்றுக்கருத்துக்கு அங்கு வேலையே இல்லை. நல்லகருத்து என்றால் பிரிதொருவர் அதனை ஏற்றுக்கொள்வார்.. ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதுதானே நியதி. மாற்றி பேசும்போதுதான் அந்த இடத்தில் பிரச்னையானது விஸ்வரூபம் எடுக்கிறது... எனவே யோசிப்பதற்கு நேரம் கொடுங்கள்..உடனடியாக எந்த ஒரு முடிவையும் எடுத்துவிடாதீர்கள்... அது நல்லதல்ல. பிரச்னைகள் யாருக்குங்க இல்லை. பணம் இருப்பவர்களுக்கும் பிரச்னைகள் உள்ளது. அது வெளியில் தெரிவதில்லை...சொல்வதில்லை... ஆனால் பொறுமையாக தீர்த்துவிடுகின்றனர். அதுவே நம்மைப்போன்ற நடுத்தரக்குடும்ப பிரச்னைதான் ஊதிப்பெரிய பலுானாக சித்தரித்துவிடுகின்றனர். கடைசியில் வெடித்துவிடுகிறது. உறவுகள் என்ற போர்வையில் ஒரு சில கருங்காலிகள் செய்யும் வேலையில் மனமுறிவு என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். முடிந்த வரை உங்களுடைய பிரச்னைகளை நீங்கள் இருவரே மனம் விட்டு பேசி தீர்க்கப் பாருங்கள்.. பெரியவர்களிடத்திலோ அல்லது உறவுகளிடத்திலோ சொல்லும்போதுதான் இது பெரிதாகி விடுகிறது என்பது என் தாழ்மையான கருத்து.

திருமண நாளில் உற்றார் உறவுகள், நண்பர்கள், சக பணியாளர்கள் வாழ்த்துகள் சொல்வது வழக்கம். குளித்து புத்தாடை உடுத்தி கோயிலுக்கு தம்பதியராக சென்று அவரவர்களுடைய நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து விட்டு முடிந்த வரை தானம் செய்யுங்கள்.. அன்னதானம் உங்களை ஆசிர்வதிக்கும்... ஒரே ஒரு விஷயத்தில்தான் மற்றவர்களைத் திருப்திப்படுத்த முடியும் அந்த வகையில் நீங்கள் அன்று உங்கள் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே சென்று உங்களுடைய திருமண நாளில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யுங்க... உங்களுக்கும் உங்க குடும்பத்திற்குமே ஆத்ம திருப்திஏற்படும்..

ஒவ்வொரு ஆண்டும் திருமண நாள் வரும்போது விட்டுக்கொடுத்து வாழும் தம்பதியிரிடையே சந்தோஷம் மிகுதியாகத்தான்இருக்கும். காரணம் அவர்கள் இருவரும் சந்தித்த வாழ்வின் முதல் நாள் இது என்பதால்.... ஆத்மார்த்தமான தம்பதியினரை யாருமே பிரித்துவிட முடியாது. ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ...வாழ்க்கையில் அனைவருக்கும் நம்பிக்கைதான் முக்கியம்.. அந்த நம்பிக்கை கோட்டையானது சரியும்போதுதான் சந்தேகம் என்ற பேய் உள்ளே நுழைந்து விடுகிறது... இந்தப் பேய் இல்லாத வீடுகள் அனைத்தும் என்றென்றும் சந்தோஷமாகவே இருக்கிறார்கள் என சர்வே சொல்கிறது.

வாழ்க்கையில் கணவன் மனைவி என்பது ஆத்மார்த்தமான உறவுங்க... ஒரு சில தம்பதியினரைப் பார்த்தால் நமக்கே ஒரு நேரத்தில் பொறாமை ஏற்படும். அந்த அளவிற்கு அன்னியோன்யமாக இருந்து வாழ்க்கை நடத்துகின்றனர். எந்த விஷயமானாலும் இருவரும் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்கின்றனர். அது நல்லதும் கூட. தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகள் எப்போதாவது நம்மை தவிப்பில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே நாம் யாராவது ஒருவரிடம் எதையாவது கேட்டால் அவர்கள் வரவேண்டும் வந்த பின் கேட்டுச்சொல்கிறேன் என்ற பதிலே வருகிறது. இதனால்தான் அவர்கள் பிரச்னையில்லாமல் வாழ்கிறார்கள் என்பது என் கருத்தும் கூட. தன்னிச்சையாக செய்யும், தெரியாமல் செய்யும் செயல்கள் சிக்கலில்தான் கொண்டு போய்விடுகிறது என்பது நிதர்சனமான உண்மை.

Updated On: 5 Dec 2022 9:12 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...