/* */

குடும்ப சந்தோஷத்தை... குதுாகலகமாக கொண்டாடுங்க...

Family Quotes in Tamil Words-வாழ்க்கையில் குடும்ப சந்தோஷமே முக்கியமானது. யாருடைய மனசும் வருத்தப்படாத அளவிற்கு குடும்பத்தினை நல்லமுறையில் நிர்வகித்தாலோ குடும்பம் குதுாகலமடையும்.

HIGHLIGHTS

Family Quotes in Tamil Words
X

Family Quotes in Tamil Words

Family Quotes in Tamil Words

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள். அந்த வகையில் அனைத்து வகைகளிலும் நாம் சிறந்த குடும்பத்தினை நிர்வகிக்ககூடிய தலைவனாக விளங்கவேண்டும் என்றால் நாம் அனைவரையும் சந்தோஷப்படுத்த வேண்டும். அப்படி எப்படிங்க செய்வது? என கேட்கிறீர்களா. .. ஒரு குடும்பம் நிலையான சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்றால் முதல் அடிப்படை காரணி பொருளாதார மேன்மை தாங்க.

அன்றாட செலவுகளுக்கு பணம் இருந்தா போதும்ங்க... அவன்தான் ராஜா... எந்த விஷயத்துக்கும் யாரிடமும் கை கட்டி கடன் கேட்கும் நிலைக்கு வைக்காமல் எது வந்தாலும் சமாளிப்பேன் என தைரியத்துடன் எவன் ஒருவன் குடும்பத்தினை நடத்துகிறானோ அவனே உண்மையான குடும்பத்தலைவன்.

இன்றுநாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் கடன் கொடுக்க ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறது. எதற்காக? உங்களிடம்சம்பளம் என்று ஒன்றுஇருப்பதால்தான். ஆனால் கடன்வாங்கிவிட்டு நீங்கள் தவணையை ஒழுங்காக கட்டாவிட்டால் உங்களை என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா? அவ்வளவு அவமான பேச்சுகளை நீங்கள் சந்தித்தாக வேண்டும்.

எனவே கடன் என்பது பெரும் நோய். யார் கடன் வாங்காமல் இருப்பதை வைத்து வாழ கற்றுக்கொள்கிறார்களோ அவர்களே நிம்மதி, சந்தோஷத்துடன் வாழமுடியும் இக்காலத்தில். அடுத்தவர்களின் வசதியைப் பார்த்து நாமும் அப்படி இருக்க வேண்டும் என ஒப்புமைப்படுத்தினால் முடிந்துவிட்டதுங்க கதை... அவ்வளவுதான் வரவறியாமல் செலவினமென்றால் நிலவரமெல்லாம் கலவரமாகும்... ஆகிவிடும்... பார்த்துக்கோங்க..

சந்தோஷத்தோடு வாழும் குடும்பத்தின் வாசகங்கள் இதோ...

உறவுகள் தூக்கி எறிந்தால் வருந்தாதே..! அவர்கள் முன் வாழ்ந்து காட்டு! மகிழ்ச்சியாக, நிம்மதியாக..!

"உன் வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை!

வாழ்க்கை வாழ பல வருடங்கள் இருப்பினும், வாழ்க்கை மாற சில நிமிடங்கள் போதும்!

வாழ்கையின் இரு பகுதிகள் - 1. எதிர்காலத்தின் கனவு, 2. கடந்த காலத்தின் நினைவு

சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை! சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை!

கரையை தொட்டுச் செல்லும் அலைகளுக்கு தெரிவதில்லை, சில சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று!

பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள். இனி பிறக்கப் போவதில்லை என்ற எண்ணத்துடன் வாழுங்கள்!

உயிர் வாழக் கற்றுக்கொள் போதும். எவ்வாறு வாழ்வது என்பதை காலம் கற்றுத்தரும்.

அடுத்தவர் உணர்வுகளை புரிந்துவிட்டால், உதிரங்கள் கண்ணீர் ஆகாதோ?

கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போட கற்றுக் கொள்ளவில்லை எனில், நீச்சல் தெரிந்தும் பயனில்லை!

அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்! ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு!

பெண் ஒருபோதும் ஆணிடம் சிக்கிக்கொள்ளமாட்டாள்! அவள் சிக்கிக்கொள்வதெல்லாம் அவளிடம் மட்டுமே!

வாழ்கையில் உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், அந்த கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை!

மரத்தின் இலைகள் உதிர்வது போல, காலம் மாறும் போது சில கவலைகளும் தானாகவே உதிர்ந்து விடும்!

யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே, ஒருவேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் மாற வேண்டி வரும்.

பணத்தை வைத்து எந்தவொறு உறவையும் / மனிதரையும்தாழ்வாக கருதாதீர்கள்..! ஏனெனில் வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது..நொடியில் அனைத்தும் மாறிவிடும்..

தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறில்லை ஆனால்ஆசைப்பட்ட பிறகு, அதை அடைய, உன் தகுதியை வளர்த்து கொள்ளாமல் இருப்பதே தவறு.

வாழ்க்கையில் கஷ்டங்கள்அதிகமாக வரவில்லை என்றால், பல விஷயங்கள் கடைசிவரை தெரியாமல்போய்விடும்!

உலகில் நாம் விரும்பும் அத்தனையும் இரு முறை தான் அழகாக தெரியும் ஒன்று அடைவதற்கு முன்பு இரண்டு இழந்ததற்கு பின்பு....

நீ அடைவதெல்லாம் இறைவனும் இயற்கையும் உனக்குத் தந்த பரிசு இழப்பது எல்லாம் நீ இன்னொருவருக்கு கொடுக்கும் வாய்ப்பு!

உனக்காக தான் வாழ்கிறேன் என்பவர்கள்.. உன்னை யார் என கேட்கவும் தயங்காதவர்கள்.

உறவுகளை உருக்குலைப்பதில் சந்தேகம் ஒரு சாக்கடை.

விருப்பத்தினால் செய்யும் உதவிகளை விட விளம்பரத்திற்காக செய்யும் உதவிகள் அதிகம்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது அன்று. ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது இன்று.

ஏழை பணத்தை நேசிப்பதில்லை! பணக்காரன் குணத்தை நேசிப்பதில்லை!

எதிர்பார்க்கும் ஒன்று எதிரில் கிடைக்கும் போது அருமை தெரிவதில்லை! எதிர்பார்ப்பின் ஆர்வம், அது நிறைவேறும் போது இருப்பதில்லை!

கவலைகளை அனுபவிக்கும் போதே தெரிகிறது சிலருக்கு, தாம் இத்தனை நாள் இருந்தது சொர்க்கத்தில் என்று!

கஷ்டப்படும் போது உதவி செய்பவர்களை விட, மேன் மேலும் கஷ்டப்படுத்துபவர்களே இங்கு ஏராளம்!

கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால், நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூட பாடம் கற்க முடியும்! அந்த மனம் இல்லாவிட்டால், உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்க முடியாது!

சந்திப்பு என்று வரும் போது, மகிழ்ச்சி பிரதானமாக இருக்கிறது! பிரிவு என்று வரும் போது, குறைகள் பிரதானமாக இருக்கிறது! இரண்டும் இல்லை என்றான போது, தனிமை பிரதானமாகிகிறது!

சுமையற்ற வாழ்க்கை, சுவையற்றுப் போகும்!

வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்! ஏனென்றால் அவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை!

இருள் சூழ்ந்த ஒளிகளே, அதிகம் பிரகாசிக்கின்றன வாழ்க்கை பாதைகளில்!

காயங்களை சுமந்தவன், கனவுகளை இழப்பதில்லை! கண்ணீருடன் இருப்பவன், கனவுகளை வெறுப்பதில்லை!

நம் வாழ்க்கை எளிதல்ல! நாம் தான் எதிர்க்கப்பழக வேண்டும்!

வருத்தம் என்னும் வாழ்க்கையில், இன்பம் என்னும் வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

முகம் பார்த்து பேசினாலே போதும். இங்கு பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ஆனால் அதை யாரும் செய்வதே இல்லை!

எதிர்பார்த்தது நடக்காமல் போவதும், எதிர்பார்க்காதது நடப்பதும் தான் வாழ்க்கை. இதை புரிந்து கொண்டவன், வாழ்க்கையை வெல்கிறான்! புரிந்து கொள்ளாதவன், அந்த வாழ்க்கையையே இழக்கிறான்!

நாம் எதிர்பார்த்த போது கிடைக்காத ஒன்றும், நாம் எதிர்பார்த்த போது நடக்காத ஒன்றும் தான் நம் மனக்குமுறலுக்கு காரணம்!

விக்கலுக்கு பயந்தால் வயிறு நிறையாது! சிக்கலுக்கு பயந்தால் வாழ்க்கை மகிழாது!

மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்! மகான் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை!

இதுதான் சரி என்று உங்கள் மனதிற்குள் ஒரு குரல் ஒலிக்கும். சற்றும் தயங்காமல் அதை நடைமுறை படுத்துங்கள்!

எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் இனிமையும், செயலில் நேர்மையும் கொண்டதே, எளிமையான வாழ்க்கை.

வாழ்ந்து மறைந்தோம் என்பதல்ல வாழ்க்கை! மறைந்தாலும் வாழ்வோம் என்பதுவே வாழ்க்கை!

பிடித்ததை எடுத்து, பிடிக்காததை விடுத்து மகிழ்ச்சியாக இரு... என்பதே வாழ்க்கை!

கோபத்தில் கண்டதை தூக்கிப் போடுவதைவிட, அந்த கோபத்தையே தூக்கிப் போடுங்கள்.. வாழ்க்கை இன்னும் சிறப்பாகும்!

வாழ்நாளெல்லாம் அடிமையாக தொட்டிக்குள் வாழ்வதைவிட பிடிபட்ட அன்றே சட்டியில் குழம்பாக கொதிப்பது மேல்

வாழ்க்கையை கற்றுக் கொள்வதில் குழந்தையை போல் இரு! அதற்கு அவமானம் தெரியாது, விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்!

உனது வலிகள் நீ யார் என்பதை தீர்மானிப்பதில்லை அந்த வலிகளிலிருந்து நீ எப்படி மீண்டு வருகிறாய் என்பது தான்.

வாழ்க்கையில் சில தருணங்களை கடந்து செல்வது கடினமாக தான் இருக்கும், இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் அதனை கடந்து சென்று விட்டாய் என்றால், நிச்சயம் துன்பத்துக்கு பின் இன்பம் இருக்கும்.

எட்ட வரும் வாய்ப்புகள் ஏற்றிச் செல்லும் வரை காத்திருங்கள், பயணங்கள் பாதைகளாக மாறும்...

வாழ்க்கை சொர்க்கமாவதும், நரகமாவதும் நம் மனதில் தோன்றும் எண்ணங்கைளை பொறுத்ததே!

அவமானம் படும்போது அவதாரம் எடு, வீழ்கின்ற போது விஸ்வரூபம் எடு, புண்படுகின்ற போது புன்னகை செய், வாதாடுவதை விட்டு விட்டு வாழ்ந்துக் காட்டு...

நதிகள் அணைத்தும் ஓடி விழுந்தும், சமுத்திரம் நிரம்புவதில்லையாம்! பூமியின் முனைகளை ஓடி அடைந்தும், மனது நிறையவில்லையாம்! இளநீல ஆகாய விரிவில் உயர பறந்தும், அவா பூர்த்தியடையவில்லையாம் ஓடியும் விழுங்கியும் அடைந்தும் மானிடரின் பேராசைகள் நீள்கிறதேனோ?

இன்று யோசிக்காமல் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பின்பு யோசிக்க வைத்துக் கொண்டே இருக்கும் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து செயலாற்றுங்கள்..!!

"நான்" என்கின்ற ஆணவம், 'அவனா' என்ற பொறாமை, "எனக்கு" என்கின்ற பேராசை இந்த மூன்று குணங்களும் மனிதனை நிம்மதியாக வாழ விடாது!

பெரும்பாலும் முதல் சிந்தனை, தெளிவற்றதாக இருக்கும் எதற்கும் மறு சிந்தனை செய்யுங்கள்!

பிடிக்காத விஷயத்தை கண்டுகொள்ளாமலும், வேண்டாத விஷயங்களில் கவனம் செலுத்தாலும் இருந்தால் உடலும் - மனமும் ஆரோக்கியமாக இருக்கும்!

கொடுப்பவன் இறைவன் என்பதை உணர்ந்து கொண்டால் கிடைப்பது எதுவும் தாழ்வாகத் தெரியாது!

ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டால் பிறகு என்ன நடந்தாலும்க கவலையென்பது இல்லை!

உன்னைவெறுப்பவர்களை நினைத்துக் கவலை கொள்ளாதே அவர்களுக்கு உன் அன்பை பெற தகுதி இல்லை என நினைத்துக்கொள்!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 14 March 2024 7:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!