Happy diwali tamil wishes-தீமைகளை தீய்க்கும் நாள் தீபாவளி..! கொண்டாடலாமா..!!

தீபாவளி உலகம் முழுமையும் உள்ள இந்தியர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் ஒரு சிறப்புமிகு பண்டிகை ஆகும்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
Happy diwali tamil wishes-தீமைகளை தீய்க்கும்  நாள் தீபாவளி..! கொண்டாடலாமா..!!
X

Happy diwali tamil wishes-தீபாவளி வாழ்த்துகள் (கோப்பு படம்)

Happy diwali tamil wishes

விளக்குகளின் விழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி, தீபங்களின் ஒளி என்று பொருள்படும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும்.இந்தியாவின் சில பகுதிகளில் ‘தீபாவளி‘ என்று அழைக்கப்படுகிறது. இதை மொழிபெயர்த்தால் ‘விளக்குகளின் சரம்‘ என்று பொருள்படும். இந்த திருவிழாவின் தோற்றம் பண்டைய இந்து புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

ராமர் 14 ஆண்டுகள் காட்டில் வனவாசம் முடித்து அயோத்திக்கு திரும்பியபோது, ​​தீபாவளியின் போது அவர் ராவணனுடன் போரிட்டு வெற்றி பெற்றார். லட்சுமி தேவி தீபாவளி இரவில் மக்களின் வீடுகளுக்குச் சென்று செல்வம் மற்றும் செழிப்புடன் வாழ ஆசீர்வதிப்பாள் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை.


Happy diwali tamil wishes

தீபாவளியை இனிமையாக கொண்டாட உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு வாழ்த்துகள் கூற இதோ உங்களுக்காக சில மாதிரி வாழ்த்துகள்.

தீயவை தீய்ந்து போகட்டும். அகம் ஒளிபெறட்டும். ஆணவம் அழியட்டும். அன்பு ஒன்றே உலகாளட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.

இல்லங்கள்தோறும் ஒளி பெருகட்டும். உள்ளங்கள்தோறும் அன்பு ஓங்கட்டும். மத்தாப்பு சிரிப்பாக உதிரட்டும். வளமும் செழிப்பும் ஊர்முழுதும் கிடைக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.

இருள்சூழ் வாழ்வது இனி இல்லாமல் போகட்டும். தீபத்தின் ஒளிபோல வாழ்வில் வெளிச்சம் வீசட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்

இல்லாதோருக்கு இருப்பவர் கொடுத்து உதவும் ஒளி உள்ளம் பெறுவோம். அடுத்தவர் மகிழ்ச்சியில் அகமகிழ்வு கொள்வோம். ஆனந்த வாழ்க்கையைப்பெற்று வளமாக வாழ்வோம்.இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்.


Happy diwali tamil wishes

கொடுக்கும்போது, பெறுபவர் கடவுளைக் காண்கிறார். கொடுப்பவர் அறியார் வாங்குபவர் கடவுள் என்பதை. கொடுத்து உயர்வோம். பணத்தால் உயர்ந்தோர் பணமிழந்தால் தாழ்ந்தோர் ஆவர். மனதால் உயர்ந்தோர் என்றைக்கும் தாழ்ந்தோர் ஆகார். இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

கல்வி உனக்கு அறிவைத்தரும். பிறருக்கு செய்யும் உதவி பேரின்ப ஞானத்தைத் தரும். கல்வி வாழ்க்கைக்கானது. ஞானம் அறிவுக்கானது. இனிய தீபாவளி வாழ்த்துகள்.

பட்டாசை வாங்கி நீ மட்டும் வெடிக்காதே. கிழிந்த சட்டையோடு ஏக்கப்பார்வைக்கொண்டு உன்னைப்பார்க்கும் ஜீவன்களை அழைத்து அள்ளிக்கொடு. அன்பையும் இனிப்பையும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.


Happy diwali tamil wishes

நன்றி என்பது நாம் எதிர்பார்க்காமல் வந்து சேர்வது. அதை நீ வேண்டாம் என்றாலும் இறைவன் உனக்குத் தருவான், ஏராளமாக. நீ முந்திச் செய்த உதவிகளுக்காக. இனிய தீபாவளி வாழ்த்துகள்.

இல்லை என்ற இல்லம் மலரவேண்டும். இல்லாமை என்பது அறவே இல்லாமல் போகவேண்டும். தீபங்கள் ஏற்றி இருளை அகற்றுவதுபோல, இன்றுடன் இல்லாமை, இல்லாமை ஆகட்டும். இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.

அன்பு எங்கும் நிறையட்டும்.மனதில் மகிழ்ச்சி பெருகட்டும். அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்


Happy diwali tamil wishes

தீபத்திருநாளில் இருள் நீங்கி, ஒளி பெற உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

மகிழ்ச்சி பெருக,செல்வம் செழிக்க,ஆரோக்யம் சிறக்க,இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்

எங்கும் நிறைந்திருக்கும் ஒளியைப் போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும். உனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும். வெற்றி உனதாகட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

அசுரனை அழித்த ஆண்டவனின் அருளால், புத்துயிர் பெற்றது புனித நாள். அதுவே தீபாவளி. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.


Happy diwali tamil wishes

தீபம் உங்கள் இல்லங்களில் மட்டுமல்ல உள்ளங்களிலும் ஒளி வீசுவதாய் அமையட்டும்.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

பட்டாசாய் கவலைகள் சிதறிட மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட வான வேடிக்கை போல் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்திட தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

பட்டாசு சத்தத்தின் இடையே மத்தாப்பாய் சிரித்திடும் சந்தோசம் இல்லமெல்லாம் பரவ தீபாவளி வாழ்த்துகள்

வீட்டில் ஒளி ஏற்றும் நாளாக மட்டும் இல்லாமல் இனிமேல் உங்கள் வாழ்வில் ஒளி வீசும் நாட்களாக அமைய தீபாவளி வாழ்த்துகள்


Happy diwali tamil wishes

அனைவரது உள்ளங்களிலும் வாழ்விலும் அன்பு ஒளி அகல் விளக்காய் வீசிட தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

மத்தாப்பாய் உள்ளம் சிரித்திட இல்லம் ஜொலித்திட அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

இருளை போக்கி உலகத்துக்கு ஒளியை கொடுக்கும் தீபம் உங்கள் வாழ்விலும் ஒளி கொடுக்கட்டும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

இன்று நீங்கள் ஏற்றும் தீபம் உங்கள் உள்ளத்தில் அணையாத ஜோதி போல ஒளிர தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்


Happy diwali tamil wishes

தீபங்கள் மட்டுமல்ல உங்கள் புன்னைகையும் ஒளி வீசட்டும், ஒருவருடைய வாழ்க்கையை இனிதாக்கட்டும். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

இன்பங்கள் இனிதே இல்லங்களில் பொங்கட்டும். ஒளி வீசும் இந்நன்னாளில் மகிழ்ச்சியும் நிலைக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.

பலகாரங்கள் பல செய்து, புத்தாடை அணிந்து பக்கத்து வீடுகளுக்கும் பரிமாறி அன்பை வெளிப்படுத்தும் இந்தநாள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். இனிய தீபாவளி வாழ்த்துகள்.

சிதறும் பட்டாசு வெடியைப்போல தீமைகள் சிதறட்டும். ஒளிரும் மத்தாப்பு போல இல்லமெங்கும் ஒளி வீசட்டும். உல்லங்கள்தோறும் மகிழ்ச்சி நிலையாகட்டும்.

Updated On: 19 Sep 2023 7:40 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கூட்டணியில் யாருக்கு அதிக பாதிப்பு?
  2. டாக்டர் சார்
    Rantac syrup uses in tamil-ராண்டக் சிரப் என்ன பாதிப்பிற்கு
  3. மதுரை மாநகர்
    கழிவு நீரை அகற்ற லஞ்சம்: மாநகராட்சி உதவிப் பொறியாளர் கைது
  4. சினிமா
    சந்திரமுகி 2 படம் சுமாருதான்.. ஆனா பாக்ஸ் ஆபிஸ்.... !
  5. தொழில்நுட்பம்
    Jupiter Planet In Tamil: மிகப்பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்கள்
  6. டாக்டர் சார்
    Bowel movement meaning in tamil-குடல் இயக்கம் என்பது என்ன?
  7. லைஃப்ஸ்டைல்
    painful heart touching quotes in tamil: இதயத்தை தொடும் சில
  8. சினிமா
    வற்றிப் போன வடிவேலு சிந்தனை! முறிந்து போன முருகேசன் காமெடி!
  9. ஈரோடு
    ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்