/* */

Happy birthday in tamil text-பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..!

வாழ்த்துச் சொல்வது நல்லிணக்கத்தின் அடையாளம். அது அன்பை வளர்க்கும் ஊடகம். உறவை வளர்க்கும் பாலம்.

HIGHLIGHTS

Happy birthday in tamil text-பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..!
X

Happy birthday in tamil text-பிறந்தநாள் வாழ்த்து மேற்கோள்கள்.(கோப்பு படம்)

Happy birthday in tamil text

பிறப்பு என்பது தாய்க்கும் தந்தைக்குமான முதல் மகிழ்ச்சி. ஆனால் ஆண்டுகள் கூடக்கூட மகிழ்ச்சியின் எண்ணிக்கையும் கூடுகின்றன. உறவுகள் வாழ்த்தும். தாத்தா, பாட்டி, மாமா. அத்தை என தொடரும். அதன்பின்னே நட்பும் தொடரும். வாழ்த்துகளின் வட்டம் பெரிதாகும்.


Happy birthday in tamil text

ஆண்டுக்கு ஆண்டு வரும் பிறப்பின் நாள் கொண்டாடப்படுவதால் நமது நம்பிக்கை துளிர்விடுகிறது. மகிழ்ச்சி மகுடம் சூடுகிறது. அந்த கொண்டாட்டம் நமக்கான மகிழ்ச்சி மட்டுமல்ல. நம்மோடு சேர்ந்துள்ள உறவுகள், நட்புகளுக்குமான மகிழ்ச்சி. கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகிறது.

தற்போது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பள்ளிகளில் தொடங்கி கல்லூரி வரை பிரபலமாகிவிட்டது. அது நண்பர்களின் நட்பை வலுப்படுத்துகிறது. பின்னாளில் நினைவலைகளாக மனதில் தேங்கிநிற்கும் வரலாறாக மாறச் செய்கிறது.

பரிசளிப்பது பரஸ்பர நட்பின் முகவரி ஆகிப்போனது. வாழ்த்துச் சொல்வதற்கு பொருள் ஒன்றும் தேவை இல்லை. ஒற்றை வார்த்தை போதுமானது. வசதி உள்ளவர்கள் ஆகாயத்தில் கூட பறந்தபடி பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதைவிட ஒன்றுமே இல்லாமல் வெறும் கள்ளிப்பழத்தை கேக்காக வெட்டி வெற்றுவெளி காட்டுக்குள்ளே கொண்டாடும் பிறந்தநாளுக்கு வலிமை அதிகம் அல்லவா?


Happy birthday in tamil text

கொண்டாட்டம் என்பதற்கு பணமும் பொருளும் தேவை இல்லை. மனம் இருந்தால் போதும். இதோ உங்களுக்காக பிறந்தநாள் வாழ்த்து மேற்கோள்கள் தந்துள்ளோம். வாழ்த்தி மகிழுங்கள்.

உன்னிடம் நட்புகொள்ள மொட்டு கூட மௌனமிழக்கிறது. மலரும் தன்னிதழ் விரித்து உனக்கு வாழ்த்து சொல்கிறது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உன்னுடைய எல்லா கனவுகளும் நிறைவேற உனது இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நட்புக்கு இலக்கணமே நீதான் என்று சொன்னால் அது மிகையாகாது. என்னுயிர் நண்பருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


Happy birthday in tamil text

உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை. முகவரியும் தேவை இல்லை. நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

சின்னச் சின்ன சந்தோசங்கள் வாழ்க்கையை அழகாக்குமாம். உன் பிறந்தநாளும் அப்படித் தான். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உன் கனவுகள் நிஜமாகவேண்டும். உன் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைய வேண்டும். மனம் அன்பால் நிறைய, உன் உடல் இளமையாக ஜொலிக்க, இந்த பிறந்தநாள் அமையட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


Happy birthday in tamil text

நான் வாடிய தருணங்களில் எல்லாம் எனக்காக எப்போதும் ஆறுதல் நீர் ஊற்றிய என் அன்பு உள்ளத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

புது நாள்,புது வருடம், புது அனுபவம் இவையெல்லாம் இன்னும் சிறப்பாக அமையட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உன் பிறந்தநாளைப் பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமை கொள்கின்றன. நீ அந்த நாளில் பிறந்திருக்கலாம் என்று. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


Happy birthday in tamil text

உங்கள் கனவுகள், எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் ஆண்டாக உங்கள் பிறந்தாநாள் இந்த ஆண்டு அமையட்டும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உண்மையான அன்பினை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. உணர்ச்சிகளினாலும் எண்ணங்களினாலும் மட்டுமே காட்ட முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பிறந்து மண்ணைத் தொட்டநாள் முதல் நகரும் நாட்கள் அற்புதமானவை. பிறந்த நாள் ஒவ்வொரு முறை வரும் போதும் அது கூடுதல் அழகு பெறுகிறது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.


Happy birthday in tamil text

உங்கள் இந்த பிறந்தநாளைப் போல் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட எனது மனமார்ந்த வாழ்த்துகள்

தூரம் என்பது பெரிதில்லை, நம் அன்பிற்க்கு முன்னால். என் பேரன்பிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கொள்ளை அழகோடும், உள்ளத்தில் மகிழ்ச்சியோடும், குவிந்து நிற்கும் சிரிப்போடும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்


Happy birthday in tamil text

தூறும் மழைத்துளிகள் தரும் இன்பம் போல உன் வாழ்வில் சிரிப்பொலிகள் மட்டும் இடைவிடாமல் ஒலிக்கவேண்டும். மகிழ்ச்சி என்றும் உனதோடு இருக்கவேண்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

என் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னுடன் துணை நின்று என்னை உயர்த்தினாய். தோள் கொடுத்து நின்றாய். அதற்கு நன்றி. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

பிறப்பு என்பது ஒருமுறை தான் நிகழும். ஆனால் பிறந்தநாள் என்பது ஒவ்வொரு ஆண்டும் நிகழும். நலமோடு வாழ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்


Happy birthday in tamil text

வருடத்தில் நாட்கள் பல வந்தாலும் உன் பிறந்தநாளே எனக்கு மகிழ்ச்சிபொங்கும் இனிய நாள். பிறந்தநாள் வாழ்த்துகள்

இறைவன் எப்போதும் உங்களை அன்பு, மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஆரோக்யத்துடன் வைத்திருக்க வேண்டுமாய் இந்த நாளில் பிரார்த்திக்கிறேன்.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் அப்பா.

உங்கள் வாழ்க்கையை புன்னகையால் வாழ்த்துங்கள், கண்ணீரால் அல்ல. உங்கள் வயதை நண்பர்களால் எண்ணுங்கள், ஆண்டுகளை அல்ல. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Updated On: 1 Oct 2023 7:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க