/* */

hair fall solution-தலைமுடி கொட்டுதா..? கவலைய விடுங்க..! சில எளிய தடுப்பு முறைகள் சொல்றோம்..!

hair fall solution-தலைமுடி அடர்த்தியாக, நல்ல நீளமாக வளர வேண்டும் என்பதே பல இளம் பெண்களின் விருப்பமாக இருக்கும்.

HIGHLIGHTS

hair fall solution-தலைமுடி கொட்டுதா..? கவலைய விடுங்க..! சில எளிய தடுப்பு முறைகள் சொல்றோம்..!
X

hair fall solution-முடி உதிர்வைத் தடுக்கும் வழிகள் (கோப்பு படம்)

தலைமுடி கரு கருன்னு அடர்த்தியாக அதுவும் நீளமாக வளர வேண்டும் என்பதுதான் அனைத்து இளம்பெண்களின் விருப்பமாகும். அதுவும் பொண்ணுங்கன்னா அவங்களுக்கு அழகே தலைமுடிதான். நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காத பெண்கள் இருக்கவே முடியாது. நவீன சிந்தனை உள்ள பெண்களாக இருந்தாலும் கூட தலைமுடி நீளமாக இருப்பதைத்தான் விரும்புவார்கள். சிலர் மட்டுமே பாப் கட்டிங் தலைமுடியில் இருப்பார்கள்.

hair fall solution


தமிழ்நாட்டு பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் இருப்பது தனி அழகு சேர்க்கும். சராசரியாக ஒருவரது தலையில் 100000 முதல் 150000 வரை தலைமுடி இருக்கும். தினமும் சராசரியாக 100 முடி தலையில் இருந்து உதிர்ந்துவிடும். ஆனால், அதனை ஈடு செய்ய அதே அளவு முடி வளர்ந்துவிடச் செய்வது இயற்கையின் அதிசயம்.

முடி உதிர்வதற்கான காரணங்கள்

தலைக்கு ஊற்றும் தண்ணீர்

நாம் தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும். அதேபோல அதிக சூடான தண்ணீரில் குளிப்பதும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.

ஊட்டச்சத்து குறைபாடு

உடலில் தேவையான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் போனாலும் முடி உதிர்வு ஏற்படும். நாம் உண்ணும் உணவில் சரியான அளவில் வைட்டமின், மினரல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வைட்டமின் B, வைட்டமின் E, மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.


தலைமுடியை சுத்தமாக வைத்திருப்பது

தலை முடியில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொள்வதின் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும். தினமும் தலைக்கு குளித்து தலையில் அழுக்கு மற்றும் தூசு போன்றவை சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

hair fall solution

பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை இருந்தால் மாற்றமே இல்லை நிச்சயமாக முடி உதிர்வு ஏற்படும். தலையில் இருக்கும் பொடுகை அகற்றுவதின் மூலம் முடி கொட்டுவதில் இருந்து தப்பிக்கலாம். பொடுகை நீக்கும் மருந்தை பயன்படுத்தி தலையில் பொடுகு இல்லாமல் சுத்தம் செய்து கொள்ளலாம்.

தூக்கமின்மை

தூக்கம் மனித உடலுக்கு ஆரோக்யம் அளிப்பதில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. தூக்கம் மனிதருக்கு மிகவும் அவசியமாகும். தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்வு ஏற்படும். நாளொன்றுக்கு சராசரியாக எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் மட்டுமே முடி கொட்டுவதை தடுக்கமுடியும்.


தலைமுடி உதிர்வதை தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகள் :

1. கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தலைமுடி கொட்டுவதை தடுக்க முடியும். மேலும் அடர்த்தியான முடியையும் பெற முடியும். கறிவேப்பிலையில் நிறைந்துள்ள இரும்புச்சத்து தலைமுடிக்கு அதிக அளவு ஊட்டத்தினை அளித்து முடி கொட்டுவதைத் தடுக்கிறது.

2. வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தலையில் தயிர் தேய்த்து ஒரு அரைமணி நேரம் நன்றாக ஊற வைத்து குளிப்பதால் தலைமுடிக்கு நல்ல ஓட்டம் கிடைத்து முடி கொட்டுவது குறைந்துபோகும்.

3. தேங்காய்ப்பால் எடுத்து தேங்காய்ப்பாலைக் கொண்டு தலைமுடியை அலசவேண்டும். தேங்காய்ப்பால் முடியை மிருதுவாக்கும். அதன் மூலம் முடி கொட்டுவது குறையும்.

4. வெதுவெதுப்பான எண்ணெய் எடுத்து தலையில் சிறிது சிறிதாக முடியின் வேர்க்கால்களில் படுமாறு தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை தடுக்கலாம். இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாகி முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

5. வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அந்த தண்ணீரை இளம் சூடாக ஆறவைத்து தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம்.

hair fall solution

6. தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை ஒன்றாக கலந்து தலையில் மசாஜ் செய்து தலையை ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்பு தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும்.

7. சின்ன வெங்காயத்தை அரைத்து தலைப்பகுதியில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து குளித்து வர பொடுகும் அதனால் ஏற்படும் முடி கொட்டுதலும் நிற்கும். ஆனால் இதை அடிக்கடி செய்யக்கூடாது. சின்ன வெங்காயம் குளிர்ச்சி அதிகம் என்பதால் பெண்களுக்கு தலையில் நீர் கோர்த்துக்கொள்ளும் நிலை வரலாம். மாதம் ஒரு முறை மட்டுமே சின்ன வெங்காயம் தேய்த்து குளிக்கவேண்டும். தலையை நன்றாக வெயிலில் உணர்த்தவேண்டும்.

8. செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் முடி கொட்டுவது நிற்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் தலை முடி கொட்டுவது தடுக்கப்படுவதுடன் முடி பளபளப்பாக மாறிவிடும்.

9. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து எடுத்து தலையில் தேய்த்து குளித்தால் முடி கொட்டுவது நின்று போவதுடன் முடி நன்கு வளரத் தொடங்கும்.

10. பாதாம் எண்ணெயை தலையின் வேர்க்கால்களில் படும்படி நன்றாக தேய்த்து ஊற வைத்து குளித்து வர முடி கொட்டுவது நிற்கும்.

11. இரவு தூங்கச் செல்வதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெயை லேசாக தலையில் தேய்த்து மசாஜ் செய்தால் தூக்கம் நன்றாக வரும். நன்றாக தூங்குவதால் முடி உதிர்வதும் நின்று போகும்.

hair fall solution

12. கற்றாழை ஜெல்லை அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின் குளித்தால் முடியின் வேர்க்கால்கள் உறுதியாகும். தலைக்கு குளிர்ச்சி உண்டாகும். இதனால் தலையில் உண்டாகும் அதிகப்படியான வெப்பம் குறைந்து முடி உதிர்வதும் நின்றுபோகும்.

13. வாரத்திற்கு ஒரு முறை எண்ணெயை லேசாக சூடு செய்து நன்றாக தலைக்குத் தடவி, லேசாக மசாஜ் செய்யவேண்டும். எண்ணெய் குளியல் போல எடுத்துவந்தால் முடி உதிர்வது நிற்கும்.

Updated On: 12 May 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்