/* */

என்னது..புளிச்சக் கீரையில் தொக்கா..? ஆமாங்க..! வாங்க செய்து பார்ப்போம்..!

Gongura Leaves in Tamil-வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த புளிச்சக்கீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

HIGHLIGHTS

Gongura Leaves in Tamil
X

Gongura Leaves in Tamil

Gongura Leaves in Tamil-புளிச்ச கீரையை நாம் கடைந்து சாப்பிட்டிருப்போம். புளிச்சகீரையில் தொக்கு செய்வது எப்படி என்று இன்று பார்ப்போம். இதை கோங்குரா சட்னி என்று அளிக்கிறார்கள். நாம் தொக்கு என்றே அழைப்போம். ஓகே..சரி வாங்க புளிச்சக்கீரை தொக்கு செய்வதை பார்ப்போம்.

இந்த தொக்கை சுடச் சுட சோறு போட்டு சாப்பிட்டால் சும்மா சாப்பிடறதே தெரியாது. அது வாய்க்குள் போய்க்கிட்டே இருக்கும். ஒருமுறை செய்து பார்த்தீங்கன்னா அப்புறம் விடவே மாட்டீங்க.

தேவையான பொருட்கள் :

புளிச்சக் கீரை 1 கட்டு,

நல்லெண்ணெய் தேவையான அளவு

வெந்தயம் சிறிதளவு (அரை ஸ்பூன் அளவு)

சீரகம் 1 டீ ஸ்பூன்

கொத்தமல்லி -1 டீ ஸ்பூன்

வரமிளகாய் -10 (காரத்திற்கு ஏற்ப மிளகாயை கூட்டி குறைத்துக்கொள்ளலாம்)

பூண்டு -10

தாளிப்பு பொருட்கள் :

கடுகு

உளுத்தம்பருப்பு,

கடலை பருப்பு

செய்முறை :

முதலில் ஒரு கட்டு புளிச்சக்கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து கழுவி தண்ணீரை சுத்தமாக வடித்துவிடுங்கள். கீரையில் ஈரம் இல்லாமல் இருக்கவேண்டும். ஒரு துணியில் போட்டு லேசாக துடைத்துக் கொள்ளலாம். கீரை சுத்தமாக உலர்ந்து இருக்க வேண்டும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, அதில் வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், வரமல்லி – 1 ஸ்பூன், வரமிளகாய் – 10, இந்த பொருட்களை சேர்த்து சிவக்க வறுத்து, இதை அப்படியே மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை அப்படியே ஒரு பாத்திரத்தத்தில் வைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு கடாயில் 4 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி,எண்ணெய் சூடானதும், அதில் சுத்தம் செய்த புளிச்சக்கீரையை போட்டு வதக்கவேண்டும். புளிச்சக்கீரை கொஞ்சம் பெரிதாக இருக்கும். அவைகளை கத்தியில் அரிந்தோ அல்லது கையில் முறித்தோ எண்ணெயில் போட்டு வதக்கவேண்டும். கீரை எண்ணெயில் வதங்கி வெந்து சுருண்டு வர வேண்டும்.

கீரை நன்றாக வெந்து சுருண்டு வந்தவுடன், கடாயில் இருக்கும் கீரையில் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை கீரையில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிண்டி அடுப்பை சிம்மில் வையுங்கள்.

அடுத்ததாக இன்னொரு அடுப்பில் வேறொரு கடாய் வைத்து அதில் 5 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி (நல்லெண்ணெய் தாராளமாக இருக்கலாம்), அது காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, பூண்டு பல் – 10, வரமிளகாய் – 2 இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து பூண்டு சிவக்கும் வரை நன்றாக வதக்கவேண்டும். பின்னர் தாளித்த பொருட்களை வதங்கிக்கொண்டிருக்கும் புளிச்சக் கீரையில் கொட்டி நன்றாக கடைவதுபோல விடாமல் 5 நிமிடங்கள் கிளறவேண்டும். இப்போது தாளித்த பொருட்களும் கீரையும் ஒன்றாக கலந்து நல்ல வாசனை வரும். அப்போது அடுப்பை அணைத்து விடலாம்.

இது அல்வா போல கடாயில் ஒட்டாமல் திரண்டு இருக்கும். கருமையா பச்சை நிறத்தில் இருக்கும். இந்த புளிச்சக்கீரை தொக்கை சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால்...ஆஹா..ஆஹா..வாயில் ஜாலம் ஊறுகிறது. தொட்டுக்கொள்ள ஒரு அப்பளம் அல்லது வடகம் இருந்தால் போதும். அதன் ருசியே தனிதான். காரமும்,புளிப்பும் அந்த நல்லெண்ணையுடன் சேர்ந்து ஒரு தனி ருசியைத் தரும். நல்லெண்ணெய் மட்டுமே புளிச்சக்கீரைக்கு ருசியைத்தரும். இன்னொன்று நல்லெண்ணெய்யில் செய்வதால் இதை ஒரு வாரம் கூட வைத்திருந்து சாப்பிடலாம். பழையதாக ஆக ஆக ருசியும் கூடும்.

இதை ஒருமுறை செய்து சாப்பிடுங்க.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 March 2024 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.