/* */

சிறு வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள்: இதனை தடுக்கவும் வழி இருக்குங்க

சிறு வயதில் பெண் குழந்தைகள் பூப்பெய்தினால் பல பிரச்சினைகளை சந்திக்கவேண்டியது உள்ளது.

HIGHLIGHTS

சிறு வயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள்: இதனை தடுக்கவும் வழி இருக்குங்க
X

சிறு வயதில் பெண் குழந்தைகள் பூப்பெய்தினால் பல பிரச்சினைகளை சந்திக்கவேண்டியது உள்ளது. இதனை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய வழிமுறைகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைவதினால் அவர்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது உள்ளது. பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடல் அமைப்பில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒரு ஆண் திருமண உறவுக்கு தயாராகிறான் என்பதை அறிந்து கொள்ள அவனது குரல் மாற்றம், மீசை அரும்புதல் உள்ளிட்ட சில வெளிப்படையான நிகழ்வுகள் தான் நடக்கின்றன.

ஆனால் பெண் குழந்தைகள் விஷயத்தில் அவ்வாறு அல்ல. பெண் குழந்தைகளின் கருப்பையில் உள்ள கருமுட்டைகள் முதன்முதலாக உடைந்து வெளியேறுவது பூப்பெய்தல் நிகழ்வாக கருதப்படுகிறது. இதன் மூலம் அவர்களது அந்தரங்க உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள் வளர்சிதை மாற்றங்கள் வெளிப்படையாக அல்லாமல் மறைமுகமாக நடந்து விடுகிறது.இது உலகெங்கும் உள்ள மனித இனங்கள் மட்டும் இன்றி விலங்குகள் பறவையினங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் பொருந்தும்.


பொதுவாக பெண் குழந்தைகளின் வாழ்வில் பூப்படைதல் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஒரு மரம் பூத்தால் தான் பின்னர் காய் காய்த்து, காய் பழமாகி, பழம் பலருக்கு உணவாக பயன்படுவது மட்டும் இன்றி , பழத்தில் இருந்து கிடைக்கும் விதை மீண்டும் தரையில் ஊன்றப்பட்டு அடுத்து ஒரு மரம் முளைப்பது ஒரு தொடர் சுழற்சிக்கு காரணியாகிறது.

அதனால் தான் பெண் குழந்தைகள் பூப்பெய்வதும் நிகழ்வை பண்டைக்காலங்களில் ஊரே கொண்டாடும் வகையில் பெரிய விழாவா நடத்தினார்கள். இன்றும் கிராமப்புறங்களில் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. பூக்காத மரம் காய்க்காது என்பது போல் பூப்பெய்யாத பெண் குழந்தை தாம்பத்திய வாழ்விற்கு தகுதியற்றதாகிவிடுகிறது.


பெண் குழந்தைகள் பூப்பெய்தும் நிகழ்வு அவர்களுடைய பரம்பரை ஜீன் ,சுற்றுச்சூழல், உணவு பழக்கம் என பல்வேறு காரணங்களுக்கு ஏற்ப நிகழ்கிறது. பொதுவாக முன்பெல்லாம் 12 முதல் 15 வயது வரை பெண் குழந்தைகள் பூப்பெய்தி வந்தார்கள். ஆனால் தற்போதெல்லாம் 8 முதல் 10 வயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். இவ்வாறு சீக்கிரம் பூப்படையும் பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது உள்ளது.


சிறிய வயதில் பெண் குழந்தைகள் பூப்பெய்யும்போது மாதா மாதம் அவர்களுக்கு வெளிப்படக்கூடிய மாதவிடாய் அல்லது பீரியட்ஸ் எனப்படும் கருமுட்டை உடைந்து வெளியேறும் இரத்தக் கசிவு அதை அவர்கள் கையாளும் விதம் அதன் காரணமாக ஏற்படக்கூடிய உடலியல் ரீதியான மற்றும் மனதளவிலான அணுகுமுறைகள் இப்படி ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. பொதுவாக 10 வயதெல்லாம் பாலப்பருவமாகும். அந்த வயதில் இவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதற்கு அவர்களது பெற்றோரை உடன் இருந்து எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது உள்ளது. இது பொதுவான ஒரு நடைமுறை அது மட்டுமல்ல உடல் ரீதியான மேலும் பல பிரச்சினைகளையும் இந்த குழந்தைகள் சந்திக்க வேண்டியது உள்ளது.


இதன் காரணமாக தற்போது பள்ளிகளிலேயே வளரிளம்பருவ மாற்றம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் பாடமாக நடத்தி வருகிறார்கள். என்ன தான் நடத்தினாலும் இந்த சிறு வயதில் பெண் குழந்தைகள் பூப்படையும் நிகழ்வுகளை சற்று தாமதப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் அதற்கு கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

முன்பெல்லாம் தாய் சிறுவயதிலேயே பூப்படைந்தால் அவரின் பெண் குழந்தையும் சீக்கிரம் பூப்படைவர் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இயல்பாகவே சிறுவயதிலேயே சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்தி விடுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கங்களும், லைப் ஸ்டைல் எனப்படும் வாழ்க்கை முறையும் தான் காரணம் ஆகும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்முடைய உணவு பழக்கம் என்பது இயற்கையோடு ஒன்றி இருந்தது. குறிப்பாக அரிசி சோறு நாம் அதிகம் சாப்பிட்டாலும் சோளம், கம்பு, தினை போன்ற சிறு தானியங்களையும் அதிக அளவில் சாப்பிட்டு வந்தார்கள். வீடுகளில் இட்லி, தோசை போன்ற உணவுகள் என்பது தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும் அல்லது ஏதாவது திருவிழா காலங்களிலும் தான் செய்வது உண்டு. மற்றபடி பெரும்பாலும் காலை உணவாக கம்பங்கூழ், கேழ்வரகு கஞ்சி என இயற்கை சார்ந்த உணவுகளை சாப்பிட்டு வந்தார்கள்.


ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தினமும் இட்லி, தோசை சாப்பிடக்கூடிய நிலை உள்ளது. அது மட்டுமல்ல. முன்பெல்லாம் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை மாதத்திற்கு ஒரு நாள் சாப்பிட்டாலே பெரிய விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது இவை நமது அன்றாட உணவில் தினமும் இடம் பெறுகிறது. இப்படி வறுத்த, பொறித்த உணவுகளை நாம் அதிகம் எடுத்துக் கொள்வதால் நமது வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வாழ்க்கை முறை மாற்றம் தான் நமது உடல் அமைப்பையே மாற்றி விடுகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

தினசரி வாழ்வில் பொரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், வெளியில் இருக்கும் உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. உணவில் கலக்கப்படும் பதப்படுத்திகள், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் போன்ற உணவு தயாரிக்க பயன்படும் எண்ணெய் இவை அனைத்தும் பெண்கள் சிறு வயதிலேயே பூப்படைவதற்கு ஒரு முக்கிய காரணியாக அமைந்து விடுகிறது. இது தவிர சுற்றுச்சூழல் மரபியல் மற்றும் வளர்ச்சிதை மாற்றம், மன அழுத்தம், ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் தூக்கமின்மை போன்ற மற்ற காரணங்களும் விரைவாக பூப்படைவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. இதனால் குழந்தை பருவத்திலேயே உடல் பருமன், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஹார்மோன் சுரப்பியில் மாற்றம் ஏற்படும் போது உடலில் வளர்வதை மாற்றம் குறைவது, கருப்பை நீர்க்கட்டி, குழந்தையின்மை போன்ற பிரச்சினைகளும் அதிகரிக்கும்.


இவ்வாறு பதிமூன்று வயதுக்கு முன்னர் பூப்படையும் பெண்கள் தங்களது பிற்காலத்தில் மேலும் ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்க வேண்டியது உள்ளது. அது என்னவென்றால் பொதுவாக 13 முதல் 15 வயது பூப்படையும் பெண்கள் மாதா மாதம் ஏற்படும் பீரியட்ஸ் தொடர்ச்சி 45 முதல் 50 வயதுக்குள் அவர்களுக்கு நின்று விடும். இதனை மெனோபாஸ் என சொல்கிறார்கள். இந்த மெனோபாஸ் காலகட்டத்தில் பெண்களின் மனநிலை பெரிய அளவில் மாற்றம் ஏற்படுகிறது. இப்பொழுது எல்லாம் மெனோபாஸ் கால கட்டம் வருவதற்கு முன்பாகவே பல பெண்களுக்கு கருப்பைகளில் பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் அவற்றை அப்புறப்படுத்த கூடிய ஒரு நிலை ஏற்படுகிறது.

பண்டைக் காலத்தில் பெண்களுக்கு கருப்பை தொடர்பாக ஏற்பட்ட நோய்கள் எல்லாம் மிக மிகக் குறைவு. ஆனால் தற்போது நூற்றில் 50 பேருக்கு இந்த பிரச்சனையை அவர்கள் தங்களது வாழ்நாளில் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

சரி அதற்கும் சிறு வயதில் பெண் குழந்தைகள் பூப்படைவதற்கும் என்ன காரணம் என்ன தொடர்பு என பார்க்கலாம்.

இவ்வாறு பதிமூன்று வயதுக்கு முன்னர் பெண் குழந்தைகள் பூப்படைந்தால் மெனோபாஸ் விரைவாக வந்துவிடும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது .இதில் 13 வயதுக்கு முன்னர் பூப்பெய்பவர்களுக்கு மெனோபாஸ் சீக்கிரம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன என சென்னையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். இதனால் இதய நோய், சர்க்கரை நோய், ஆஸ்டியோ ரோபோசிஸ் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமல்லாமல் தூக்கமின்மை பதற்றம் என மன உளைச்சல் போன்ற வாழ்வியல் பிரச்சினைகளும் உண்டாகும் என எச்சரிக்கிறார்.

ஆக பெண் குழந்தைகள் இந்த பிரச்சினைகளில் இருந்து எல்லாம் தப்புவதற்கு அவர்கள் மிகச்சிறிய வயதில் பூப்பெய்வதை தடுப்பதற்கான வாழ்க்கை முறையை பெற்றோர்களாகிய நாம் தான் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம்.

சீக்கிரம் பூப்பெய்வதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களில் பரிமாறப்படும் தண்ணீர், குளிர் பானங்கள் போன்ற உணவுகளை பெண் குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மேலும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சரியாக சுத்தம் செய்து பயன்படுத்துவது நல்லது. ரசாயனம் கலக்கப்பட்ட பால் மற்றும் இறைச்சி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதற்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. இதனை வாழ்வியல் முறையாக கடைபிடித்தால் பெண்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பது மருத்துவ நிபுணர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.

Updated On: 27 March 2023 8:40 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  8. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  9. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்