/* */

Fish types in Tamil: அதிக சத்துக்கள் நிறைந்த மீன்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்

இந்தியாவில் அதிக ஆறுகள், ஏரி மற்றும் குளங்கள் உள்ளதால் ஆண்டு முழுக்க எல்லா சமயங்களிலும் மீன் சாதாரணமாக கிடைக்கும் உணவாக இருக்கிறது.

HIGHLIGHTS

Fish types in Tamil: அதிக சத்துக்கள் நிறைந்த மீன்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்
X

பைல் படம்

Fish types in Tamil

மீன்களில் பல வகைகள் உள்ளது, அவற்றில் சில வளர்ப்பு மீனாகவும், சில மீன்கள் சாப்பிடுவதற்கும் பயன்படுகின்றன. இருப்பினும் இன்றைக்கு இருக்கும் இளம் தலைமுறையினருக்கு மீன்களின் பெயர்கள் கூட சரியாக தெரிவதில்லை. எனவே இந்த பதிவில் மீன் வகைகள் மற்றும் அதன் பெயர்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கு படித்து தெரிந்து கொள்வோம்

சாப்பிடும் உணவில் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு மீன். இதில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்று ஏராளமான நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இதுதவிர மீன்களில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோடீன் நிறைந்துள்ளது. மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு திறன், மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது

இந்தியாவில் அதிக ஆறுகள், ஏரி மற்றும் குளங்கள் நிறைந்துள்ளன. இதன் காரணமாக ஆண்டு முழுக்க எல்லா சமயங்களிலும் மீன் சாதாரணமாக கிடைக்கும் உணவாக இருக்கிறது.

முள் இல்லாத மீன் வகைகள் – ருசியான மீன் வகைகள்

  • வஞ்சிர மீன்
  • வெளவால் மீன்
  • பாறை மீன்
  • மத்தி மீன்
  • கானாங்கெளுத்தி மீன்
  • நெத்திலி மீன்
  • சூரை மீன்
  • சுறா
  • கிழங்கான் மீன்
  • விலாங்கு மீன்
  • விரால் மீன்
  • காலா மீன்
  • ஜிலேபி

மீன் வகைகள் மற்றும் மீன் தமிழ் பெயர்கள்

கடல் மீன் வகைகள் பெயர்கள்

Batoids Fish திருக்கை மீன்

Snail fish சாளை மீன்

Mozambique tilapia திலாப்பியா மீன்

Dolphin ஓங்கில்

Common Carp சாதாக்கெண்டை மீன்

Parrot fish கிளி மீன்

Carp கெண்டை

Nemipterus japonicus செங்காலை / செம்மீன் / சங்கரா

Barracudas சீலா மீன்

Catla கட்லா மீன்

Spined loach அயிரை மீன்

Mahi-mahi அயிலை

Lady Fish கெலங்கான் மீன்

Saw Fish உலுவை மீன்

Weasel shark வீசல் சுறா

Rabbitfish முயல் மீன்

Pilot fish பைலட் மீன்

Shark சுறா மீன்

Sardines மத்தி மீன்

Seabass கொடுவா மீன்

Saw / Gur கோலா மீன்

Squid ஊசி கனவா மீன்

Shrimp / Prawn இறால்

Salmon சால்மன் மீன்

Red Snapper சங்கரா மீன்

Seer / King fish வஞ்சரம் மீன்

Little Tunny சூறை

Anchovies நெத்திலி மீன்

Crab நண்டு

Cod பண்ணா மீன்

Cat fish கெளுத்தி மீன்

Cuttle கனவா மீன் in english – Cuttle

Halibut போதா மீன்

Butter fish விரால் மீன்

Barracuda ஷீலா மீன்

Pomfret வவ்வால் மீன்

Mackerel கானாங்கெளுத்தி

Eel விலாங்கு மீன்

Ribbon வாளைமீன்

Tilapia திலாப்பியா / ஜிலேபி மீன்

Leather skin fish தீரா மீன்

Malabar Trevally பாறை மீன்

Yellow Tuna கீரை மீன்

இந்தியாவில் கிடைக்கும் மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்த மீன் வகைகளை பற்றி பார்ப்போம்.


ரோகு (Rohu- Carpo Fish)

இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இந்த மீன் அதிகம் கிடைக்கும். இதில் ஏராளமான புரோடீன் மற்றும் ஒமேகா 3 ரக கொழுப்பு, வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அனைத்து இந்தியர்களும் வாங்க கூடிய விலையில் இந்த மீன் கிடைக்கிறது. இதில் மெர்குரி அளவு குறைவாக உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாம்.

கட்லா (Catla- Bengal Carp)

இது சுத்தமான நீரில் கிடைக்கும் மீன் எனலாம். முழுமையான வளர்ந்த நிலையில், இந்த மீன் அதிகபட்சம் 2 கிலோ வரை எடை கொண்டிருக்கும். இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் ஆகும். இதில் அதிகளவு சல்பர் மற்றும் சின்க் நிறைந்துள்ளது. இது சரும ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது.


திரை வாளை (Indian Salmon)

இந்த மீன் இந்தியாவின் சால்மன் என்றும் கூறப்படுகிறது. இது நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில் அதிகம் கிடைக்கும். இது விலை உயர்ந்த மீன் என்பதோடு, இதன் சுவையும் தூக்கலாக இருக்கும். இந்த மீனில் அதிகப்படியான அமினோ அமிலம் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளது.


அயல (Bangada – Horse Mackeral)

தென் பகுதி மற்றும் மத்திய இந்தியாவில் அதிகம் கிடைக்கும் மீன் இது. இதில் ஏராளமான ஒமேகா 3, வைட்டமின் டி மற்றும் செலனியம் நிறைந்துள்ளது. இது இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம் என பல்வேறு பாதிப்புகளை சரி செய்யும்.


சங்கரா (Pink Perch)

இந்த மீனில் ஏராளமான புரோடீன் மற்றும் மிக குறைந்த அளவு மெர்குரி உள்ளது. இது அதிகளவு புரோடீன் தேவைப்படும் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த மீன் ஆகும். மேலும் இது உடல் எடை குறைப்பு மற்றும் தசைகளை வலுவாக்க சிறந்தது. இந்த மீனும் அனைவரும் வாங்க கூடிய விலையில் கிடைக்கிறது.

வவ்வால் (Pomfret)

இது நாடு முழுக்க பிரபலமான மீன் ஆகும். இதில் குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. அதிக சுவை மட்டுமின்றி ஏராளமான அளவில் ஒமேகா 2 அமிலம் , வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் டி நிறைந்து இருக்கிறது.

மத்தி (Sardines)

அதிகப்படியான டிஹெச்ஏ நிறைந்த மீன் இது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஞாபக சக்தியை தூண்டும். மேலும் மூளை வளர்ச்சிக்கும் இந்த மீன் சிறந்தது. இதில் ஏராளமான புரோடீன், வைட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு மன அழுத்தத்தை போக்குகிறது.


கெளுத்தி (Cat Fish)

குறைந்த அளவு கலோரி அதிக புரோடீன் நிறைந்த மீன் இது. தவிர ஏராளமான நியூட்ரியன்ட்கள், வைட்டமின் பி12, செலினியம், ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீன் சாப்பிடலாம். இது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதய கோளாறு ஏற்படுவதை தடுக்கும் திறன் கொண்டுள்ளது. எனினும் இதில் மெர்குரி அளவு அதிகம் இருப்பதால் கருவுற்றவர்கள் இந்த மீன் சாப்பிட கூடாது.

Updated On: 20 Oct 2023 3:51 PM GMT

Related News

Latest News

  1. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  2. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
  3. காஞ்சிபுரம்
    செய்யாறு பாலத்தில் எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 30 நிமிட கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் வீரர் கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெற்றி
  6. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  7. குமாரபாளையம்
    நீர் தெளிப்பான் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம்..!
  8. நாமக்கல்
    பரமத்தி வேலூரில் ஸ்ரீ சங்கர ஜெயந்தி விழா கோலாகலம்..!
  9. நாமக்கல்
    நாமக்கல் தெற்கு அரசு பள்ளி மாணவர்கள் பொருளியலில் 100க்கு 100...
  10. ஈரோடு
    ஈரோடு லக்காபுரத்தில் சங்கர ஜெயந்தி மகோத்சவம் நிகழ்ச்சி