/* */

பாத்து சூதானமா இருந்துக்கோங்க..! நம்மைச்சுற்றிலும் உறவுகள் பெயரில் போலி முகங்கள்..!

Fake Family Members Quotes in Tamil-உண்மை உறவுகள் எப்போதும் பிரதிபலனை எதிர்பார்க்காது. உண்மையான உறவுகளை நாம் அடையாளம் காணாவிட்டால் நாம் வாழ்க்கையை இழந்து நிற்போம்.

HIGHLIGHTS

பாத்து சூதானமா இருந்துக்கோங்க..! நம்மைச்சுற்றிலும் உறவுகள் பெயரில் போலி முகங்கள்..!
X

fake people quotes in tamil-போலி உறவுகள் மேற்கோள்கள்.(கோப்பு படம்)

Fake Family Members Quotes in Tamil-நம் அன்பை பரிமாறிக் கொள்ளத்தான் உறவுகளை தேடுகிறோம். ஆனால் அந்த உறவுகளே நம்மிடம் போலியாக இருந்தால், வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். அவர்கள் மீது வைத்த அன்பிற்கும் அர்த்தமில்லாமல் போய் விடும். அத்தைகைய போலி உறவுகளை நாம் சரியாக அடையாளம் காணமுடியாவிட்டால், வாழ்க்கையை நாம் தொலைத்து நிற்போம். அத்தகைய போலி உறவுகளைப் பற்றிய மேற்கோள்களை இங்கு பார்க்கலாம். இதை உங்களுக்காக..

  • எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள். நமக்கு தான் தெரிவது இல்லை, வேசம் கலையும் வரை நடந்தது அனைத்தும் நாடகம் என்று.
  • பாசமாய் நடிப்பவர்கள் வேஷம் களையும் போது வீணாய் கோஷம் எழுப்புவார்கள்.
  • என்னதான் கலர் கலரா பெயிண்ட் அடித்தாலும், தகரம் என்றைக்கும் தங்கம் ஆகாது. சில மனிதர்களும் அப்படித்தான்.

Fake People Quotes in Tamil

  • முகத்தை வைத்து அகத்தை முடிவு செய்யாதே..முகமா இல்லை முகமூடியா என்று தெரியும் முன்..!
  • எல்லா வகை முகமூடிகளையும் அணிய தெரிந்தவர்கள், வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
  • ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதயம் இல்லாமல் இருந்தால் போதும்.
  • ஒருவரை நம்புவதாக இருந்தால், அவர் சொல்லை கேட்டு நம்பாதே. அவர் செயலை பார்த்து பின் நம்பு.
  • பொய் பேசி பொய்யுடன் வாழ்வதற்கு, மெய் பேசி மெய்யுடன் தனிமையில் வாழ்வது சிறந்தது.

Fake People Quotes in Tamil

  • இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே. எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே சுற்றி வருகின்றனர்.உன்னை நம்பு. உன் செயலை நம்பு.
  • எப்போதும் ஒரு கண் விழித்திருக்கட்டும். உங்களுக்கு கை தட்டுபவன் கூட கால்லை வாரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கலாம்.
  • நான் நம்பிய உறவு ஓர் உறவு. அந்த ஓர் உறவும் பொய் என்று ஆனபின், காணும் உறவெல்லாம் பொய்யாகவே தெரிகிறது கண்களுக்கு..!
  • என்னை உன் சுய தேவைக்கு பயன்படுத்திக் கொண்டால், அது எப்போதும் எனக்கு தெரியாமல் பார்த்துக் கொள். எப்போது தெரிகிறதோ அப்போது முதல் நீயும் உன் நினைவுகளும் எனக்கு, குப்பை தொட்டியும், குப்பையும் தான்.
  • என்னதான் நடித்துக் கொண்டே இருந்தாலும். சூழ்நிலைகள் மாறும் போது அவர்களின் சுயரூபம் தெரிந்து விடும்.

Fake People Quotes in Tamil

  • உலகமகா நடிகனாக இருந்தாலும் நம் நிலை தாழும் போது அவர்கள் வேசம் கலைந்து உண்மை தெரிந்து விடும்.
  • ஒருவரை நண்பராகவோ அல்லது உறவாகவோ தேர்வு செய்யும் போது, மிகவும் கவனமாக செயல்படுங்கள். ஏனெனில், இங்கு நிஜ முகத்துடன் சுற்றுபவர் குறைவு.
  • சிரிப்பவனை எல்லாம் நம்பி விடாதே. அவனவன் சிரிப்புக்கு பின் ஆயிரம் உள் நோக்கங்கள் இருக்கலாம்.
  • தேவையின் போது அட்டை போல் ஒட்டிக் கொண்ட மனிதர்கள். தேவை முடிந்தபின் யாரென்றே தெரியாதது போல் நடந்து கொள்வது வலிக்கத்தான் செய்கிறது.
  • காதலிக்க 'நேரம்' இல்லாமல் விட்டு விட வில்லை. காதலில் 'நேர்மை' இல்லாமல் விட்டு விலகி விட்டேன்.

Fake People Quotes in Tamil

  • போலி உறவுகளை வசதி வாய்ப்புடன் வாழும் போது பார்க்கலாம்.உண்மையான உறவை அசிங்கப்பட்டு அவமானப்பட்டு வேதனை படும்போது பார்க்கலாம்.
  • எல்லா சூழ்நிலையிலும் உடன் பயணிப்பது உண்மையான உறவுகள் மட்டுமே.
  • நீங்கள் எப்போது உண்மையான ஓர் உறவை காண்கிறீர்களோ, அப்போது முகத்தை தேடாமல் அகத்தை தேடுங்கள். அது வாழ்க்கையை வசந்தம் ஆக்கும்.
  • ஒருவரை கண்மூடித் தனமாக நம்பியதால் தான் பல இரவுகள் கண்மூடி தூங்க முடியாமல் போகிறது ...!
  • நீ என்னை பொய்யாக தான் நேசித்தாய் என்பது தெரிந்திருந்தால் உனக்காக நான் அழும் நிலை வந்திருக்காது..!

Fake People Quotes in Tamil

  • நாம் நேசிக்கும் ஒருவரின் சிறு மாற்றங்கள் கூட நம்மை அழ வைக்கும்
  • உண்மையாக நேசிக்காதவர்களுக்கு நாம் மட்டுமல்ல நம்முடைய அன்பும் தொல்லையாகத் தான் தெரியும்..1
  • பிடித்தவர்கள் என நினைத்து நம்மிடம் நடிப்பவர்களை தான் நேசித்து இருக்கின்றோம் நாம்..!
  • ஒருமுறை ஏமாந்த இதயம் இன்னொருவரின் அன்பிற்கு எளிதில் அடிமையாவது இல்லை..!
  • நம்ம தான் எல்லாரையும் நம்ம வாழ்க்கையின் முக்கியமானவர்களாக நினைக்கிறோம் ஆனால் அவங்க வாழ்க்கையில நம்மை முக்கியமானவராக நினைப்பது இல்லை...!

Fake People Quotes in Tamil

  • இதுவரைக்கும் நம்பி நான் ஏமாந்தது போதும்.. இனிமேலும் நான் ஏமாறத் தயாராக இல்லை..!
  • பொய்யாக ஒரு இதயத்தை நேசிப்பதை காட்டிலும் உண்மையாக அவர்களை வெறுப்பது இருவருக்கும் நல்லது..!
  • ஒருவர் மீது கண்மூடி தனமாக நம்பிக்கை வைக்காதீர்கள் நம்பிக்கை உடையும் போது உள்ளமும் உடையும்..!
  • மறப்பதாக இருந்தால் ஒருவரை நேசிக்காதீர்கள்.. ஒரு முறை நேசித்துவிட்டால் அவர்களை ஆயுள் வரைக்கும் மறக்காதீர்கள்.. அதுதான் உண்மையான நேசத்தின் அடையாளம்..!
  • நம்மை விரும்பாத ஒருவரை விரட்டி செல்வதை விட விலகி செல்வது நல்லது..!

Fake People Quotes in Tamil

  • ஒருவரை நம்பி தான் ஏமாந்துள்ளேனே தவிர,நான் யாரையும் நம்ப வைத்து ஏமாற்றியது இல்லை..!
  • காதலிப்பது தவறில்லை. ஆனால், காதல் என்கிற பெயரில் ஒருவரை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் தவறு..!
  • என்னனு சரியா சொல்லத் தெரியல.. ஆனா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு..நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்பது மட்டும் தெரிகிறது..!
  • போலியான உறவுகளுடன் நாமும் சேர்ந்து பொய்யாக வாழ்வதை விட , தனிமையில் வாழ்வதே சிறந்தது..1
  • உங்கள் உண்மையான நோக்கத்தை மறைக்காதீர்கள், ஏனென்றால் காலம் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தும், எனவே உண்மையாக இருங்கள், போலியாக அல்ல..!

Fake People Quotes in Tamil

  • உங்கள் கெட்ட நேரத்தில் உங்களுடன் நிற்கும் நண்பர்களை மரியாதை செய்யுங்கள்..! உங்கள் கெட்ட நேரத்தில் உங்களை விட்டு வெளியேறுபவர்களிடமிருந்து விலகி இருங்கள்..!
  • வாழ்க்கையில் ஒரு போலியான உறவுகளைவிட நமக்கான எதிரிகளே மேல்..!
  • யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதை காலம் காட்டும்..அதுவரை உங்கள் பாதையில் உங்கள் பயணம் தொடரட்டும்..!
  • உங்கள் பலவீனங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள்..! ஏனென்றால் உங்களுக்கு எதிராக யார் அவற்றைப் பயன்படுத்துவார்கள் என்று உங்களுக்கு இப்போது தெரியாது..!
  • சில நேரங்களில் நீங்கள் ஒரு முட்டாள் போல பாசாங்கு செய்ய வேண்டும்..! ஏனென்றால் அவர்களால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை நீங்கள் கண்டுணர்வதற்காக..!

Fake People Quotes in Tamil

  • ஒருபோதும் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள்..! ஏனென்றால் அவர்கள் எப்போது உங்களை விட்டு வெளியேறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது..!
  • உன்னை விரும்புவதாக யாராவது சொன்னால் எளிதில் நம்பி விடாதே..! ஏனென்றால் அவர்கள் எப்போது மனம் மாறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியாது..! நீ அவர்களைப் படிப்பதற்கான கால அவகாசம் இருக்கவேண்டும்..!
  • போலியான உறவுகள் எப்போதும் உங்களுக்கு உதவுவது போலத் தான் செயல்படுகிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் உங்களுக்கு உண்மையில் உதவவில்லை, உங்களை பயன்படுத்திக்கொள்ளும் நூதன வழி..!

Fake People Quotes in Tamil

  • வாழ்க்கையில் ஒரு சிலரை மட்டுமே நம்புங்கள். உங்களுக்கு துரோகம் செய்யாதவர்களை மட்டும். ஏனென்றால் யார் உண்மையானவர் என்று உங்களுக்குத் தெரியாது..!
  • வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு போலி மனிதர் இருப்பார் எனில், அவர் உங்களை எப்போது தாக்குவார் என்று உங்களுக்குத் தெரியாததால் கவனமாக இருங்கள்..!
  • காலம் எல்லாவற்றையும் அம்பலப்படுத்தும், ஏனென்றால் போலியான விஷயங்களும் மனிதர்களும் வாழ்க்கையில் நீண்ட காலம் நீடித்து இருக்கமாட்டார்கள்..!
  • அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Updated On: 22 Jan 2024 8:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்