/* */

பொருட்களில்தான் போலி.... அன்பிலுமா.?....படிச்சு பாருங்க.....

Fake Love Quotes in Tamil-ஏங்க....கடையில விற்கிற பொருட்களில்தான் போலிகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அன்பிலும் கலப்படமா? போலியா.... என்னத்தைச் சொல்ல போங்க...

HIGHLIGHTS

Fake Love Quotes in Tamil
X

Fake Love Quotes in Tamil

Fake Love Quotes in Tamil

பரந்த விரிந்த இந்த உலகத்தில் உண்மைகளுக்கு மதிப்பு குறைந்துவருவதுதான் வேதனையிலும் வேதனை... போலிகளுக்கு தான் அதிக மரியாதை கிடைக்கிறது. இதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

பொருட்களில்தான் போலி வந்துள்ளதைப் பார்த்திருக்கிறோம்.கலப்படம் போலி இவைகள் அனைத்துமே பொருட்களில்தான் கண்டுள்ளோம். ஆனால் அன்பு செலுத்துவதில் போலியா? இது என்ன புதுசா இருக்குது,,,, என கேட்கிறீர்களா... ஆமாங்க... ஆமா... காதலிலும் போலி, அன்பிலும் போலி, காரியம் ஆகிறவரை இதனை கன்டினியூ செய்வார்கள் அவர்களுக்கு தேவைப்பட்டது கிடைத்தவுடன் அவ்வளவுதான் எஸ்கேப்... ஆள் அட்ரஸ் இல்லாமல் காணாமல் போய்விடுகிறார்கள்.

எத்தனை போலிகள் இந்த நாட்டில்? எல்லாம் பணம் செய்யும் மாயாஜாலம் என்றுகூட சொல்லலாம். குறைவான காலத்தில் வசதி வாய்ப்புகள் ஏற்பட வேண்டும் என ஒரு சிலர் விரும்புவதால்தான்இத்தனை மாற்றங்கள். உழைக்காமல் முன்னேறுவது எப்படி? என ஒரு கூட்டம் ரூம்போட்டு யோசித்துக்கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கும் தீர்மானங்கள் தான் போலிகளின் செயல்பாடுகளாக உருவெடுக்கின்றன என்று கூட சொல்லலாம். இந்த விஷயத்திற்கு தனிநபர் சென்றால் வேலை ஆகிவிடாது.நாலுபேரை ஏமாற்றவேண்டும் என்றால் நாலுபேர் போனால்தான் நம்புவார்கள். அதற்காக நாட்டில் ஒரு கூட்டமே அலைகிறது. இரிடியம் மோசடி, அதிகவட்டி தருவதாக மோசடி, ஒன்றுக்கு டபுள் தருவதாக மோசடி, ஆன்லைன் லாட்டரி, இதுபோல் தற்போது டெக்னாலஜி டெவலப்மென்ட் ஆல் ஆள் முகத்தினை கூட பார்ப்பது இல்லை பணத்தினை அனுப்பிவிட்டு பின்னர் ஏமாற்றிவிட்டார்கள் என புகார் கொடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவையெல்லாம் போலிகள் செய்யும் மாயாஜால வேலைகள்தான்....

இந்த போலிகள் காதலையும் விட்டுவைக்கவில்லை. காதலிப்பது போல் நடித்துவிட்டு பின்னர் காரியம் ஆனபின் ஆளை க்ளோஸ் செய்துவிடுகின்றனர் அல்லது எஸ்கேப்... தலைமறைவாகிவிடுகின்றனர். பழகும் வரை நன்றாக இனிக்க இனிக்க பேசி கடைசியில் வேலை முடிந்தபின் ஓட்டமெடுக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஆக காதலில் கூட உண்மையில்லைங்கோ...உஷார்....

அன்பாலே தேடிய என் அறிவு செல்வம் எங்கே....ஆ...ஆ.. என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். நாம் அன்பால் தேடினாலும்அது கடைசியில் வில்லங்கத்தில்தான் கொண்டு போய்விடுகிறது உண்மையான அன்பு என்பது ஆத்மார்த்தமானது. இது உள்ளத்தில் உறைந்து போனது. இது உண்மையான உறவுகளில் மட்டுந்தான் இருக்கும். ரத்த பாசம் உள்ளவர்களிடத்தில் மட்டுமே காணப்படும். போலி அன்புஎன்பது ஆத்மார்த்தமானது அல்ல. அது அவ்வப்போது பச்சோந்தி போல் நிறத்தினை மாற்றிக்கொள்ளும்.அன்பில் போலியாக நடிப்பவர்களை இனங்காண முடியவில்லையே? இவர்களை யாராலும் அரெஸ்ட் செய்யவே முடியாதுங்க... அதுபோல்இனிக்க இனிக்க பேசி காரியத்தினை சாதித்துக்கொண்டு கழட்டிவிடுவோர் இந்நாட்டில் அதிகரித்துவிட்டனர். நாம்தான் இவர்களிடம் உஷாராக இருக்கவேண்டும்.

போலி அன்பிற்கான அன்பான வாசகங்கள் இதோ.....

சிரிப்பதற்கு கற்றுக்கொள்ளுங்கள். அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.

முகத்திற்கு முகமூடி போடுபவர்களைவிட அகத்திற்கு முகமூடி போடுபவர்கள் அதிகம்தான்.

எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்கமாட்டாங்க... நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல.

சில உறவுகளால் வாழ்க்கை துளிர்விடுகிறது. சில உறவுகளால் வாழ்க்கை துவண்டு விடுகிறது!

அத்தனை அன்பும் பொய் தான் என்று தெரிய வரும்போது, அத்தனை நாள் பழக்கமும் அரை நொடியில் அர்த்தமற்று போகிறது!

நிஜத்தை விட நிழல்கள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும்! நிழலை நம்பி, நிஜத்தை தொலைத்து விடாதீர்கள்!

வேஷத்துக்கு கிடைக்கும் மதிப்பு கூட, பாசத்துக்கு கிடைப்பது இல்லை!

கருவேலம் மரம் கூட "என்னிடம் முட்கள் உள்ளது. தொட்டால் குத்திவிடும்!" என்று காட்டுகிறது. ஆனால் சிலர் நண்பர்கள் போல பழகி குத்தி விடுகின்றனர்!

எப்போதும் ஒரே மாதிரி உண்மையாக இருப்பவர்களை விட, ஆட்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றார் போல் மாறுபவர்களையே இந்த போலி உலகம் பெருமையாக ஏற்றுக் கொள்கிறது!

வேஷமிட்டு பாசம் காட்டும் உறவுகளிடம், பழக தெரிவதில்லையோ? நடிக்க கற்றுக் கொள்!

அனைவரையும் நம்பு! ஆனால், எல்லா நேரங்களிலும் நம்பாதே!

எந்த உறவும் கடைசி வரையில் நிலைக்காது என்று தெரிந்து கொள்ளும்போது, வாழ்க்கையில் அமைதிக்கான விடை கிடைத்து விடுகிறது!

சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!

துரோகிகள் மீது நம்பிக்கை வைத்ததற்காக வருத்தப்படாதே! நீ வைத்த நம்பிக்கை தான் துரோகிகளை உனக்கு அடையாளம் காட்டுகிறது!

உன் வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சி கொள்பவர்களை விட, பொறாமை உடையவர்களே அதிகம்!

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாமல், உண்மை முகத்தை எப்போதும் காட்டு போலி வேடம் நிலையானதல்ல!

கண்மூடித்தனமாக ஒருவரை நேசித்து விட்டால் அவர்கள் சொல்லும் பொய்கள்கூட உண்மையாகவே தெரிகிறது

ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்

முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்துவிடும்

அலட்சியங்களை சகித்துக்கொள்வதை விட நிராகரிப்பை ஏற்றுக்கொள்வது எவ்வளவோ மேல் பணம்,புகழ்என்று எவ்வளவு இருந்தாலும் பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்

சில உறவுகள் நம்முடன் இருப்பதைவிட விலகிச்செல்வதே சிறந்தது ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள். ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்.

நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது

இன்றுபழகுவர் நாளை விலகுவர் உறவு தொடங்கும் முன்பே பிரிவிற்கும் தயாராகிக்கொள்.

அளவோடு பழகணும் எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரிய வரும்.

தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்புஇருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான்பாசம் இருக்கும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 9 March 2024 5:32 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?