/* */

முகம் பளபளப்பா..மினுமினுன்னு இருக்கணுமா..? கொஞ்சம் கவனிங்க..சிஸ்டர்ஸ்..!

Face Brightening Tips in Tamil-இயற்கை அழகோடு பளபளப்பா இருப்பதற்கு இயற்கை முறை வழியில ஒரு டிப்ஸ் இருக்கு. வாங்க பார்ப்போம்.

HIGHLIGHTS

Face Brightening Tips in Tamil
X

Face Brightening Tips in Tamil

Face Brightening Tips in Tamil

முகத்தை அழகாக வைத்திருப்பதில் பெண்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு அளவே இருக்காது. சிட்டர்ஸ்..கோபப்படாதீங்க..! நான் உண்மையைத்தான் சொல்றேன். ஆனாலும் பெண்களுக்கு இயற்கை அழகுதான் மனதை மயக்குவதாக இருக்கும். ஆனாலும் வெயிலில் செல்பவர்கள் அல்லது வேலைக்கு போறவங்க போன்றோர் சில அழகு குறிப்புகளை பின்பற்றினால் அந்த இயறக்கை அழகு பாதுகாக்கப்படும்.

பொதுவாக வெயிலில் சுற்றித் திரிந்து வேலை செய்வோர் அல்லது இயற்கையாகவே சில பெண்களுக்கு எண்ணெய் வழியும் முகமாக இருப்பது போன்றவர்கள் அழகை காப்பாற்றியே ஆகவேண்டும். அப்படித்தானே சிஸ்டர்ஸ்?

இப்படி ஏற்படும் சரும பிரச்னைகளை தடுக்க இயற்கை முறையிலேயே அதுவும் நம் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களைப் பயன்படுத்தி எளிமையாக செய்துவிடலாம். எப்டீன்னு பாருங்க சிஸ்டர்ஸ்.

ஒரு சிறு குறிப்பு

அழகை காப்பாற்ற முனையும் ஆண்களும் இருக்காங்க. அதனால ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சள் சேர்க்காமல் பொடியை அரைத்து பயன்படுத்தலாம்.

பியூட்டி க்ரீம் தயாரிக்கத் தேவையான பொருள்கள்

சந்தனப் பொடி – அரை டம்ளர்

கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி

கோரைக்கிழங்கு – 50 கிராம்

மகிழம்பூ பொடி– 50 கிராம்

வெந்தயம் -25 கிராம்

உலர்ந்த பன்னீர் இதழ்– மூன்று டம்ளர்

பாசிப்பயறு – ஒரு டம்ளர்

இதில் வீட்டில் இல்லாத சில பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.

தயாரிக்கும் முறை:

முதலில் மேற்கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தனித்தனியாக நிழலில் நன்றாக உலர்த்தி மிக்ஸியில் அரைத்து பாட்டிலில் வைத்து கொள்ளுங்கள்.

தினமும் குளிக்கும் போது இந்த பொடியுடன் எலுமிச்சை, கற்றாழை, பால், தயிர், தண்ணீர் என்று ஏதாவது ஒன்றை சேர்த்து முகத்துக்கு பயன்படுத்துங்கள். இந்தப் பொடியைப் பயன்படுத்தும்போது சோப்பு மற்றும் க்ரீம் வகைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் நல்ல பலன் தெரியும்.

இந்தப் பொடியை ஃபேஸ் பேக் போன்றும் பயன்படுத்தலாம்.

பனிக்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என எல்லா காலங்களிலும் இதை பயன்படுத்தலாம்.

சின்னச்சின்ன டிப்ஸ்..

  • பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
  • கோதுமை தவிடுடன் பால் இரண்டையும் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து போகும்.
  • தக்காளி சாற்றில் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.
  • தேன் மூன்று டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.
  • முருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளப்பாக மின்னும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 19 March 2024 7:20 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து