/* */

சும்மா..'நச்'ன்னு ஒரு முட்டை கிரேவி..! எப்டீ..இப்டீ..? செய்து பாருங்க..!

Egg Gravy Tamil-முட்டை கிரேவி செய்து இருப்பீங்க. ஆனால், இப்படி ஒரு முட்டை கிரேவி செய்திருக்கீங்களா..? செய்து பாருங்க..!

HIGHLIGHTS

Egg Gravy Tamil-முட்டை கிரேவி என்றால் நீங்கள் ஒரே மாதிரியாகத்தான் செய்து இருப்பீர்கள். இன்று உங்களுக்கு வித்தியாசமான முட்டை கிரேவி வைக்க சொல்லித் தருகிறோம். நீங்க ரெடியா..?


இந்த புதுமையான முட்டை கிரேவி எப்படி செய்றதுன்னு பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள் :

முட்டை – 5, சின்ன வெங்காயம் – 4, பெரிய வெங்காயம் 2, தக்காளி – 2, மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடலை எண்ணெய் – 5 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – அரை ஸ்பூன், கால் தேங்காய் மூடி அளவு அரைத்த தேங்காய் விழுது, கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.


செய்முறை :

முதலில் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி ஒவ்வொரு முட்டையையும் தனித்தனியாக உடைத்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து ஆம்லெட் போடுங்கள். ஆம்லெட் கெட்டியாக இருக்கும்படி வேக வையுங்கள்.இந்த 5 ஆம்லெட்டுகளை இரண்டாகவோ அல்லது நான்காகவோ வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, 5 ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலையுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.


வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவேண்டும். தக்காளியும் வெங்காயமும் சேர்ந்து ஒரு கூழ்ம நிலைக்கு வரும் வரை வதக்குங்கள். பின்னர் அந்த கூழ்மத்தில் மஞ்சள் தூள், உப்பு, மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். மிளகாய்தூள் நன்றாக வதங்கி மிளகாய் வாடை வராமல் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி (அதிக தண்ணீர் வேண்டாம்) ஊற்றி நன்றாக கலக்கவேண்டும்.

இந்த கிரேவி வாசம் வீசத்தொடங்கும்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கலந்து, இப்போதும் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். பின்னர் நன்றாக கொதித்து கிரேவி கொத..கொத வென கொதிக்கும்போது, போட்டு வைத்துள்ள ஆம்லெட் துண்டங்களை எடுத்து கிரேவியில் போட்டு ஆம்லெட் உடையாமல் அடியோடு சேர்த்து கிளறுங்கள்.


பின்னர் இரண்டு நிமிடங்கள் மட்டும் வைத்து கொத்தமல்லி தழையைத் தூவி இறக்கினால் முட்டை கிரேவி ரெடி. சூடாக சோறு போட்டு சாப்பிட்டால்..அட..அட..அடடா.. என்ன ஒரு சுவை.. ! சப்பாத்திக்கும் இந்த கிரேவி சூப்பரா இருக்குங்க.

பக்கத்து வீட்டு பொன்னி அக்கா ஓடி வந்து..'என்னா ஹேமா சமைச்ச..இவ்ளோ வாசம் தூக்குது?' என்று கேட்பாங்க. கேட்டாலும் இந்த கிரேவியப்பத்தி மட்டும் சொல்லிடாதீங்க...



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 March 2024 4:23 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்