/* */

பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா? ... வந்தாச்சு தீபாவளி.... நீங்க ரெடியா.....

Deepavali Story In Tamil-தமிழகத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகையே தீபாவளி. இருளை அகற்றி ஒளி பரவிய நாள் தீபஒளி அதுவே தீபாவளி.

HIGHLIGHTS

Deepavali Story In Tamil
X

Deepavali Story In Tamil


Deepavali Story In Tamil-தீபாவளி -தீபஒளிதான் திரிந்து தீபாவளியானது என்று கூட சொல்லலாம். அதாவது நரகாசுரன் அழிந்த நாளை கொண்டாடும் பண்டிகைதான் தீபாவளி...இருளை அகற்றி ஒளி பரவிய நன்னாள்...தீபாவளி...ஐப்பசியில் வரும் ஆனந்தத் திருநாள். சிவகாசியில் உற்பத்தியாகும் மவுனச்சிறைகளை நம் கைவண்ணத்தால் உடைத்தெறியும் உன்னத நாள். மழலைகள் கூட மகிழ்வுறும் நன்னாள் தான் தீபாவளித்திருநாள்.

இறைவனிடம் வரம் வாங்கி இறைவனையே ஆட்டம் காண்பித்த நரகாசுரனைக் கண்ணபிரான் அழித்த பெருநாள். அரக்கன் இறக்கும் தருவாயில் ''இறைவா , என்னால் மக்கள் பெரும் அல்லலுக்கு ஆளாயினர்.'' உன் காட்சியின் மூலம் யான்பெற்ற இம்மகிழ்ச்சியை வருடந்தோறும் மக்கள் இந்நாளில் கொண்டாடவேண்டும் என கேட்டுக்கொண்டதற்காக அனைவரும் கொண்டாடி வரும் ஆனந்த திருநாள் தான்தீபாவளி திருநாள். தீபாவளி திருநாளில் மக்கள் உள்ளங்கள் கொள்ளும் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டோ?

தித்திக்கும் தீபாவளி

தீபாவளி என்றால் பட்டாசுதான் முதன் முதலாக அனைவருக்கும் நினைவுக்கு வரும். அந்த வகையில் சிறுவர் சிறுமியர்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகை இது. அதிகாலை கங்கா ஸ்நானம் செய்துவிட்டு புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் நண்பர்களோடு, உறவுகளோடு வெடிக்க கிளம்பிவிடுவர் சிறுவர், சிறுமியர்கள். தீபாவளி வந்துவிட்டால் குட்டீஸ்கள் உறக்கத்தினை தொலைத்து பட்டாசு வெடிப்பதில் ஆர்வம் காட்டதுவங்கிவிடுவர்.

முன்பெல்லாம் பட்டாசு வெடிக்க நேர நிர்ணயம் எல்லாம் கிடையாது. ஆனால் காலப்போக்கில் கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிக்க நேர நிர்ணயத்தினை அரசு வெளியி்ட்டு வருகிறது.இது சுற்றுப்புறத்தினை பாதுகாக்கும் வகையில் அறிவித்தாலும் பெரும்பான்மையினர் இதனையெல்லாம் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை என்று கூட சொல்லலாம். வருடத்திற்கு ஒரு நாள் அதிலும் கட்டுப்பாடா? என்ற கேள்விதான் இந்த விஷயத்தில் பொதுமக்களிடையே எழுகிறது என்று கூட சொல்லலாம். அந்த வகையில் ஆயிரம் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் தீபாவளி கொண்டாட்டத்தின் உற்சாகத்தினை யாரும் குறைத்துவிட முடியாது.

தீபாவளி என்பதை''தீப ஆவளி'' எனக்கூறலாம். ஆவளி என்றால் வரிசை. தீபங்களின் வரிசையே தீபாவளி எனப் பொருளுரைப்பர். இறைவன் மக்களுக்கு நேர்ந்த துன்பத்தை அரக்கனை அழித்து நீக்கியதுபோல , அறிவாகிய ஒளியை ஏற்றி வைத்தால் அறியாமையாகிய இருளானது தானாக விலகி ஓடும் என்பது பொருளாகும்.

தீபாவளித் திருநாளில் வீட்டிலுள்ளோர் அனைவரும் எண்ணெய்த் தேய்த்துக்குளித்து புத்தாடை அணிவர். வீடுகளில் பல்வேறு இனிப்பு, கார வகை பண்டங்கள் செய்யப்படும்.அல்லது கடைகளில் வாங்கி சாப்பிடுவர். சிறுவர்கள் மகிழ்ச்சி பொங்கத்துள்ளித்திரிவர். ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வர். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தீபாவளி வாழ்த்தினை வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மூலமாக அனுப்பி வைப்பர்.

சிறுவர்களும் பெரியவர்களும் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். விண்ணிற்கு செல்லும் ராக்கெட்டுகள் வண்ணங்களைக் கொண்டு திகழ்வதால் காண்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக திகழும். எங்கு சென்றாலும் எழும் வேட்டுச்சத்தங்களால் தீபாவளி நாளை எளிதில் அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி நாளில் பல்வேறு பட்டாசுகளைக் கொளுத்துவதால் தீவிபத்து ஏற்படும் என்றாலும் மழை பெய்யும் நாட்களாக இருப்பதால் தீ விபத்துகள் குறைவு. ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருப்பதால் இவ்வாறு பட்டாசுகளைக் கொளுத்தும்போது பல்வேறு பூச்சிகள் வீட்டினுள் வருவது தடுக்கப்படுகிறது. பட்டாசு புகையினால் அவை மடிய நேரிடுகிறது.

ஆஃபர் தீபாவளி

தீபாவளி என்றாலே பல நிறுவனங்களும் தங்களுடைய பொன்னான ஆஃபர் பிசினஸ்ஸை துவக்கி விடுகின்றன. அந்த வகையில் டிவி, பிரிட்ஜ், வாசிங்மெஷின், செல்போன் , உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை அறிவித்து களத்தில் இறங்குகிறது.இது வருடந்தோறும் நடந்து வரும் தொடர் நிகழ்வு ஆகும். அதேபோல் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட், மீசோ, போன்ற நிறுவனங்களும் தீபாவளியையொட்டி பல பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதேபோல் துணிக்கடைகள் அனைத்திலும் ஆஃபர் அறிவிக்கப்படுகிறது.

ஸ்வீட் கடைகளில் ஆஃபர்

வருடந்தோறும் தமிழகத்தின் முன்னணி நகரங்களில்உ ள்ள பெயர் பெற்ற ஸ்வீட் கடைகளில் தீபாவளி விற்பனைக்காக அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்படுவது வாடிக்கையான நிகழ்வு. அந்த வகையில் இந்த வருடமும் இக்கடைகள் ஆஃபர்களை அறிவித்துள்ளன. அதாவது காம்போ பேக், அசார்ட்டட்ஸ்வீட்ஸ், பெங்காலி ஸ்வீட்ஸ், மில்க்ஸ்வீட்ஸ், என வெரைட்டி வெரைட்டியாக தயாரித்து ஆஃபர் விற்பனைகளை அறிவித்துள்ளதால் இதன் வியாபாரமும் ஆர்டர்களும் துாள் பறக்கிறது.

இதுமட்டும் அல்லாமல் ஒவ்வொரு ஸ்வீட்கடைகளும் ஆபீஸ்கள், நிறுவனங்கள், அசோசியேஷன்களில் மார்க்கெட்டிங் செய்து ஒட்டு மொத்த ஆர்டர்களை வாங்கி பேக் செய்து டோர் டெலிவரி செய்து வருவதும் வருடந்தோறும் நடக்க கூடிய தொடர்நிகழ்வாக உள்ளது.

சினிமா ரிலீஸ்

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வரை தீபாவளி என்றாலே முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இரண்டாவது நிலை நடிகர்களின் படங்கள் என கிட்டத்தட்ட 10 க்கும் மேற்பட்ட சினிமாக்கள் ரிலீஸ் ஆகும்.ஆனால் வருடங்கள் ஆக ஆக தீபாவளிக்கு வெளியிடும் படங்களின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்து விட்டது. காரணம் போட்டி அதிகம் ஆகிவிட்டதால் இடையிடையே ரிலீஸ் செய்யப்படுவதால் பண்டிகை தினங்களுக்கு ரிலீஸ் செய்யப்படும் படங்களின் எண்ணிக்கையானது வெகுவாக குறைந்தே விட்டது.

சின்னத்திரை

சின்னத்திரை என்று சொல்லப்படும் டிவிக்களில் ஒவ்வொரு சேனலுமே தீபாவளி என்றவுடன் அன்றைய தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதன் விளம்பரங்களும் துாள் பறந்து வருகிறது.இதோடு பட்டிமன்றங்களும் அன்றைய தினம் நடக்கும் என்பதால் அது சம்பந்தமான விளம்பரங்களும் கடந்த ஒரு வார காலமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மேலும் விஐபிக்களின் பேட்டிகள் அன்றையதினம் சிறப்பு ஒளிபரப்பாகும். எனவே தீபாவளி என்றாலே குஷிதான் போங்க... ஒவ்வொரு சேனலிலும் இதுவரை ஒளிபரப்பாகாத திரைப்படங்களும் ஒளிபரப்பப்படுவதால் தீபாவளி நாளை அனைத்து பொதுமக்களும் எதிர்நோக்கியுள்ளனர் .

பரந்த உலகினில் பிறந்த பல்லோர் உள்ளங்களை மலரச்செய்த இத்தீபாவளி திருநாளை நாம் அனைவரும் ஒற்றுமையுடன் விபத்தின்றி பாதுகாப்புடன் கொண்டாடுவோமாக...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 15 April 2024 6:08 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  4. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  5. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  7. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  8. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  10. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!