/* */

crow habitat and food in tamil-காகம் தூய்மையானவன்..? எப்படி? காகத்தின் உயர்வான பண்புகளை தெரிஞ்சுக்கங்க..!

crow habitat and food in tamil-காலை எழுந்தவுடன் கரைவது மட்டுமே காகத்தின் பணியல்ல. ஊரை சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்.

HIGHLIGHTS

crow habitat and food in tamil-காகம் தூய்மையானவன்..? எப்படி? காகத்தின் உயர்வான பண்புகளை தெரிஞ்சுக்கங்க..!
X

crow habitat and food in tamil-காகம்.(கோப்பு படம்)

crow habitat and food in tamil-காகம் கார்விடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை இனமாகும். காகங்களில் 40 வகைகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காகம் எல்லா தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி எல்லா நிலப்பகுதிகளிலும் வாழக்கூடிய தகவமைப்பு பெற்றது. ஒரு காகத்திற்கு தினமும் சராசரியாக 280 கிராம் உணவு தேவை. காகங்கள் புத்திக்கூர்மை உடையவை. காகத்தின் அளவில் உள்ள உயிரினங்களோடு காகத்தை ஒப்பிடும்போது இதன் மூளையே பெரியது.


காகத்தின் சிறப்புகள்

அதிகாலையில் எழுந்து கரைதல்

காகம் அதிகாலையில் எழுந்துவிடும் குணம் உடையது. அதிகாலை துயில் எழுதல் மனிதர்களுக்கும் உடல் ஆரோக்யம். அதேபோல காகம் அதிகாலையில் எழுந்து பொழுது விடிந்துவிட்டதை ஊருக்கு உரைக்கும் பணியை சம்பளம் வாங்காமல் செய்து வருகிறது.

crow habitat and food in tamil

பகிர்ந்துண்ணல்

பகிர்ந்துண்டு வாழ்வோம் என்று நாம் தத்துவம் படைத்துள்ளோமே தவிர மனிதர்களுக்கு சுயநலம் அதிகம். ஆனால், காகங்கள் அப்படியல்ல. உணவு கிடைத்தால் தன் கூட்டத்தை கரைந்து அழைக்கும். தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணுதல் காகத்திற்கான சிறப்பு.


எப்போதும் விழிப்பு நிலை (எச்சரிக்கை)

காகம் எல்லா நேரங்களிலும் உஷாராகவே இருக்கும் பறவை. உணவு உண்ணும்போது கூட சுற்றும் முற்றும் பார்த்து உண்பதே அதற்கான வழக்கம். லேசாக நாம் கையை அசைத்தால் கூட உடனே பறந்துவிடும். அந்த அளவுக்கு விழிப்பு நிலையில்( alert) இருக்கும்.

மறைந்து ஜோடி சேரும் உன்னதம்

பல பறவைகள், விலங்குகள் ஜோடி சேர்வதை பார்த்திருப்போம். ஆனால், காகம் ஜோடி சேர்வதை பார்த்து இருக்கிறீர்களா? முடியாது. தற்போது துல்லியமாக படம் எடுக்கும் கேமராக்கள் இருப்பதால் மறைத்து வைத்து காகம் உறவுகொள்வதை எடுத்தால் மட்டுமே காணமுடியும். பிறர் காணாமல் உறவு சேர்வது காகத்தின் மற்றொரு சிறப்பு.

crow habitat and food in tamil


தூய்மையானவன்

காகம் சுத்தமில்லாத உணவுகளை குறிப்பாக இறந்த எலி, பாம்பு என பல வகையான மாமிச உணவினை உட்கொள்ளும். இப்படி இறந்த மாமிசங்களை சாப்பிட்டு ஊரை சுத்தமாக்குகிறது. ஆனால், மாலை அதன் இருப்பிடத்திற்குச் செல்லும் முன்னர் நன்றாக குளித்துவிட்டுத்தான் செல்லும். நினைத்துப்பாருங்கள், சுய சுகாதாரம் பேணுவதில் மனிதருக்கு இணையாக காகம் இருக்கிறது. எவ்வளவு உயர்ந்த பண்பு பாருங்கள்.

துக்கம் அனுசரிப்பு

காக்கை இனத்தில் ஒரு காகம் இறந்துவிட்டால், அதன் கூட்டம் ஒன்றுகூடி ஒப்பாரி வைப்பதுபோல இறந்த காகத்தை சுற்றி நின்று கரையும். இந்த வழக்கம் அதன் சமூக வாழ்க்கையை பறைசாற்றும் உன்னத பண்பாகும்.

காகத்திற்கு தினமும் உணவு வைப்பது நல்லது

காகங்கள் கூட்டமாக சமூகத்துடன் இணைந்து வாழும் இயல்புடையவை. மனிதர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி அனுசரித்து வாழும் பண்பு கொண்டவை. மனிதர்களை நன்றாக புரிந்துகொள்ளும் தன்மை உடையது. சில காகம் மனிதர்களோடு நெருங்கிப் பழகும். காகத்திற்கு மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளது.

crow habitat and food in tamil


பேசிக்கொள்ளும் தனி மொழி

காகங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்கு சில கா கா மொழியை வைத்துள்ளன. அந்த பிரத்யேக மொழி அவர்களுக்கிடையே உரையாடிக்கொள்வதற்கான மொழியாகும். அவைகள் ஓசையைப்பொறுத்து அதன் பொருள் மாறுபடும். குறைந்த ஓசை, நீண்ட ஓசை, அடுத்தடுத்த குறுகிய ஓசை என பல ஓசைகளை எழுப்புவதன் மூலம் அதன் உணர்வுகளை பரிமாறிக்கொள்கின்றன. கா..கா…வெனக் காகங்கள் எழுப்பும் சத்தத்தில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு என்கிறார்கள் பறவை ஆராய்ச்சியாளர்கள்.

ராமர் பரம்பரை

அட ஆமாங்க..காகம் இறுதி வரை ஒரே துணையுடன் மட்டுமே வாழும் மாண்புடையது. துணை இறந்துவிட்டால் கூட மீண்டும் வேறு துணை சேராது. மனிதர்கள் மட்டுமே குழந்தைகளை காரணம் கூறி துணையை தேடிக்கொள்கிறார்கள். காகம் அப்படியல்ல..'நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாறேன்' என்று இறக்கும் வரை தனியாகவே வாழும்.

crow habitat and food in tamil

வேறு சில பண்புகள்

பெண் காகம் ஒரே நேரத்தில் 4ல் இருந்து 7 முட்டைகள் வரை இடும். ஆண் காகமும் பெண் காகமும் முட்டைகளை முறைவைத்து அடைகாக்கும்.

மனிதர்களின் முகம் மற்றும் முகபாவத்தை வைத்தே அவர்கள் கோபமாக உள்ளார்களா அல்லது இணக்கமாக உள்ளார்களா என்பதை எடைபோடும் திறன் காகங்களுக்கு உண்டு.


மரங்களில் கூடுகட்டி வாழும் காகங்கள் பொதுவாக 20 ஆண்டுகள் வரை வாழும்.

காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், பூச்சிகள் ஆகியவற்றை உண்ணும். பாம்பு, எலி, தவளை உட்பட இறந்த எல்லாப் பிராணிகளையும் உண்ணும். அதனால்தான் காகம் இருக்கும் ஊர் தூய்மையாக இருக்கும் என்பார்கள்.

பச்சைக்கிளி, புறா, சிட்டுக்குருவி போன்ற பல பறவை இனங்கள் மனித நடவடிக்கைகளால் அழிந்து வருகின்றன. ஆனால், காகம் மட்டும் தன்னுடைய இனம் வளர இருக்கும் சூழ்நிலையை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் தன்மை உடையது.

crow habitat and food in tamil

காகம் சனிபகவானின் வாகனம். காக்கையை வழிபாடு செய்வதால் சனி பகவான் எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

Updated On: 31 Jan 2023 11:04 AM GMT

Related News