/* */

'சென்னா'ன்னு சொன்னா..அது சென்னா மசாலாதான்..! எப்படி செய்யலாம்..?

Channa Masala Gravy -சென்னா மசாலான்னா என்னங்க..? அதை எப்படி செய்றது? தெரிஞ்சிக்குவோம் வாங்க.

HIGHLIGHTS

சென்னான்னு சொன்னா..அது சென்னா மசாலாதான்..! எப்படி செய்யலாம்..?
X

channa masala gravy-சென்னா மசாலா (கோப்பு படம்)

Channa Masala Gravy -சப்பாத்தி, பூரின்னு சொன்னாலே குருமா தான் சைட் டிஷ் என்பது எழுதப்படாத விதி. கொஞ்சம் மாற்றி சாப்பிட்டா என்ன ஆகிவிடப்போகிறது என்று யோசியுங்கள். வேறுமாதிரியா ஒரு சைட் டிஷ் சாப்பிடுவோம்.

அப்படி ஒரு வித்தியாசமான சைட் டிஷ் தான் சென்னா மசாலா. சென்னா ரெட்டி என்றால்.. சாரிங்க..சென்னா என்றால் நீங்கள் ரொம்ப யோசிக்க வேணாம். அது வேற ஒன்னும் இல்லீங்க. நம்ம ஊரு கொண்டைக் கடலைதான். ரொம்ப ஈஸியா குக்கர்ல வைச்சி செய்திடலாம்.


தேவையான பொருட்கள்:

வெள்ளைக்க கொண்டைக்கடலை – 100 கிராம், பெரிய வெங்காயம் – 2(பொடியாக நறுக்கியது), தக்காளி – 2(பொடியாக நறுக்கியது), கருவேப்பிலை – சிறிதளவு, வறுத்து அரைப்பதற்கு : தனியா – அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், சோம்பு – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 4, கிராம்பு – 2, ஏலக்காய் – 1, பட்டை – சிறிய துண்டு , தேங்காய் துண்டுகள் – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு, கடலை எண்ணெய் 3 டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துவிட வேண்டும். பின்னர் சென்னா மசாலாவுக்குத் தேவையான சில காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் வெறும் வாணலியை வைத்து அதில் வரமிளகாயை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், தனியா ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து சூடு பறக்க லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

channa masala gravy

வறுத்து எடுத்த பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். வறுத்த பொருட்கள் பௌடரானவுடன், துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள ஒரு கப் தேங்காயை சேர்த்து நைசாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் தேவையான அளவிற்கு கடலை எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.எண்ணெய் நன்கு காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்குங்கள்.

வெங்காயம் கண்ணாடி போல வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் கருவேப்பிலையை பிரஷ்ஷாக உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி அனைத்தும் நன்கு மசிய வதங்க வேண்டும். பின்னர் ஊற வைத்து நன்றாக கழுவி வைத்துள்ள வெள்ளைக் கொண்டைக் கடலையை சேர்த்து ஒரு முறை நன்கு வதங்க விடுங்கள். தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.


பின்னர் மிக்சி ஜாரில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தண்ணீர் எதுவும் கூடுதலாக ஊற்றாமல் மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரை மட்டும் சேர்த்துக் கூட்டி வையுங்கள். பின்னர் குக்கரை மூடி இரண்டு விசில் அல்லது மூன்று விசில் விட்டு எடுத்துவிடுங்கள். இதோ சூப்பரா கிரேவி பதத்தில் சுவையான சென்னா மசாலா ரெடியாகிடிச்சி.

இந்த சென்னா மசாலா ஒரு மல்டி பர்பஸ் கிரேவிங்க. அட ஆமாங்க.. இதை சப்பாத்தி, பூரி மட்டுமல்லாமல் சூடா சாதம் போட்டு ஒரு பிடி பிடிக்கலாம். இட்லிக்கும் , தோசைக்கும் தொட்டுக்கலாம். சுவையோ..சுவை ..! அப்புறம் என்ன உடனே இன்னிக்கே, இப்பவே..நீங்களும் இதை ட்ரை பண்ணி அசத்துங்க.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 April 2024 5:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  2. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  3. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  4. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  6. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  7. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  8. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  9. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்