/* */

கடலை பருப்பு சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும்? வாங்க பார்க்கலாம்..!

Chana Dal Meaning in Tamil Images-கடலை பருப்பு பல மருத்துவ நன்மைகளைத் தருகிறது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

HIGHLIGHTS

கடலை பருப்பு சாப்பிட்டா என்ன நன்மைகள் கிடைக்கும்? வாங்க பார்க்கலாம்..!
X

chana dal meaning in tamil-கடலை பருப்பு (கோப்பு படம்)

Chana Dal Meaning in Tamil Images-பருப்பு வகைகளில் எண்ணற்ற சத்துகள் அடங்கி உள்ளன. இவற்றை உட்கொள்வதால் பல நன்மைகள் மற்றும் உடல் ஆரோக்யம் பெறுகிறது. நமது வீடுகளில் தினமும் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகளில் ஒன்றுதான் கடலைப்பருப்பு. கடலைப் பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் வாங்க.

கொடைக்கடலையின் தோலை நீக்கி உடைத்துக் கிடைப்பதுதான் கடலைப்பருப்பு.

கடலை பருப்பு தரும் நன்மைகள்

சரும பாதுகாப்பு

கடலை பருப்பு அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் எளிதில் ஏற்படாது. சாதாரணமாகவே நமது பாரம்பரியத்தில் கடலை மாவு தடவி குளிப்பது உண்டு. முகம் பளப்பாகவும் சருமம் மிருதுவாகவும் இருக்கும்.

உடல் வளர்ச்சி

உடல் தசை வலுப் பெறவும் தசை வளர்ச்சிக்கும் புரதச்சத்து அத்தியாவசியமாகும். கடலை பருப்பில் ஆரோக்யமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமாக உள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே, குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் கடலை பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

உடலை நோய் தாக்காமல் இருக்க நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அவசியமாகும். கடலை பருப்பில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர தாதுச் சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

இதய ஆரோக்யம்

இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேகரமாவதைத் தடுக்கிறது. ஆதலால், கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதன் மூலமாக இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கச் செய்கிறது.

Chana Dal Meaning in Tamil Images

செரிமானம்

நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். கடலை பருப்பில் எளிதில் செரிமானமாகும் புரதச் சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சுரப்பைத் தூண்டி சாப்பிடும் உணவு எளிதில் செரிக்கச் செய்கிறது. வயிற்றில் புண்கள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடை கூட

உலகில் பல நாடுகளில் சரியான ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்காமலும், முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்றாததாலும் பலர் தங்களின் வயதுக்கு ஏற்ற சராசரி எடை இல்லாமல் இருப்பார்கள். கடலை பருப்புக் கொண்டு தயார் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடல் எடை விரைவாகக் கூடும்.

எலும்புகள் வலிமையாகும்

கால்சியம், மக்னீசியம் ஆகிய இரண்டு தாதுக்களும் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் அவசியமானதாகும். எலும்புகளின் ஆரோக்யத்திற்கு இவையிரண்டும் அடிப்படையான ஒன்றாகும். கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் கடலை பருப்பில் செறிந்து உள்ளதால், இதை சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலிமை பெறும்.

Chana Dal Meaning in Tamil Images

அடர்ந்த தலைமுடி

ஒருவரின் தோற்றத்தை அழகாக காட்டுவதில் தலை முடி முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு கூந்தல் வளர்ச்சி பேரழகாக்கும்.முடி தலையை அதிக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காக்கும் கவசமாகவும் இருக்கிறது. தலைமுடி உதிராமல் இருப்பதற்கு நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம் ஆகும். கடலை பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் புரதச்சத்து அதிகம் இருக்கும். அதனால் தலைமுடி உதிராமல் பாதுகாக்கப்படும்.

கடலை பருப்பு உருண்டை குழம்பு

நரம்பு பாதுகாப்பு

கடலை பருப்பில் மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுச் சத்துகள் அதிகமாக உள்ளது. மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை நரம்பு செல்களுக்குள் கால்சியம் நுழைவதைத் தடுப்பதுடன், இரத்த நாளங்கள் மற்றும் தசைகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்துகிறது. இதனால், நரம்பு தளர்ச்சி மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக எளிதாக உடல் பலத்தையும், இரத்தத்தில் அவசியமான சத்துகளையும் இழந்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு கடலை பருப்பு கலந்து தயார் செய்யப்பட்ட உணவுகள் ஒரு சிறந்த உணவாக விளங்குகிறது. நீரிழிவு நோயாளிகள் கடலை பருப்பு கலந்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொண்டுவந்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலம் ஏற்படும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 5:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  2. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  3. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  4. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  5. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  8. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு