/* */

chamomile in tamil-என்றும் இளமையை அள்ளித்தரும் சீமை சாமந்தி டீ..! பெண்களே குடிச்சி பாருங்க..!

chamomile in tamil-சீமை சாமந்திப்பூவில் இவ்ளோ நன்மைகள் இருக்கும் என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. இப்போ தெரிஞ்சுக்கங்க.சாமந்தி டீ குடிச்சி இருக்கீங்களா..?

HIGHLIGHTS

chamomile in tamil-என்றும் இளமையை அள்ளித்தரும் சீமை சாமந்தி டீ..! பெண்களே குடிச்சி பாருங்க..!
X

chamomile in tamil-சீமை சாமந்தி தேநீர்.(கோப்பு படம்)

chamomile in tamil-கெமோமில் என்பது ஒண்ணுமில்லீங்க. அது நம்ம ஊரு சீமை சாமந்தி பூ இருக்கு இல்லிங்களா..அதுதான். நம்ம எல்லோருக்குமே எப்போதும் இளமையாகவே இருக்க ஆசைதான். ஆனால், அது தொடர முடியுமா என்ன..? ஒவ்வொரு ஆண்டும் போகப்போக வயதும் ஏறிக்கொண்டே இருக்கும்.


அப்படி இளமையாக இருப்பதற்கு பலர் பல மருந்துகளை பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் சில மூலிகை மருந்நதுகளை பயன்படுத்துவார்கள். எவ்வளவுதான் மருந்துகள் வந்தாலும் இயற்கை மூலிகைகள் அளவிற்கு வராது. நமது உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், காலநிலை மாற்றங்கள், உணவுப் பழக்க வழக்கங்களால் ஏற்பட்டுள்ள மனிதனின் பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் என அனைத்துமே நீண்ட நாள் மனிதன் இளமையாக வாழ்வதற்கு தடையாக இருக்கின்றன.

அந்த வகையில் நீண்ட நாள் இளமையாக இருக்க கெமோமில் எனப்படும் சீமை சாமந்தி டீ (Chamomile tea) குடித்தாலே போதும், என்றும் இளமையாக இருக்கலாம். அட.. வாங்க நீங்களும் குடிச்சிப்பாருங்க. மேலும் இதில் ஏராளமான நன்மைகளும் உள்ளன. என்னென்ன நன்மைகள் உள்ளன என்று பார்ப்போம் வாங்க..

chamomile in tamil


என்றும் இளமை

சீமை சாமந்தியில் ஏராளமாக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளன. இது உங்களின் சருமத்தை எப்போதுமே பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. சருமம் பாதிப்படைவதை தடுத்து திசுக்களை மென்மையாக வைக்கிறது. மேலும் செல்களை மீளுருவாக்கம் செய்து, கெட்டியான தசைகளை உருவாக்குகிறது. இதில் உள்ள மூல பொருட்கள் முகத்தின் துளைகளை மூடச் செய்து சுருக்கங்களை போக்குகிறது. இதனால் வயதாகும் தோற்றம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு இளமையான தோற்றம் கிடைக்கிறது.

மன அழுத்தம்

தற்போது பலருக்கு அதிகம் ஏற்படக் கூடிய பிரச்னைகளுள் ஒன்று,மன அழுத்தம். மன அழுத்தம் நீடித்து இருந்தால் பாதி இளமை போய்விடுகிறது. சீமை சாமந்தி டீயை குடித்தால் உங்களின் நாள்பட்ட தலைவலி, மன பாரம், மன அழுத்தம் எளிதில் குறைந்து விடும். தூக்கமின்மையால் அவதிப்படுவோர், இந்த டீயை குடித்தால் நல்ல தூக்கம் வரும். மேலும் பயம், தயக்கம் போன்றவையும் இல்லாமல் ஓடிவிடும்.


எதிர்ப்பு சக்தி

சீமை சாமந்தி வெள்ளை ரத்த அணுக்களை சுறுசுறுப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை சீராக வைக்க உதவுகிறது. இந்த சீமை சாமந்தி டீயை பருகினால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்றுகளால் பாதிக்கப்படாமல் இருக்க முடியும். அத்துடன் நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டி உடலில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். எனவே,சீமை சாமந்தி டீயை குடித்து வந்தால் அதிக பலம் பெற்றவர்களாக இருப்பீர்கள் என்பதில் மாற்றமில்லை.

chamomile in tamil


மாதவிடாய் வலி

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியால் பெரிதும் அவதிப்படுவார்கள். இந்த வலியைக் குறைக்கவும், எரிச்சல் இல்லாமல் இருக்கவும் இந்த சீமை சாமந்தி டீ உதவுகிறது. இது கர்ப்பப்பையை உறுதிப்படுத்தி சீரான ரத்த போக்கை ஏற்படுத்துகிறது. சீமை சாமந்தி டீ கர்ப்பப்பையில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவற்றையும் குறைக்கும். உதிரப் போக்கு அதிகமாக உள்ள காலங்களில் இந்த டீயை அருந்தினால் ரத்த போக்கை சீராக்கும்.

புஷ்டியான சருமம்

தக்காளி பழம்போல போல நல்ல மொழு மொழுப்பாக இருக்க ஆசையா? அதற்கு சீமை சாமந்தி டீ போதும். முகத்தை பளபளப்பாக மாற்றவும், அதிக பொலிவூட்டவும் இது பெரிதும் பயன்படுகிறது. இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்களை உற்பத்தி செய்கிறது. மேலும் இதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் முகத்தின் ஆரோக்யத்தை அதிகரிக்கிறது. பொலிவுமிகு சருமத்தை தந்து, தோலை கெட்டியாக்கி வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

தூக்கமின்மை

இரவில் தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள் சாமந்தி டீயை குடிங்க. உங்களுக்கு படுத்ததும் தூக்கம் வந்துவிடும். ஏனெனில் சீமை சாமந்தியில் உள்ள apigenin என்ற மூலப் பொருள் மூளை நரம்புகளை மழுங்கச் செய்து தூக்கத்தை இயல்பாக வரவழைக்கிறது. மேலும் அதிக மன அழுத்தத்தில் உள்ளவர்கள் இந்த டீயை குடித்தால் நிம்மதியாக தூங்குவார்கள். இப்படி நன்றாக தூங்கினால் மன அழுத்தம் பெரிதும் குறையும்.


கருவளையங்கள்

முகத்தில் இருக்கும் கருவளையங்களைப் போக்க சீமை சாமந்திப் பூவை வெதுவெதுப்பான நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிக்கொள்ளவேண்டும். பின்னர் பூவை குளிர வைக்கவேண்டும். குளிரவைத்த பூவை கருவளையங்கள் உள்ள பகுதியில் மசாஜ் செய்வது போல மென்மையாக தேய்க்கவேண்டும். இது உங்கள் கண் பகுதியில் உள்ள கருவளையங்களை நீக்கி, கண் வீக்கத்தையும் குணப்படுத்தும். இதன்மூலம் நீங்கள் அழகான கண்களை பெறுவீர்கள்.

chamomile in tamil


பொடுகுத் தொல்லை போக

தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சீமை சாமந்தி ஒரு நல்ல மருந்தாகும். தலையில் அதிக பொடுகை நீக்குவதற்கு சாமந்தி டீ நஅருமையான மருந்தாக செயல்படுகிறது. இதில் உள்ள Apigenin என்ற நிறமி முடி மறைக்காமல் காக்கிறது.மேலும் இயற்கையாகவே இது முடி உடைவதை தடுக்கிறது. மேலும் கூந்தலை பொலிவாக இருக்கச் செய்கிறது. முடியின் அடிவேரை பலப்படுத்த சாமந்தி டீ நல்ல தீர்வாகும்.

சளித் தொல்லை நீங்க

மழை காலங்களில் பொதுவாக எல்லோருக்கும் சளி தொல்லை வருவது இயல்பு. சளி தொல்லை இருப்பவர்கள் சீமை சாமந்தி டீயை குடித்தால் விரைவில் மூக்கு துவாரங்களில் அடைத்துள்ள சளி நீக்கப்பட்டு,சளி அடைப்பு குணமடையும். மேலும் வறட்டு இருமல் இருப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும்.


சீமை சாமந்தி டீ தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நீரை சூடு படுத்திக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் இயற்கையான இனிப்பூட்டியை சேர்த்துக் கொள்ள விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு அல்லது தேன் போன்ற ஏதாவது ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் நீங்கள் கொஞ்சம் ஆப்பிளைக் கூட கொதிக்கும் நீரில் சேர்த்துக் கொள்ளலாம்

இப்பொது சீமை சாமந்தி பூக்களை அந்த கொதிக்கும் நேரில் சேர்த்துக்கொள்ளுங்கள். பாத்திரத்தை மூடி வையுங்கள். 2 முதல் 10 நிமிடங்கள் வரை அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். இப்போது பூக்கள் கொதிக்கும் நீரில் நன்றாக வெந்து நல்ல நறுமணம் வீசுவதை உணர்வீர்கள். மேலும் அது நல்ல நிறத்தையும் பெற்றிருப்பதை காண்பீர்கள். இப்போது டீ ரெடி. எடுத்து சுவையுடன் சூடாக குடியுங்கள்.

Updated On: 1 Feb 2023 10:05 AM GMT

Related News