/* */

புதிய பாரத் (BH) நம்பர் பிளேட்.. யாரெல்லாம் வைக்கலாம்?

புதிய பாரத் (BH) நம்பர் பிளேட். யாரெல்லாம் வைக்கலாம்? எப்படி பெறுவது.? என்பதை தெரிந்துகொள்வோம்.

HIGHLIGHTS

புதிய பாரத் (BH) நம்பர் பிளேட்.. யாரெல்லாம் வைக்கலாம்?
X

நம்முடைய TN என்று பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலங்களில் 12 மாதங்கள் மட்டுமே ஓட்டமுடியும். அதன் பிறகு நாம் அங்கு இருந்தால் அந்த மாநில பதிவு எண்ணுக்கு வாகனத்தை மாற்றவேண்டும்.

தற்போது இந்த BH காணப்படும் பாரத் சீரிஸ் காரை வைத்திருந்தால் நாம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இந்தியா முழுக்க எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். இதற்காக நாம் அந்த மாநில நம்பர் பிளேட் போடத் தேவையில்லை. இதனால் தேவையில்லாமல் நேரமும் பணமும் மிச்சமாகும். ஆனால் இந்த பாரத் சீரிஸ் நம்பர் பிளேட் எல்லோரும் வாங்க முடியாது.

யாரெல்லாம் BH சீரிஸ் பெறமுடியும்?

இந்த BH சீரிஸ் நெம்பர் பிளேட் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பெறமுடியும்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் இந்த BH நம்பர் பிளேட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் இந்தியாவில் குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது இருக்கவேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

Step 1: வாகன் போர்ட்டலில் உள்நுழையவும் அல்லது ஆட்டோமொபைல் டீலரிடம் உதவி பெறவும். Log in to the Vahan portal or seek help from an automobile dealer.

Step 2: டீலர் உதவியைத் தேர்வுசெய்தால், உங்கள் சார்பாக வாகன் போர்ட்டலில் டீலர் படிவம் 20ஐ நிரப்புவார். If opting for dealer assistance, the dealer will complete Form 20 on the Vahan portal on your behalf.

படிவம் பதிவிறக்கம்: Form download : https://parivahan.gov.in/parivahan//en/content/all-forms

Step 3: நான்குக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களில் அலுவலகங்களைக் கொண்ட தனியார் துறை ஊழியர்களுக்கு, வேலைவாய்ப்பு ஐடி மற்றும் பணிச் சான்றிதழுடன் படிவம் 60ஐச் சமர்ப்பிப்பது கட்டாயம். For private sector employees with offices in more than four states or UTs, submission of Form 60 along with employment ID and work certificate is mandatory.

Step 4: வாகன உரிமையாளரின் தகுதியை மாநில அதிகாரிகள் சரிபார்க்கும். The State Authorities will verify the eligibility of the vehicle owner.

Step 5: விண்ணப்ப செயல்முறையின் போது, தொடர் வகை "BH" ஐத் தேர்ந்தெடுக்கவும். During the application process, select the series type "BH.”

Step 6: பணிச் சான்றிதழ் (படிவம் 60) அல்லது அதிகாரப்பூர்வ அடையாள அட்டையின் நகல் போன்ற தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும். Submit the necessary documents, such as the Working Certificate (Form 60) or a copy of the official ID card.

Step 7: BH தொடரை பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) அங்கீகரிக்கும். The Regional Transport Office (RTO) will approve the BH series.

Step 8: தேவையான கட்டணம் அல்லது மோட்டார் வாகன வரியை ஆன்லைனில் செலுத்தவும். Make the required fee or motor vehicle tax payment online.

இந்த படிகள் முடிந்ததும், வாகன் போர்டல் BH தொடர் பதிவு எண்களை சீரற்ற வரிசையில் உருவாக்கும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செல்லுபடியாகும். Upon completion of these steps, the Vahan portal will generate BH series registration numbers in random order, which will be valid across all states of India

வரி விவரம்:


இந்த வகை நம்பர் பிளேட் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து வரி செலுத்தவேண்டும். அல்லது 4, 6, 8, ..அதிகபட்சமாக 14 ஆண்டுகள் வரை வரிசெலுத்தலாம். மாநிலங்களுக்கு ஏற்றவாறு வரிகள் மாறும்.

BH நம்பர் பிளேட் உடைய வாகனங்களுக்கு வருடம் ஒரு முறை பணம் செலுத்தவேண்டும். 10 லட்சம் ரூபாய் கிழே உள்ள வாகனங்கள் 8% வரியை செலுத்தவேண்டும்.

10 முதல் 20 லட்சம் வரை உள்ள வாகனங்கள் 10% வரியையும். 20 லட்சத்திற்கும் மேலான விலையில் உள்ள வாகனங்கள் 12% வரியையும் செலுத்தவேண்டும்.

Updated On: 14 Oct 2023 6:16 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  2. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  3. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  6. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  7. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  8. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  9. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!