/* */

Best Love Quotes In Tamil-நான்குவிழிகள் எழுதும் கவிதை, காதல்..!

காதல் கூட ஒரு குழந்தைதான். அடம் பிடிக்கும். அடாவடி பண்ணும். ஓவென அழும். ஓங்காரமாகச் சிரிக்கும். அடங்கி பவ்யமாக கைகட்டி நிற்கும். அதுதான் காதல்.

HIGHLIGHTS

Best Love Quotes In Tamil-நான்குவிழிகள் எழுதும் கவிதை, காதல்..!
X

Best love quotes in tamil-சிறந்த காதல் மேற்கோள்கள் (கோப்பு படம்)

Best Love Quotes In Tamil

காதல் கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைப் போன்றது. ஈர்ப்பு மட்டும் இருக்கும். எப்படி இணைப்பைக் கொடுக்கும் என்பது தெரியாது. இருந்தால் மகிழும். இல்லை என்றால் அழும். அது ஒரு பிடிவாதம் பிடித்த குழந்தை. அடித்தால்அழும். கொஞ்சினால் மிஞ்சும். பிடிவாதமாய் தோளில் தொங்கும். விழிகளை உருட்டி மிரட்டும். பார்வையாலே ஆயிரம் மொழிகளை பேசும்.

Best Love Quotes In Tamil


வேறொன்றும் தேவை இல்லை என்ற எண்ணத்தை விதைக்கும். நீ இருந்தால் போதுமடி அல்லது போதுமடா என்று சொல்லிச்சொல்லி மனமாடும். சிட்டுக்குருவியைப் போல மனம் பறக்கும். என்ன பேசுகிறோம் என்பது அறியாது. யார் அருகில் இருக்கிறார்கள் என்பதை அறியாது. சூழலை கவனிக்கும் திறனை காதல் இழந்திருக்கும்.

உறங்க மறந்திருக்கும், உண்பதை மறந்திருக்கும். பொய்கள் பல பேசவும் கற்றிருக்கும். உண்ணா நோன்பிருந்தாலும் உன்னோடு நான் இருந்தால் கண்ணாற காண்பதே உணவு என்று பச்சைப் பிள்ளையாக பொருளற்ற வார்த்தைகள் பேசி கொஞ்சிச் சிரிக்கவைக்கும்.


Best Love Quotes In Tamil

காதல் என்றால் உங்களுக்கு மட்டும் தெரியாதா? என்ன? இதோ உங்களுக்காக பிழிந்தெடுத்த காதல் ரசம். குடித்து மகிழுங்கள்.

சிறுசிறு சண்டைகள் காதலின் அம்சம். விழிகள் நான்கும் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும்.

தோற்றுத்தான் போகின்றது, என் பிடிவாதம் உன் அன்பின் முன். தோல்வியில் நான் மகிழ்கிறேன்.

நீ என்னருகில் இருந்தால் அமாவாசை இருள் கூட எனக்கு பௌர்ணமியே.

கவிதை எழுத காதல் தேவையில்லை, பெண்களின் அழகை ரசிக்கத் தெரிந்தாலே போதும்.

ஆண்டுக்கு ஆண்டு பூக்கள் புதிதாக வாங்கலாம். ஆனால் காதலர் தினத்தில் கொடுக்கும் கைகளும் வாங்கும் கைகளும் மாறக்கூடாது. உண்மைக்காதலின் இலக்கணம் அதுவே.


Best Love Quotes In Tamil

உன் அன்பெனும் தீரா எண்ணெய் வற்றாதவரை நானுமோர் அணையா சுடர் விளக்கே..!

உன்னை பிடித்துவிட்டதால் இனி உனக்கு பிடிக்காதது எதுவும் எனக்கும் பிடிக்காது.

இதயமும் ஒரு ரகசிய சுரங்கம். அன்பு, காதல், ஏக்கம், பிரிவு, கவலை, பதற்றம், பிடிவாதம், ஊடல், சண்டை என எல்லாமும் நிறைந்திருக்கும் ஒரு உயிர் சுரங்கம்.

சின்னச்சின்ன ஊடல்கள் உன்னை பிரிவதற்கல்ல நம் காதலை வளர்ப்பதற்கு. எப்போது ஊடல் பிறக்கும் என்று எதிரோபார்த்து காத்திருக்கிறேன்.


Best Love Quotes In Tamil

நீ உடனில்லாத போது உன் நினைவுகளுடன் பயணிக்கின்றேன். அதுகூட இனிமையாகத்தான் இருக்கிறது. அது ஒரு ஏகாந்தப் பயணம்.

விடுவிக்க முயன்றும் தோற்றுப்போகிறேன். உன் பார்வைப் பிடியிலிருந்து. விலக்கிக்கொள்ள முடியவில்லை, அப்படி ஒரு காந்தமா..?

உன் நினைவுகளோடு பேசிப்பேசி ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன். என் வாய் திறப்பதில்லை உணவைக்கூட மறந்துவிட்டது.

சோகங்கள் இதயத்தை துளைக்கும்போதெல்லாம் புல்லாங்குழலும் கண்ணீர் வடிக்கின்றது. நினைவுகள் சோக கீதங்களை மட்டுமே இசைக்கின்றன.


Best Love Quotes In Tamil

இவள் மறைய அவன் வர, அவன்மறைய இவள் வரவென்று வானிலும் ஓர் கண்ணாமூச்சி.

நடுநடுங்கும் குளிரில் அணைத்துக்கொண்டே உளறாமல் பேசு என்றான். எப்படிப்பேசுவேன் என்பதை அறியாது பேசுகிறான்.

எனக்காக நீ விட்ட ஒரு சொட்டுக் கண்ணீர் உனக்காகவே வாழவேண்டுமென்று இதயத்தில் உறைந்துவிட்டது.

நாணத்திற்கு விடுதலை கொடுத்தேன். வளையல்களும் தலைக் கவிழ்ந்துக்கொண்டன. என்னவன் எனக்கும் சஞ்சாரமானான்..!


Best Love Quotes In Tamil

கரைசேர துடுப்பிருந்தும் கரையேறும் எண்ணமில்லை. நிலவொளியில் உன் நினைவுகள் நிறைந்திருப்பதால்

நீ மௌனமாகும் போதெல்லாம் என் கவிதைகளும் கண்ணீர் வடிக்கின்றன. எப்போது பேசுவாய் என்று ஏங்கித் துடிக்கின்றன.

விழிகளுக்குள் நீயிருக்கும் வரை என் கனவுகளும் தொடரும்.

படிக்காமலேயே மனப் பாடமாகிப்போனது உன் நினைவுகள் சிறை வாழ்க்கையும் பிடிக்கும் அது உன் இதயமென்றால்


Best Love Quotes In Tamil

கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரையிலாம். உன் விழிக்கவிதையின் அர்த்தம் புரிந்தபின்னே நான் சுவைக்கவே ஆரம்பித்தேன்

ஒரு நொடி வந்து போனாலும் மனதை ரணமாக்கியே செல்கிறது சில நினைவுகள்.

என்னருகில் நீயிருந்தால் தினமும் பௌர்ணமியே. நினைவென்றாலே அது நீயானாய்.

கெஞ்சலும் கொஞ்சலும் காதலின் அழகு


Best Love Quotes In Tamil

தொலைவேன் என்று தெரியும். ஆனால் உனக்குள் இப்படி மொத்தமாய் தொலைந்து போவேன் என்று நினைக்கவில்லை

வார்த்தைகள் ஊமையாக உன்வசமானேன்

காதல் மழையில் குடை நனைய குடைக்குள் காதலில் நாம் நனைகிறோம். குடைக்குள் காதலோ..!!

நிலைக் கண்ணாடி என் முகத்தைக் காட்டினாலும் மனக் கண்ணாடியில் உன் முகம் மட்டுமே தெரிகிறது. அதையும் நான் ரசிக்கின்றேன்


Best Love Quotes In Tamil

கண்களுக்குள் என்னவர் இருக்கிறார். கனவே கலைநதுவிடாதே.

தொலை(ந்த)த்தஒன்று உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல், தேடிப்பார் உனக்குள் நான் இருக்கலாம்.

என்னவரின் அன்பில் எல்லையற்ற மகிழ்ச்சியில் நான்.

என் வானம் நீ தேய்ந்தாலும் மறைந்தாலும் மீண்டும் வலம்வரும் நிலவாய் நான்.

காதல் தூறல் போட சட்டென வானவில்லாய் ஆனது மனம்.


Best Love Quotes In Tamil

மனக்கடலில் நீ குதிக்க மூழ்கிப்போனேன் நான்

சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி இதமாகவே இருந்தது உன் அன்பில்

உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன். இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்

குளிர் காலத்தில் நான் வாடினால் உன் பார்வைதான் என் போர்வையோ


Best Love Quotes In Tamil

சுத்தமாய் என்னை மறந்து போனேன் மொத்தமாய் நீ அள்ளும் போது

உன்னுள் உறைந்து உலகம் மறக்க ஆசையடா

கண்களில் கைதாக்கி இதயத்தில் சிறைவைத்து உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்

உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு

நேற்று வரை எதையோ தேடினேன். இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக


Best Love Quotes In Tamil

எனக்கு இன்னொரு தாய்மடி நீயடா.

மறக்க தவிக்கும் நீயும் மறக்க முடியாமல் நானும்

நீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும் இதயம் சிதறிதான் போகிறது

சந்தோஷமாய் பறக்கின்றேன் சிறகுகளாய் நீ இருப்பதால்

மார்கழி குளிரும் இதமான வெப்பமானது உன் நினைவுபுள்ளியில் கோலத்தை ஆரம்பித்தபோது


Best Love Quotes In Tamil

இதயம் என்ன போர்க்களமா? உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே?!

என்னவனுக்குள் தொலைந்த நொடியிலிருந்து தினமும் எனக்கு காதலர் தினமே

காதல் சிலருக்கு கண்ணீரின் காவியம் பலருக்கு அழகிய ஓவியம்

கடலில் விழுந்த நீர்துளிப்போல் உன்னில் கலந்துவிட்டேன்


Best Love Quotes In Tamil

கட்டிலறையோடு முடிவதல்ல காதல். கல்லறைவரை தொடர்வதே காதல்

ஆசை ஊற்றெடுக்கும் போதெல்லாம் அணைபோடுகிறது நாணம்.

தழுவிச் செல்லும் காற்றிலும் உன் நினைவுகளே கூந்தலை கலைத்துச் செல்கையில்.

புரிந்துக்கொள்ளும் வரை எதையும் ரசிக்கவில்ல. புரிந்துக்கொண்டபின் உன்னை தவிர எதையும் ரசிக்கமுடியவில்லை.


Best Love Quotes In Tamil

அகிம்சையாக உள்ளே நுழையும் சில நினைவுகள் வெளியேறும் போது போர்க்களமாக்கிவிட்டு செல்கிறது மனதை.

ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய் என் விழிகள் தான் ஏனோ உன் வழியை தொடர்கிறது.

மனதிலுள்ள ஆசையெல்லாம் நீ பார்க்கும் போது நாணத்தில் மறைந்துக்கொ(ல்) ள்கிறது. விழிகளை மூடிக்கொள் என்னாசைகளை நிறைவேற்ற.

அன்பெனும் மாளிகையில் அழியாத பொக்கிஷம் நம் அழகிய நிகழ்வுகள்


Best Love Quotes In Tamil

உன் நெஞ்சத்தின் பஞ்சணையில் என் கவலைகளும் உறங்கிவிடும்

என்ன மாயம் செய்தாய் உனக்கெழுதும் வரிகளெல்லாம் மாயமாக மறைகிறதே. நீயில்லா நேரம் நினைவுகள் பாரம்

ஆயுளின் காலம் எதுவரையென்று தெரியாது. ஆனால் உனதன்பிருக்கும்வரை என் ஆயுளிருக்கும்...

விழி பார்த்து பேசு என்கிறாய் உன் விழி நோக்க மொழிகளும் மறந்து போகிறது. மொழிகளை திருடிக்கொண்டாயா?


Best Love Quotes In Tamil

காத்திருந்து களைத்துவிட்டது,கண்கள். கனவிலாவது கலந்து கொள் அல்லது கண்டுசெல்.

தனிமையை நேசிக்கின்றேன் உன் நினைவுகளுக்காக.

நீ வெட்கித்தலை குனிந்து கொலுசுமாட்டும் அழகில் நான் சொக்கித்தான் போகின்றேன்.

உன் தொலைதூர பயணத்தில் என்னையும் சுகமாகவே சுமந்துச்சென்றிருகிறாய் என்று விடாமல் ஒலிக்கும்

உன் தொலைதூர குரல் சொல்லாமல் சொல்கிறது.

விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன் விழிமூடாமல் உன் நினைவில். எனையறியாமல் உறங்கிப்போனேன் உனதன்பில்.


Best Love Quotes In Tamil

தனிமையின் இடைவெளியை நிரப்புகின்றது உன் நினைவுகள்.

அடிக்கடி நினைக்க வைத்து கன்னத்தை நனைத்துச் செல்கிறாய்.

காற்றோடு வந்த காதல் மொழியில் நான் காத்தாடியானேன். காதல் நூலால் என்னை கட்டி இழுப்பாயா?

வாடிய மனம் வானவில்லானது உன் வருகையை கேட்டு.

மொழியில் சொல்லத்தயங்கும் ஆசைகளையெல்லாம் விழியில் கொட்டித் தீர்க்கிறேன்.


Best Love Quotes In Tamil

என்னைவிட நம் காதலை பாதுகாத்தது நீ, நான் தவறவிட்டபோதெல்லாம் தாங்கிப் பிடித்தாய்.

இரவும் கடந்துக்கொண்டிருக்க உன் நினைவுகள் உரசிக்கொண்டிருக்க என் உறக்கமும் தொலைந்துக்கொண்டிருக்கிறது.

நீ பொழியும் அன்பின் அருவியைவிடவா இந்த மலையருவி என்னை மகிழ்விக்கபோகிறது?

தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய் வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கித் தவிக்கிறது.

உன் நினைவுத் தென்றலில் நானுமோர் ஊஞ்சலாகின்றேன்


Best Love Quotes In Tamil

ஆசைகள் கடலாய் பொங்க வெட்கங்கள் அலையில் அடித்துச்செல்ல அச்சங்கள் கரையொதுங்கி முத்தங்களும் தொடர்ந்தது.

புயலைவிட வேகமாக தாக்குகிறது, உன் பார்வை. கொஞ்சம் தாழ்த்திக்கொள். நான் நிலையாக நின்றுகொள்கிறேன்.

தொல்லைகள் செய்யாமல் தொலைவாகவே தொடர்ந்து என்னை உன்னில் தொலைக்கச் செய்தாய்.

விழிகள் அடிக்கடி மோதிக்கொள்ள விபத்தொன்று நேர்ந்துவிட்டது. அது இன்பம் தரும் விபத்து. இதயங்கள் ஒன்றான காதல் விபத்து.


Best Love Quotes In Tamil

நிசப்தமான இரவில் உன் நினைவுமோர் அழகிய கவிதை.

விழித்துக்கொண்ட நினைவுகள் உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது.

பிடிவாதத்தில் ஜெயிப்பதைவிட உன் அன்பிடம் தோற்பதையே விரும்புகிறேன்.

தனிமையை இனிமையாக்க உன் நினைவுகளால் மட்டுமே முடியும்.

மேகங்கள் சூழ்ந்த நிலவாய் நான் காற்றாகி ஒளி தந்தாய் நீ


Best Love Quotes In Tamil

என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான் அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்

நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை, மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை.

தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை, உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது.

Updated On: 7 Oct 2023 7:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு