/* */

கேரள மணத்துடன் அவியல் எப்படி செய்யணும்..? தெரிஞ்சுக்கங்க..!

Aviyal Recipe Tamil-சாப்பாட்டு விஷயத்தில் தென்னிந்திய மக்கள் ருசியாக சாப்பிடுவதில் பிரியமுள்ளவர்கள். வகைவகையாகத்தேடி உண்பார்கள்.

HIGHLIGHTS

Aviyal Recipe Tamil
X

Aviyal Recipe Tamil

Aviyal Recipe Tamil-கல்யாண சமையல் என்றால் பந்தியில் அவியல் இல்லாமல் இருக்காது. இன்னும் சிலரது வீட்டு விசேஷங்களில் கேரள மணம் மாறாமல் அவியல் செய்திருப்பார்கள். அது சுவை அதிகமாக இருக்கும். அதை அப்படியே நம் வீட்டிலும் செய்து பார்க்க ஆசைதான் ஆனலும் அந்த ருசியும் மணமும் வரலையே என்று குறைபட்டுக்கொள்ளும் உங்களுக்கு இதோ கேரள ஸ்டைலில் அவியல் தயார் செய்ய வழிகாட்டுகிறோம் ஜமாய்ங்க..!

அவியலை சுலபமான முறையில், சுவையான முறையில் எப்படி செய்யலாம், என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் பாப்போம் வாங்க.

அவியலுக்கு தேவையான காய்கறிகள்

வாழைக்காய் – 1, கேரட் -1, சேனைக்கிழங்கு – சிறிய துண்டு, கொத்தவரங்காய் – 6, வெள்ளைப் பூசணி – சிறிய துண்டு, அவரை – 6, கோவைக்காய் – 10, முருங்கைக்காய் – 1 அல்லது 2, பீன்ஸ் – 6, கத்தரிக்காய் -2 , இந்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.

இது மட்டும் இல்லீங்க. உங்களுக்கு பிடிக்கும் காய்களைக்கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், கட்டாயமாக, இவங்க இல்லாம அவியல் இருக்கக்கூடாது. யார் அவங்கன்னு தெரியுமா..? அவங்கதான் கோவக்காய், வாழைக்காய், முருங்கைக்காய். இவங்க மூணு பெரும் இல்லாம அவியல் ருசிக்காது.

நாம் மேலே கூறியுள்ள காய்கறிகள் எல்லாவற்றிலும் உங்களுக்கு தேவையான அளவு காய்கறிகளை எடுத்துக்கொண்டு, அந்த காய்கறிகளை சுத்தமாக கழுவி, சிரிசாகவும் இல்லாமல், மிகவும் பெரியதாகவும் இல்லாமல் நடுத்தர அளவில் காய்களை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் நீள நீள வாக்கில் அவியலுக்கு காய்கறிகள் வெட்டுவது சிறப்பு.

அடுத்ததாக ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த காய்கறிகளை எல்லாம் போட்டு கொஞ்சமாக உப்பு சேர்த்து 1/2 ஸ்பூன் அளவு மஞ்சள்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, அடுப்பில் வைத்து ஒரு மூடி போட்டு, மிதமான வெப்பத்தில் வேக வைக்க வேண்டும். காய்கறிகள் எல்லாம் குழைந்து விடக்கூடாது. காய்கறிகள் குழைந்து விட்டால், அவியல் ருசி குறைந்து விடும். காய்கறிகள் பக்குவமாக வேகட்டும். வெந்துரிச்சி ஆனா வேகல. அப்படிங்கற பதத்தில் வேகவைக்கவேண்டும்.

அப்புறம், காய்கறிகள் வேகும் வரை சும்மா மசமசன்னு நிக்காம, அரைமூடி அளவு தேங்காயைத் துருவுங்க. உங்களுக்கு காரம் எந்த அளவுக்கு வேணுமோ அந்த அளவுக்குத் தேவையான அளவு நான்கிலிருந்து ஐந்து பச்சை மிளகாய், 1 டீ ஸ்பூன் சீரகம், 3 பல் பூண்டு இவைகளை ஒன்றாக சேர்த்து மிக்ஸி ஜாரில், திக்கான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை குருமாவுக்கு அரைப்பதுபோல மைய அரைக்காமல், கொஞ்சம் திப்பிதிப்பியாக இருப்பது போல் அரைக்க வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். சில பேர் இந்த அவியலில் பூண்டு சேர்க்க மாட்டார்கள். ஆனால் பூண்டு சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கும்.

அடுத்ததாக காய்கறிகள் பதமாக வெந்து வந்ததும், அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் வரை மிதமான தீயில் அவியலை கொதிக்க விடவேண்டும். இப்போது தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொறுங்க..பொறுங்க அவியலை இறக்கிடாதீங்க..அவியலை இறக்குவதற்கு இரண்டு நிமிடத்திற்கு முன்பாகவே, இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு தயிரை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

ஞாபகத்தில் இருக்கட்டும் ரொம்பவும் புளித்த தயிரை போட்றாதீங்க.அவையல் ருசியை மாற்றிவிடும். புளிக்காத கெட்டித்தயிரை சேர்த்து கிளறணும். இப்போது உங்கள் கடாயில் அவியல் தயாராக இருக்கும். அந்த கமகம வாசம் அப்போதே அள்ளி சாப்பிடாத் தோன்றும்.

நமக்கு கேரள மனம் வரணும் இல்லையா.. அதனால கடைசியாக கேரளா ஸ்டைலில் 2 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு கருவேப்பிலை, வர மிளகாய் தாளித்து கொட்டி அவியலை இறக்கிவிட்டால் பக்கத்து வீட்டு பத்மா அக்கா, 'ஏண்டி சிவகாமி? என்னடி செஞ்ச வாசம் தூக்குது..?' என்று கேட்டு வந்துடுவாங்க. அவங்களுக்கும் கேரளா அவியலை சொல்லிக்கொடுங்க.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 April 2024 10:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...