Athipalam benefits in Tamil அத்திப்பழத்தின் நன்மைகள் தமிழில்

Athipalam benefits in Tamil அத்திப்பழம் எடை இழப்புக்கும் வயிற்று பகுதியில் உள்ள வீக்கத்தை குறைக்கவும் உதவுவதால், இதனை டயட்டில் தாராளமாக சேர்க்கலாம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
Athipalam benefits in Tamil அத்திப்பழத்தின் நன்மைகள் தமிழில்
X

Athipalam benefits Tamil அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

அத்திப்பழத்தை ஜூஸ் போட்டு அருந்தினாலும், உலரவைத்து வத்தல் பதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். அந்த அத்திப்பழத்தினால் கிடைக்கும் பலவகையான நன்மைகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.


மூலம்

நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், மூலம் நோய் ஏற்படுகிறது. உடலின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் காய்ந்த அத்திப்பழங்கள் மற்றும் அத்திப்பழ ஜூஸ் அதிகம் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும்.

இதய நோய்கள்

உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள பீனோல் மற்றும் ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.

மலச்சிக்கல்

உணவுகளை சாப்பிட பின்பு சரியான அளவு நீர் அருந்தாமல் இருப்பது, இரவில் நெடு நேரம் கண் விழித்திருப்பது, உணவுக்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படலாம். காய்ந்த அத்திப்பழங்களையோ அல்லது அத்திப்பழ ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.


கொலஸ்ட்ரால்

Athipalam benefits Tamil உடலில் கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக சேர்ந்து விடுவததை கொலஸ்ட்ரால் என்கின்றனர். இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனையை போக்க அத்திப்பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இதிலுள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து பொருள், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து கொலஸ்ட்ரால் அளவை சமப்படுத்துகிறது.

உடல் எடை

உடல் எடை அதிகரிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடிப்பது அவசியம். நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் உணவில் இருக்கும் கொழுப்பு, உடலில் சேராமல் தடுக்கப்படுகிறது. அந்த நார்ச்சத்து அத்திப்பழத்தில் அதிகம் உள்ளது. எனவே ஒரு நாளைக்கு ஒருமுறையாவது சில அத்திப்பழங்களை சாப்பிடுவது நல்லது.

புற்று நோய்

அத்திபழங்கள் மற்ற எல்லா பாதிப்புகளையும் விட வயிற்றில் ஏற்படும் புண்கள், அமில சுரப்பு குறைபாடுகள் போன்ற்வற்றை சரி செய்வதில் சிறந்த செயலாற்றுகிறது. பெருங்குடலில் தங்கியிருக்கும் சில நச்சுக்களால் நாளளவில் பெருங்குடலில் புற்று நோய் ஏற்பட காரணம் ஆகிறது. அத்திப்பழங்களை தின்தோறும் சாப்பிட்டு வருபவர்களுக்கு குடலில் தங்கியிருக்கும் நச்சுகள் அனைத்தும் நீங்கி குடல் சுத்தமாகி, குடல் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.


கல்லீரல்

மது பழக்கம் களின் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு விடும். இந்த கல்லீரல் வீக்கத்தை போக்க சில அத்திப்பழங்களை வினிகரில் ஒரு வாரம் ஊறவைத்த பின்பு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும். கல்லீரலில் சேர்ந்திருக்கும் போதை பொருட்களின் நச்சுக்களை நீக்கும்.

Athipalam benefits Tamil அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.

Updated On: 25 Jun 2022 1:15 PM GMT

Related News

Latest News

 1. வழிகாட்டி
  மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தில் 4300 பணியிடங்களுக்கான அறிவிப்பு
 2. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,400 கன அடி
 3. நாமக்கல்
  பெண் குரலில் பேசி ரூ.5 லட்சம் மோசடி: மர்ம நபர் மீது சைபர் கிரைம்...
 4. ஆன்மீகம்
  இந்த நான்கு ராசிக்காரர்களை சிவபெருமானுக்கு ரொம்ப பிடிக்குமாம்
 5. இராசிபுரம்
  பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 2 பெண் தொழிலாளர்கள்
 6. இந்தியா
  இந்திய விமானப்படைக்கு வானில் பறக்கும் ராட்சஷன்
 7. நாமக்கல்
  இணை இடுபொருட்கள் வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது: வேளாண்துறை...
 8. நாமக்கல்
  நாமக்கல் முன்னாள் அதிமுக எம்எல்ஏ வீடு, 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு...
 9. திருப்பூர்
  நுாற்பாலைகளுக்கு நேரடியாக பஞ்சு விற்பனை; மத்திய அரசுக்கு 'சைமா'...
 10. சைதாப்பேட்டை
  சென்னையில் மாநகராட்சி குப்பை வாகனம் திடீரென தீப்பிடித்து விபத்து