/* */

வடை மோர் குழம்பு சாப்பிட்டு இருக்கறீங்களா?

மோர் குழம்பு சாப்பிட்டு இருப்பீர்கள். வடை மோர் குழம்பு சாப்பிட்டு இருக்கறீர்களா? வாங்க, வடை மோர் குழம்புவை ருசி பார்ப்போம்.

HIGHLIGHTS

வடை மோர் குழம்பு சாப்பிட்டு இருக்கறீங்களா?
X

சூப்பரான வடை மோர் குழம்பு சாப்பிடலாமா? (கோப்பு படம்)

விதவிதமான சுவையில் சாப்பிட அனைவருக்குமே விருப்பம்தான். அதுவும் பால், தயிர், மோர் சார்ந்த உணவு பொருட்களின் சுவையை விரும்பாதவர்கள் மிக மிக குறைவே. பால் சாதம், தயிர் சாதம், மோர் குழம்பு, பால் கொலுக்கட்டை, தயிர் வடை, பால் பாயாசம் என, பால் சார்ந்த உணவு ரகங்களை பலரும் விரும்பி, ரசித்து ருசிப்பது வழக்கமாக இருக்கிறது. நெய், வெண்ணெய் போன்றவையும் அதீத சுவையை தரக்கூடியவைகளாக இருக்கின்றன.


மோர் குழம்பு, தயிர் வடை பலருக்கும் பிடித்த உணவுதான். அதுபோல் வடை மோர் குழம்பும், பலரும் விரும்பி சாப்பிடும் உணவு வகையாக உள்ளது. வடை மோர் குழம்பு செய்வது எப்படி என தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள் :

மெதுவடை அல்லது பருப்பு வடை - 10

தயிர் - 2 கப்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான அளவு


ஊறவைத்து நைசாக அரைக்க : அரிசி - 1 ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 ஸ்பூன்

கொரகொரப்பாக அரைக்க

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 5 பல்


இஞ்சி - சிறிது துண்டு

தாளிக்க : எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2


செய்முறை :

*அரிசி, துவரம் பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும்.

* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளி, வெங்காயம், இஞ்சியை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

* ஊறவைத்த அரிசி, துவரம் பருப்புடன், சீரகம், ப.மிளகாய் சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் தயிர், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், 2 கப் தண்ணீர், அரைத்த அரிசி விழுது, உப்பு சேர்த்து நன்றாக கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் கொரகொரப்பாக அரைத்த விழுதை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் கரைத்து வைத்துள்ள தயிர் கலவையை ஊற்றி கொதிக்க விடவும்.

* கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வடைகளை போடவும். வடைகளை போட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

* கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

இப்போது, ருசியான வடை மோர் குழம்பு ரெடிங்க!

Updated On: 28 Jun 2023 6:28 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?