/* */

அப்பா ஒரு ஆழ்கடல்..! அங்கு அலைகள் ஆர்ப்பரிப்பதில்லை..!

Appa Feeling Quotes in Tamil-அப்பாவின் கண்டிப்பு, வாழ்க்கையை உணரச் செய்து உயர்த்திப்பிடித்த கோபுரம் போன்றது.

HIGHLIGHTS

Appa Feeling Quotes in Tamil
X

Appa Feeling Quotes in Tamil


Appa Feeling Quotes in Tamil

மரத்தைத் தாங்கிப் பிடிக்கும் வேர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை அதுபோலவே குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் அப்பாவின் உழைப்பு பலருக்குத் தெரிவதில்லை. அப்பாவின் கண்டிப்பை பார்த்து அச்சமும் வெறுப்பும் கொள்ளும் குழந்தைகளுக்கு புரிவதில்லை அதுதான் நம்மை நல்வழிப்படுத்தி வாழ்க்கையின் உயரத்தை அடைய வைக்கும் அப்பா காட்டும் வழி என்று..! இன்பத்தினை இருமடங்காக நம்முடன் பகிர்ந்து துன்பத்தினை மறைத்து வைத்து சிரித்திடுவார். அக்கறையும் பாதுகாப்பும் தருவதில் தந்தைக்கு நிகர் தந்தையே..! அப்பா மேற்கோள்கள்..

  • புறத்தில் முள்ளாய் இருக்கும் நம் தந்தை அகத்தில் இனிப்பாய் இருப்பார், பலாப்பழம்போல..!
  • நம்மை தோளிலும் மனதிலும் தூக்கி சுமக்கக் கூடிய தெய்வம் ஒன்று உண்டென்றால் அது அப்பா மட்டுமே..!
  • அம்மாவின் கருவறை புனிதமானதுதான்.. அதுபோல தாங்கிப் பிடிக்கும் அப்பாவின் கைகளும் புனிதமானது.
  • பலரது வாழ்வில் கடைசிவரை புரிந்துகொள்ள முடியாத புத்தகம் அப்பா. படிக்கப் படிக்க வாழ்க்கையின் அர்த்தங்கள் புரிந்துபோகும்..!
  • தாங்கிப் பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை எந்த பிள்ளைகளும் வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை.
  • உன் அப்பாவின் கஷ்டம் தெரிய வேண்டுமானால் அவர் இரவு தூங்கும் பொழுது அந்த சுருங்கிய முகத்தையும் ஆழ்ந்த உறக்கத்தையும் பார்..!
  • தன் தலைக்கு மேலே உட்கார வைத்து நம்மை அழகு பார்க்கும் அப்பாவை நாம் ஒருபோதும் தலைகுனிய வைத்து விடக்கூடாது.
  • தன் மூச்சு உள்ளவரை என்னை நேசிப்பவர் எனக்காக சுவாசிப்பதும் என் அப்பா மட்டுமே..!
  • ஓலைக்குடிசையில் பிறந்த தன் மகனுக்கு கோடீஸ்வரன் என்று பெயர் வைத்து அழகு பார்த்தவர் அப்பா..!
  • அடித்தாலும் அன்பால் அணைக்கும் ஒரே ஜீவன் என் அப்பா..!
  • இந்த உலகில் ஒரு பெண் பிள்ளையை தந்தையைக் காட்டிலும் வேறு யாராலும் அதிகமாக நேசிக்க முடியாது..!
  • கடவுளுக்கும் அப்பாவுக்கும் சிறு வேறுபாடுதான் உள்ளது. கண்களுக்கு தெரியாமல் இருப்பது கடவுள், கண்களுக்கு தெரிந்தும் கடவுள் என புரிந்து கொள்ளப்படாதவர்தான் அப்பா..!
  • பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா..! வாழ்க்கை முழுதும் நாம் ஒரு நிலையை அடையும் வரை சுமக்கும் தெய்வம் அப்பா..!
  • அப்பா நீங்கள் கவிதை அல்ல.. உரைநடை உங்கள் வாழ்க்கை வரலாறு அல்ல.. வாழ்க்கையின் எதார்த்த சரித்திரம்..அது ஒரு சகாப்தம்..!
  • அப்பாவின் நடமாடும் நிழல்கள் தானே நாமெல்லாம்..! அவர் உதிரத்தில் உருவான செடிகள் தானே குழந்தைகள்..!
  • அப்பாவின் அன்பு எப்போதும் கொண்டாடப்படுவதில்லை..! ஆனாலும் அவர் நம்மை எப்பொழுதும் கொண்டாடாமல் இருந்ததில்லை..!
  • மலர்களை மட்டுமே நாம் ரசிப்பதால் வேர்கள் நம் கண்களுக்கு தெரிவதில்லை..! அது போல் தான் நம் தந்தையும்..! அவர் தாங்கிப்பிடிக்கும் வேர்..!
  • நம் நிழலில் நம் பிள்ளைகள் வளரும்போது நம் தந்தையை நினைக்காமல் மனம் இருப்பதில்லை..ஒவ்வொரு நொடியிலும் தந்தையின் ஞாபகம்..!
  • வறுமையின் விளிம்புகளில் வாடிக் கிடந்த போது கூட தந்தையின் கண்களில் நான் கண்ணீரை கண்டதில்லை..! அவரே நான் முதல் மாதம் உழைத்த சம்பளத்தை அவர் கையில் கொடுத்தபோது அவரது கண்ணீரைக் கண்டேன்..அது ஆனந்தக்கண்ணீர்..!
  • அப்பாக்கள் எப்போதும் தனக்காக உழைப்பதில்லை..தன்னைச் சார்ந்தவர்கள் சோர்ந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே உழைக்கிறார், காலம் நேரம் பார்க்காமல்..!
  • பிள்ளைகளின் மகிழ்ச்சியில் அப்பா என்ன சுகம் காண்பாரோ தெரியவில்லை..வளர்ந்தபின்னர் எனக்குமது பாடமாக்கலாம்..!
  • வேலை முடிந்து தான் வாங்கி வந்த தின்பண்டத்தை பிள்ளைகளை எழுப்பி உன்னைச் சொல்லும் அப்பாவின் அன்பை வளர்ந்தபின் நாமே ஏன் நினைப்பதில்லை?
  • அச்சாணியை யாரும் அள்ளி முத்தமிடுவது இல்லை.. நீங்கள் அச்சாணி அப்பா..குடும்ப வண்டி குடைசாய்ந்து சீராக ஓட பிடித்துக்கொள்ளும் பேராணி..!
  • உங்கள் உருவம் ஒரு கூர்மையான ஆயுதம் போலத்தான் இருக்கிறது..! ஆனாலும் அந்த ஆயுதம் காயப்படுத்துவதில்லை..!
  • ஊதாரிப் பிள்ளையாக நான் ஊர்ச்சுற்றி திரிந்த போதிலும், ஊமையாய் நீ நின்று என் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்தாய் நீ..
  • உடலாலும் மனதாலும் நீ உடைந்த போதிலும் ஊக்கம் தந்து என்னை வழிநடத்திய தெய்வம் என் அப்பா..!
  • தோள் மீதும், மார்பு மீதும் என்னை சாய்த்து, என் வலிகளை எல்லாம் தாங்கி, வழிகாட்டும் கலங்கரை விளக்காக என் பாதைகள் முழுக்க வெளிச்சம் தந்தாயே அப்பா..!
  • நான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுது அப்பாவின் கஷ்டம் எனக்குப் புரியவில்லை..! இப்பொழுது நான் அப்பா ஆனபின் அப்பாவின் வலி அறிந்தேன்.
  • உருவமில்லா கடவுள் கேட்டால் மட்டும்தான் எதையும் கொடுக்க முன்வரும்..! ஆனால் என் தந்தையின் முகத்தை பார்த்தால் மட்டும் போதும், எல்லாம் என் காலடியில் கிடக்கும்..!
  • வானளவு உன் யாகத்தை கணக்குப் போட முடியவில்லை, என்னால்..! உன் அளவுக்கு இங்கே யாரும் இல்லையே அப்பா..!
  • வறுமைக் கோட்டில் நீர் கிடந்தாலும் என் பசியை போக்க மறந்ததில்லை ஒருபோதும்..! என் பசி தீர்க்க நீ பட்டினிக்கிடந்தாய்..!
  • ஆராரோ பாட்டுப்பாடி தாலாட்டத் தெரியாத தாயும் நீ தான், அப்பா..!
  • ஆயிரம் சோகங்கள் இருந்தாலும் அதனை முகத்தில் காட்டாத நிஜ நாயகனும் நீயே..!
  • உன் தோள்களில் எனை சுமந்து நீயும் செய்தாய் அன்பின் ஆட்சி.
  • பத்து மாதம் எமை சுமந்து பெற்ற தாயைப் போல எமை கருவில் சுமக்காமலே – தன் இதயத்தில் சுமப்பவர் அப்பா..!
  • தாயிற் சிறந்த கோவிலுமில்லை.. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. தந்தையை விட நம்மை அன்பு செய்பவர் இவ்வுலகில் யாருமில்லை..!
  • தந்தையின் மறு உருவம் கண்டிப்பு..! கண்டிப்பால் நமை ஆள்பவர் அப்பா..! எப்போதும் விரைப்பாய் இருப்பவருள்ளே ஆழமாய் சுரப்பது தாய்ப்பாசம்..!
  • தன் பிள்ளை சிறக்க வேண்டுமென அல்லும் பகலும் அயராது உழைத்து தன் வியர்வைத் துளிகளை பொருட்படுத்தாது நமக்காக உழைப்பவர் அப்பா..!
  • கண்களில் கண்ணீர் கண்டதில்லை..! அவர் வார்த்தைகளில் வலி அறிந்தது இல்லை..! தன் வேதனை வெளித் தெரியாமல் தன் குடும்பத்திற்காய் உருகும் மெழுகுவர்த்தி அப்பா..!
  • அப்பா என்ற சொல்லிற்கு அர்த்தங்கள் பல அகராதியில் இருந்தாலும் என்றும் ஆழமான அவர் பாசம் அன்பு என்பதே அவர் தாரக மந்திரம்..!
  • கை பிடித்து மெதுவாய் நடை பயின்று..இந்த உலகத்தை நமக்குக் காட்டி, தான் கற்றப் பாடங்களை எமக்கு கற்றுத் தருபவர் அப்பா..!
  • கண்டிப்புடன் கூடிய அவர் வார்த்தைகள் நம்மை நல்வழிப்படுத்தும் கருவி..! அவர் அறிந்த படிப்பினைகளே நம் வாழ்வின் ஏற்றப்படிகள்..!
  • அவர் உழைப்பு என்றும் வெளித் தெரிவதில்லை..! வாய் விட்டு தன் கவலை சொன்னதில்லை..! அவரது விலை மதிக்க முடியா தியாகங்கள் எம்மை செம்மைப்படுத்தும் கூர்ங்கற்கள்
  • அவமானங்கள் பல சுமந்து, தடைகள் பல கடந்து, நம் வீட்டை கட்டிக் காத்து தன் குடும்பத்துக்காய் வாழும் ஒரு ஜீவன் அப்பா..!
  • உலகத்திலே எதற்கும் ஈடு இணையில்லாதது ஓர் தந்தை தன்பிள்ளை மீது கொண்ட பாசம்..! எதனையும் எதிர்பாரா அவர் பாசம் ஞாலத்தில் கிடைத்தற்கரிய ஓர் பொக்கிசம்..!
  • தான் கண்ட உலகத்தை தன் பிள்ளை சிறப்பாய் காண வேண்டுமென கடைசிவரை கடினமாய் உழைத்து தன் பிள்ளைகளை உயர்த்தும் உன்னத தெய்வம் தந்தை..!
  • தரை மீது நம் பாதம்படக் கூடாதென தோள் மீது நமை சுமந்து புது உலகை நமக்குக் காட்டி நம்மை புத்தம் புதிதாய் ஆக்கியவர் அப்பா..!
  • தாயைப் போற்றும் இவ்வுலகம் தந்தையை போற்றி தொழ சற்று மறந்து தான் போகின்றது.. ஆனாலும் அவர் மனம் அதற்காக வருந்தி நின்றதில்லை..!
  • இந்த உலகமே நம்மை எதிர்த்தாலும் நமக்காக நிற்பவர் அப்பா.. யாருமே புரிந்து கொள்ளமுடியாத அவர் பாசம் என்றுமே போற்றப்பட வேண்டியது
  • தந்தை என்றால் பாதுகாப்பு, தந்தை என்றால் துணிவு, தந்தை என்ற சொல்லே நம் நம்பிக்கை..!
  • உலகமே போற்றும் தாயைப் போல நம்மை உயிராய் போற்றும் தந்தையை எந்நாளும் உறவாய் எண்ணி இறுதிவரை காத்திடுவோம்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 25 March 2024 9:10 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...