/* */

முள்ளாக குத்தினாலும் மலராக தாங்குபவர், அப்பா..!

Birthday Wishes Appa in Tamil-வறுமையில் வாழ்ந்தபோதும் துன்பத்தை சிறிதேனும் பிள்ளைகளிடம் காட்டிக்கொள்ளாது மகிழ்ச்சியை மட்டுமே தந்தவர் அப்பா.

HIGHLIGHTS

Birthday Wishes Appa in Tamil
X

Birthday Wishes Appa in Tamil

Birthday Wishes Appa in Tamil-தனக்கென்று எதுவும் தேடிக்கொள்ளாத ஒரே ஜீவன் அப்பா. அவர் சாப்பிடும் முன்பு பிள்ளைகள் சாப்பிட்டு விட்டார்களா என்று கேட்டபின்னே அவர் உண்பார். என் பிள்ளை நடக்கத்தொடங்கிவிட்டான் என்று சிறுவயதில் சைக்கிள் வாங்கித்தந்த என் அப்பா, நான் நடந்து செல்கிறேன் என்று வட்டிக்கு பணம் வாங்கி இருசக்கர வாகனம் வாங்கித் தந்தவர் அப்பா.

என் கண்ணீரைக் கண்டு என் மகன் கலங்கி விடக் கூடாது என்று, கஷ்டங்களை மனக்கடலில் புதைத்துக்கொண்டவர் அப்பா. தன் மகனின் வெற்றியை, பெருமையாக மிட்டாய் குடுத்து, தான் சாதித்தது போல் கொண்டாடுபவர் அப்பா. என் அப்பா ஒரு இமயம். அவரே என் கடவுள். அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வோம் வாங்க.

அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :

  • என் கனவுகளுக்கு முகவரி தந்த என் தந்தையே உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • துன்பங்களை முகத்தில் ஒருபோதும் காட்டாது எங்களின் வளர்ச்சிக்காக உழைத்த இமயமே, என் தந்தையே வணங்குகிறேன். அன்பு அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • என் ஆசைகள் எல்லாம் உங்கள் வியர்வையில் கிடைத்த முத்துகள்..! அதை வீண்போக விடமாட்டேன் என் தந்தையே..! என் இனிய அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
  • பத்து மாதம் சுமந்தாள் அன்னை..! ஆனால், நான் வளரும்வரை என்னை தோளிலும், மனதிலும் சுமந்து என்னை உருவாக்கிய என் தந்தை கடவுள்..! என் அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • உன்னை ஒப்பிட எனக்கு உலகில் வேறு எதுவும் கிடைக்கவில்லை என் தந்தையே..! ஏனெனில் நீ.. எல்லாவற்றுக்கும் மேலானவன்..! ஒப்பீடற்றவன்..! என் முத்தங்களுடன் என் அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • திருவிழா தேர் தெரிய தோளில் எனை சுமந்தாய்..! வாழ்க்கையின் பாதை தெரிய என் ஆசைகளின் சுமைகளை நீயே உன் தோளில் சுமந்துகொண்டாய்..! என் இனிய அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • சிறு வயதில் நான் தவறி விழுந்துவிடக் கூடாதென்று மூன்று சக்கர தள்ளுவண்டி செய்து தந்தாய் அப்பா..! நீ தடுமாறும் வயதில் உன்னை என் கண்ணாக வைத்துக்காப்பேன் அப்பா..! என் செல்ல அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • குடும்பத்தின் ஆலமரம் நீ..! அம்மா உட்பட எங்களுக்கு வறுமையின் வெயில் படாமல் வாழவைத்த பெருமரம்..! அது எங்கள் வாழ்க்கையை உயர்த்திய இமயத்து மரம்..! என் உயிரினும் மேலான அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!

  • எங்கள் பசியாற்ற எங்களுக்கு சோறு தந்தாய்..! விரதம் என்று உண்ணாமல் நீ இருந்தாய்..! அந்த கண்ணீர் நாட்கள் இன்னும் நெஞ்சினில் இருக்கிறதப்பா..! உங்கள் மூச்சுள்ளவரை என் தோள்களில் தாங்குவேன்..! என்னுயிர் அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • எத்தனை வறுமை வந்தாலும், வறுமையின் வெறுமை எங்களுக்குத் தெரியாமல் வளர்த்த என் தந்தையே..நன் உயர்ந்தபின் உன்னை வறுமையில் வீழவைப்பேனா..? நீயே என் பொக்கிஷம்..! என் இனிய அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • அவரின் அறிவையும் அவரது ஆளுமையையும் என்னுள்ளே எனக்குத் தந்தவர் என் தந்தை..! என் புகழின் எழுத்துக்கள் அவரே..! எனக்கு என் அப்பா ஒரு புத்தகம்.! அறிவைத் தந்தவர்..! என் இனிய அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  • தனக்குக் கிடைக்காதவர்கள் எல்லாம் தன பிள்ளைக்குக் கிடைக்கவேண்டும் என்று அதற்காகவே தன்னை வருத்திக்கொண்டவர் தந்தை..! துன்பத்தின் சாயல் சிறிதும் தெரியக்கூடாதென சிரிப்பை வலுக்கட்டாயமாக வரச்செய்து வைத்திருப்பார்..! என் ஆசான் அப்பாவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 22 April 2024 5:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்