alum in tamil பரிகாரத்துக்கு கட்டும் படிகாரத்தில் இத்தனை மருத்துவ குணங்களா?

திருஷ்டிக்காக வீட்டின் வாசல்களில் கட்டப்படும் படிகாரம் என்பது அலுமினியத்தின் நீரேற்றிய இரட்டை சல்பேட்டு உப்பு ஆகும், இதை சீனக்காரம் என்ற பெயராலும் அழைப்பர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
alum in tamil பரிகாரத்துக்கு கட்டும் படிகாரத்தில் இத்தனை மருத்துவ குணங்களா?
X

படிகாரம்

திருஷ்டிக்காக வீட்டின் வாசல்களில் கட்டப்படும் படிகாரம் கற்களின் மருத்துவ குணங்களை பற்றி தெரியுமா இந்த படிகாரம் கல் உடலில் ஏற்படும் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது.

வீட்டு வைத்தியம்: வீட்டு வைத்தியத்தில் படிகாரம் பல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தருகிறது. பழங்காலத்திலிருந்தே படிகாரம் பயன்படுத்தப்படுகிறது. அந்தக் காலத்திலும் படிகாரம் பல வகையான வலிகளை நீக்கும் தைலமாக வேலை செய்தது. படிகாரத்தில் பல நன்மைகள் உள்ளன. பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் படிகாரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

பல்வலியை போக்கும்

படிகாரம் பற்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது இயற்கையான வாய் பிரெஷ்ஷனராக செயல்படுகிறது. தண்ணீரில் படிகாரம் கலந்து வாய் கொப்பளிக்க பல் வலி நிவாரணம் கிடைக்கும். படிகாரம் வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.

காயங்களுக்கு களிம்பு

படிகாரம் தடவினால் இரத்தப்போக்கு நிற்கும். காயம்பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால், இரத்தப்போக்கு நின்றுவிடும். படிகாரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது காயத்தின் மீது தொற்று ஏற்படும் அபாயத்தை நீக்குகிறது.


முகப்பரு மறைய

சிலருக்கு முகத்தில் அதிகளவு முக பருக்கள் தோன்றும், இதன் காரணமாக அவர்களது சருமம் அழகிழந்து காணப்படும். இந்த முகப்பரு நீங்க படிகாரம் சிறந்த தீர்வினை அளிக்கின்றது. படிகாரத்தை சிறிதளவு எடுத்து அதனை தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்.

இந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும், இவ்வாறு ஒரு சில நாட்கள் செய்து வர முகப்பரு மற்றும் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து விடும்.

நகச்சுற்று குணமாக

நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். இந்த பிரச்சனையை சரி செய்ய படிகாரம் மிகவும் பயன்படுகின்றது. இந்த படிகாரத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்து கொள்ளவும். பின்பு இந்த பேஸ்ட்டினை நகச்சுற்று உள்ள நகங்களில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர நகச்சுற்று சரியாகிவிடும்.


நகம் சொத்தை சரியாக

நகம் சொத்தை குணமாக படிகாரம் சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த படிகாரத்தை பொறித்து தண்ணீர் சேர்த்து அரைத்து, நகம் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தினமும் இரவு தூங்குவதற்கு முன் செய்து வர நகம் சொத்தை சரியாகிவிடும்.

வியர்வை துர்நாற்றம் நீங்க:-

சிலருக்கு உடம்பில் அதிகளவு வியர்வை துர்நாற்றம் வரும். அவர்கள் தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கி விடும்.

குதிகால் வெடிப்பு நீங்க

சிலருக்கு கால்களில் அதிகளவு குதிகால் வெடிப்பு ஏற்படும். அவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் படிகாரம் கற்களை எடுத்து குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வர ஒரு சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.

சரும பிரச்சனைகள் நீங்க

சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், தழும்புகள், முகப்பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் முகம் வறட்சி நீங்க படிகாரம் ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இந்த படிகாரத்தை பொடி செய்து தேவையான அளவு எடுத்து, சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

Updated On: 19 March 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  5. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  6. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  7. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  8. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  9. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  10. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...