/* */

வஞ்சிரம் மீன் சமைக்கவும் ருசிக்கவும் சிறந்த மீன்

Omega 3 Rich Fish in Tamil-உலகத்தில் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலில் ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள மீன்கள் எப்போதும் முதன்மையாக இருக்கிறது.

HIGHLIGHTS

Seer fish in Tamil
X

வஞ்சிரம் மீன்

Omega 3 Rich Fish in Tamil-நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இதயத்திற்கு ஆரோக்கியமான உணவாக மீன் எப்போதும் இருக்கிறது.

ஆச்சரியப்படும் வகையில் அதிக அளவில் மீன் எடுத்துக்கொள்வதால் ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் கிடைக்கிறது. இதனால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்றவை ஏற்படுவது குறைகிறது என சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன

இதயத் தமனிகளில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதை ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் குறைக்கிறது.

ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் உடல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு அடிப்படையாக இருக்கிறது.

மனித மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குறிப்பாக அமிலம் DHA முக்கியமாக தேவைப்படுகிறது. இந்த காரணத்திற்காக தான் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் போதுமான அளவில் ஒமேகா-3 ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர் .

இருப்பினும் சில மீன்களில் அதிக அளவில் பாதரசம் உள்ளது. இது மூளை வளர்ச்சி பிரச்சினைகளுடன் தொடர்புடையது, இதனை கவனத்தில் கொண்டு சரியான மீன்களை தேர்வு செய்ய வேண்டும்.

மன உளைச்சல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சில நிகழ்வுகளால் அல்சைமர் நோய் ஏற்படுகிறது, இதனால் தீவிரமான நரம்பியல் வியாதிகள் மனிதர்களுக்கு தோன்றுவது இப்பொழுது அதிகமாக உள்ளது. இதனை குறைப்பதற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள், இது உங்கள் மனதை அமைதிப்படுத்தி சரியான தூக்கத்தையும் கொடுக்கும்.

ஒவ்வொரு வாரமும் மீன் சாப்பிடும் நபர்களுக்கு தங்களுடைய உணர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் கிடைப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள், அதுமட்டுமில்லாமல் நினைவாற்றலும் இதனால் அதிகரிக்கிறது.


மீன் வகைகளில் சமைக்கவும் ருசிக்கவும் சிறந்த மீன் வஞ்சிரம் மீன். பெரும்பாலான ஹோட்டல்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. வஞ்சிர மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் அடைவதுடன், சைனஸ் பிரச்சினையுடையவர்களுக்கு இது நல்ல மருந்து.

கானாங்கெளுத்தி வகையை சேர்ந்த இந்த மீன் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஏராளமாகக் காணப்படும், இது மிகவும் விரும்பப்படும் ஒரு சுவையாகும். இது 45 கிலோகிராம் எடை வரை வளரும். இது மிகவும் சுறுசுறுப்பான மீன்.

இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறது. அதிக விலை கொண்ட இந்த மீன் தமிழ்நாட்டில் வஞ்சரம் என்று அழைக்கப்படுகிறது . மஹாராஷ்டிரர்கள் இதை சுர்மாய் என்றும் , கோவாவின் கடல் உணவு பிரியர்கள் இதை இஸ்வான்/விஸ்வான் என்றும் அழைக்கிறார்கள் . இது கேரளாவில் நெய்மீன் என விற்கப்படுகிறது. மலபார் கர்நாடகாவில் சீர் மீனுக்கு அஞ்சலி என்று பெயர் .

இதை குழம்பு வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும், பொரித்து சாப்பிட்டால் அதன் சுவை வேற லெவல்!

வஞ்சிரம் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். ஏனெனில், இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நன்மை தரக்கூடியது.

இந்த மீனில் அதிக அளவில் புரதம் மற்றும் வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

ஏராளமான புரோடீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்த மீன் இது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, பார்வை குறைபாட்டை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. பொரித்து சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற மீன் இது.

எனினும் இதில் பாதரசம் அளவு அதிகம் இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்ப்பது நல்லது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 March 2024 11:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?