/* */

அப்பாடா....நடிகை பூர்ணாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கோ...டும்..டும்..டும்..

Actress Poorna Wedding-வாழ்க்கையில் கல்யாணம் என்றாலே குஷிதான். தனது திருமண போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் நடிகை பூர்ணா பகிர்ந்துள்ளார்.

HIGHLIGHTS

அப்பாடா....நடிகை பூர்ணாவுக்கு   கல்யாணம் ஆகிடுச்சுங்கோ...டும்..டும்..டும்..
X

சினிமா நடிகை பூர்ணா

actress poorna wedding, actress poorna marriage photos



மணமகள் நடிகை பூரணாவின் கையைப்பிடித்து அழைத்து வரும் உறவினர்கள்

actress poorna wedding, actress poorna marriage photos

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிரு என்று சொல்வாங்க...ஆமாங்க...வாழ்க்கை முழுவதும் வாழ்க்கைத் துணையோடுதான் சந்தோஷமா வாழப்போறோம்.. அது ஆயிரங்காலத்துக்கும் தொடர்ந்தா சந்தோஷம்தானுங்க...

அந்த வகையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கல்யாணம் என்பது முக்கியமானதுங்க... நாம் வாழும் வாழ்க்கைக்கு அதுதாங்க அர்த்தம். அதாவது வாழ்க்கைன்றது சினிமா மாதிரிங்க.. திருமணத்திற்கு முன்புஒரு வாழ்க்கை... மணமாகிய பின்னர் ஒரு வாழ்க்கை இதுதாங்க... இதில் ஒரு சிலருக்கு முன்பாதி பிரச்னையில்லாம போயிடும் பின்னாடிதான் பிரச்னைகள் ஆரம்பமாகும்.ஒரு சிலருக்கோ முன்பாதியில் பிரச்னைகளை அதிகம் சந்தித்தவர்கள் மணமான பின் அப்பிரச்னைகள் ஓய்ந்து நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஒவ்வொன்றும் அவரவர்களுக்கு அமையும் கணவன், மனைவியினைப்பொறுத்தது என்று கூட சொல்லலாம்.

அந்த வகையில் சினிமா நடிகையான ஷம்னா காசிம்மின் திருமணம் அண்மையில் நடந்தது. இதற்காக பல்வேறு வகையான போட்டோ ஷீட் எடுத்து அவர் இணையத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது. சரிங்க யார் இந்த ஷம்னா காசிம் அவரைப்பற்றி பார்த்துவிடலாமா?இவர் கேரள மாநிலத்தினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷம்னா காசிம். முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு , கந்தகோட்டை, துரோகி, ஆடு,புலி,தலைவி ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.தெலுங்கு மற்றும் மலையாளப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது பள்ளிப்படிப்பு அனைத்தும் கேரளாவில்தான். இவர் பெற்றோருக்கு 5 வது குழந்தையாக பிறந்தவர்.பள்ளிப்படிப்பை முடித்த இவர் பின்னர் அஞ்சல்வழிக்கல்வி மூலம் தனது பட்டப்படிப்பை முடித்தார். கொச்சி நகரத்தில் வசித்து வரும் இவர் ஒருபேட்டியின் போது மலையாள திரையுலகில் தனது காட்பாதர் மோகன்லால் என குறிப்பிட்டுள்ளார்.

actress poorna wedding, actress poorna marriage photos


இருவீட்டாரின் உறவுகளோடு மணமகள் நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர்.

actress poorna wedding, actress poorna marriage photos

2010 ம் ஆண்டின் மையப்பகுதியில் பூர்ணா தொடர்ச்சியாக நடித்து வந்தார். இவரை தெலுங்கு படங்களின் பேய்ராணி என்று முத்திரை குத்தினர். பேய் கேரக்டரில் நடித்ததால் பல பரிசுகளும் இவருக்கு கிட்டியது. ஆனால் 2017 ம் ஆண்டு நடித்த கொடிவீரன் படமானது இவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் நடித்துள்ள சினிமாக்களின்பெயர்கள் தெரியுமா? முனியாண்டி விலங்கியல், கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த நடிகை பூர்ணாவுக்கு துபாயில் திருமணம் நடந்துள்ளதாகவும் அவரது குடும்பத்தாருடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

அப்பாடா கல்யாணமாயிடுச்சு....

பூர்ணா என்ற ஷாம்னா காசிமின் திருமணமானதுகோலாகலமாக நடந்த நிலையில் அதன் போட்டோக்களை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளதால் அவரது ரசிகர்கள் இவரது திருமணத்தினைப் பற்றிய வதந்தியை விட்டுவிட்டனர்.சில மாதங்களுக்கு முன்பாக துபாயைச் சேர்ந்த தொழில் அதிபருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திடீரென திருமண முயற்சி கைவிடப்பட்டதாகவும் வதந்தி அப்போது பரவியதால்ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் அப்போதே இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை அப்போது பகிர்ந்து முற்றுப்புள்ளி வைத்தாலும் தற்போது திருமணமே துபாயில் நடந்து முடிந்துவிட்ட நிலையில் மாப்பிள்ளை, அவரது குடும்பத்தாரோடு எடுக்கப்பட்ட பல போட்டோக்களை வெளியிட்டு ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

actress poorna wedding, actress poorna marriage photos


நடிகை பூர்ணாவின் கழுத்தில் மாலையிடும் அவரது கணவர்

33 வயதில் திருமணம்

இஸ்லாமிய முறைப்படி நடிகை பூர்ணா என்கிற ஷாம்னா கசீம் மற்றும் ஷானித் ஆசிஃப் அலியின் திருமணம் இஸ்லாமிய முறைப்படி துபாயில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது கணவரோடு மாலையும் கழுத்துமாக உள்ள போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

மேலும் அந்த போட்டோக்களின் கீழே போட்ட பட விளக்கத்தில் நான் ஒன்றும் அவ்வளவு அழகு கிடையாது உன்னோடு இருக்கும்போது எனக்கு எந்த குறையும்இல்லாதவளாக தெரிகிறேன் என போட்டுள்ளார்.

actress poorna wedding, actress poorna marriage photos


மாலையும் கழுத்துமாக மணமகள் நடிகை பூர்ணா மற்றும் அவரது கணவர். இடது படம் மணமேடைக்கு அழைத்துவரப்படும் நடிகை.

actress poorna wedding, actress poorna marriage photos

குவியும் வாழ்த்துகள்

நடிகை பூர்ணாவின் திருமண போட்டோக்களைப்பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரொம்ப ஹேப்பியா இருக்கீங்க பூர்ணா இப்படியே எப்போதும் கணவருடன் மகிழ்ச்சியாக இருக்க எங்களுடைய மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள் என ரசிகர்கள் பதிலுக்கு பதிவிட்டு வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 Oct 2022 10:50 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!