/* */

9 மாத குழந்தைக்கு என்னென்ன புதிய உணவுகளை தரலாம்..? தெரிஞ்சிக்குங்க..!

9th Month Baby Food in Tamil-குழந்தை பெற்றால் மட்டும் போதுமா..? அதை வளர்த்து எடுப்பதுதான் பெரும்பாடு. எப்படி வளர்க்கலாம்..? வாங்க தெரிஞ்சிக்குவோம்.

HIGHLIGHTS

9 மாத குழந்தைக்கு என்னென்ன புதிய உணவுகளை தரலாம்..? தெரிஞ்சிக்குங்க..!
X

9 month baby food in tamil-ஒன்பது மாத குழந்தைக்கு வழங்கப்படவேண்டிய உணவுகள் (கோப்பு படம்)

9th Month Baby Food in Tamil-குழந்தை வளர்ப்பு என்பது ஒரு அனுபவப்பாடம். ஆனால் தற்போது குழந்தை வளர்ப்பு ஒரு பாடமாகவே உள்ளது. அந்த அளவுக்கு குழந்தை வளர்ப்பு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது. குழந்தைக்கு என்னென்ன உணவு எந்த நேரத்தில் கொடுக்கவேண்டும்? சமச்சீராக வழங்குவது எப்படி? குழந்தையை எப்படி சாப்பிட வைப்பது? என்று பல நுணுக்கங்களை இந்த படிப்பு கற்றுத்தருகிறது. (ஆமா..இப்படி கத்துக்கிட்டா நம்மளை நம்ம அம்மா அப்பா வளத்தாங்க..என்று நீங்கள் மனதுக்குள் நினைப்பது தெரிகிறது.)

இருப்பினும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப உணவு மாற்றங்கள் குழந்தைகளுக்கு அவசியம். அவர்கள் உடல் ஆரோக்யம் மற்றும் அறிவு ரீதியாகவும் முதிர்ச்சி பெற்றவர்களாக வளர இந்த உணவு முறை அவசியம். அதை இன்றைய இளைய அம்மாக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

குழந்தை பராமரிப்பு

9 மாத குழந்தைக்கு, உணவு ஊட்டுவது என்பது சாதாரண காரியம் அல்ல. அது தாய்க்கு முதல் சவாலாக இருக்கும். இந்த காலத்தில் குழந்தைகள் விளையாடவே விரும்புவார்கள். உணவில் கவனம் செலுத்தமாட்டார்கள். அதுவும் நமக்கு போர் அடிக்கும் விளையாட்டில்தான் குழந்தைகளுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.

இந்த காலகட்டத்தில் கொஞ்சம் பெரிய குழந்தையாக தெரிவார்கள். பற்களும் நன்றாக வளர்ந்து இருக்கும். அவர்களுக்கு என்னென்ன உணவுகள் தரலாம் என்பதை இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.

பற்கள் வளர்ந்து கொண்டிருப்பதால் உங்கள் குழந்தைக்கு, எரிச்சல் உணர்வைத் தரக் கூடும். அவர்களுக்கு சாப்பிடவும் பிடிக்காது. பசி எடுக்கும் உணர்வும் அவ்வளவாக இருக்காது. குழந்தையை சாப்பிட வைக்க அழகாக அலங்கரித்து வைப்பதும், சுவையாக உணவைத் தயாரித்து வைத்திருப்பதும், குழந்தை சாப்பிடும் படி பக்குவமாக சமைத்து வைத்திருப்பதும் முக்கியம்.

குழந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப உணவைக் கொடுப்பதும், அதை தயார் செய்வதிலும் அம்மாக்களே நீங்கள் கவனம் செலுத்துங்கள். கூடவே இந்த கட்டுரையில் குழந்தைகளுக்கான உணவு அட்டவணையும் தரப்பட்டுளளது.

குழந்தைகளுக்கு இந்த 9 மாதத்தில் என்னென்ன உணவுகளை அறிமுகப்படுத்தலாம்?

  • தர்பூசணி
  • குடமிளகாய்
  • டர்னிப்
  • பனீர்
  • பிரெட் ஸ்டிக்ஸ்
  • பராத்தா – சிறிய துண்டுகள்
  • வேக வைத்த உருளைக்கிழங்கு
  • வேக வைத்த பீட்ரூட்
  • நன்கு வேக வைத்த கேரட் துண்டுகள்


நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் :-

  • விதவிதமான உணவுகளைக் கொடுத்து பழக்குங்கள்.
  • ப்யூரி, கூழ்ம வகை உணவுகளை நிறுத்திவிடுங்கள்.
  • அவர்களே கையில் எடுத்து சாப்பிடத் தொடங்கி விட்டால் கூழ்ம உணவுகள் தேவையில்லை.
  • தாய்ப்பால் கொடுப்பதைத் தொடருங்கள். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கொடுப்பது நல்லது.
  • இந்திய மசாலா வகைகளை ஒவ்வொன்றாக சேர்க்கலாம். குறைந்த அளவில் உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.
  • பெரியவர்கள் சாப்பிடும்போது அந்த உணவுகளை குழந்தைகளும் சாப்பிட விரும்புவார்கள். அதைக்கேட்டு அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு சிறிதளவு கொடுத்துப் பழக்கலாம்.
  • ஸ்பூனால் அல்லது கையால் குழந்தை தானாக சாப்பிட விரும்பினால் அனுமதியுங்கள்.
  • தனியாக குழந்தை சாப்பிட விரும்பினால், குழந்தைக்கு உணவு கொடுக்கலாம். ஆனால், குழந்தை சரியாக சாப்பிடுகிறதா புரை ஏறுகிறதா எனக் கவனிப்பது அவசியம்.
  • கட்டாயப்படுத்தி குழந்தைக்கு ஊட்ட வேண்டாம். பசி வந்ததும் குழந்தைகளே சாப்பிட ஆரம்பிக்கும்.
  • உணவு கொடுக்கும்போது கதைகள் சொல்வது, சிறு சிறு விளையாட்டுகளை விளையாடுவது என செய்யலாம்.
  • அளவான உணவைக் கொடுத்து பழக்கலாம்.
  • அவ்வபோது பசி எடுத்தாலும் இடை இடையே உணவைத் தரலாம்.
  • புதிய உணவு கொடுக்கும் போது, 3 நாள் விதியைப் பின்பற்றுங்கள். உடனுக்கு உடன் கொடுக்க வேண்டாம். அதாவது 3 நாட்களுக்கு சிறிதளவு புதிய உணவைக் கொடுத்து பழக்கம் ஏற்படுத்தி பின்னர் தொடர்வது.

பனீர் பராத்தா

தேவையான பொருட்கள்

ஹோம்மேட் பனீர் – ¼ கப்

கோதுமை மாவு – 250 கிராம்

நெய் – தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவை தண்ணீர் விட்டு பிசைந்து, 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

சிறிதளவு மாவை எடுத்து பராத்தாவாக திரட்டி அதில் துருவிய பனீரை வைத்து, ரோல் செய்து மீண்டும் திரட்டவும்.

தவாவில் பராத்தாவை போட்டு நெய் ஊற்றி சுடவும்.

நன்கு வெந்தவுடன் எடுத்து விட வேண்டும். இதை குழந்தைகளுக்கு சிறு சிறு துண்டுகளாக கொடுக்கலாம்.

ஆப்பிள் டர்னிப் சாலட்

தேவையான பொருட்கள்

மெல்லிதாக அரிந்த ஆப்பிள் – 1

மெல்லிதாக அரிந்த டர்னிப் – 1

கொத்தமல்லி தழை நறுக்கியது – சிறிதளவு

ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

10 நிமிடங்களுக்கு ஆப்பிள், டர்னிப்பை வேக வைக்க வேண்டும்.

வெந்ததும் ஆறவிடவும். பெரிய பவுலில் போட்டு ஆலிவ் எண்ணெய் ஊற்றி, சிறிதளவு கொத்தமல்லி தூவி தரவும்.

சர்க்கரைவள்ளி கிழங்கு அரிசி கஞ்சி

தேவையான பொருட்கள்

அரிசி – 1 கப்

சர்க்கரைவள்ளி கிழங்கு – 2

தண்ணீர் – 3 கப்

தாய்ப்பால் / ஃபார்முலா மில்க் – 1 கப்

செய்முறை

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அரிசியை அதில் போட்டு வேக வைக்கவும். பாதி வெந்ததும், சர்க்கரைவள்ளி கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக அறிந்து அரிசி பாத்திரத்திலே போடவும். தண்ணீர் தேவைப்பட்டால் கூடுதலாக சேர்க்கவும்.

மிதமாத தீயிலே அரிசியும் கிழங்கும் வேக வேண்டும். நன்றாக வெந்ததும் ஆற வைத்துவிட்டு அதில் தாய்ப்பால் / ஃபார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 March 2024 7:17 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  2. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  7. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்